சென்ற இதழில் அடர் தீவனம் மற்றும் உலர் தீவனம் பற்றி அறிந்து கொண்டோம். மூன்றாவதாக, பசுந்தீவனம் - மாடுகளின் உணவில் மிகவும் முக்கியமானது. மாடுகளுக்கு தேவையான எல்லா ஊட்டச் சத்துக்க்களையும் அளிக்க வல்லது. இதை இரண்டு வகையாக அளிக்கலாம். ஒன்று, மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவது, மற்றொன்று தீவனப் புற்களை விளைய வைத்து வெட்டி அளிப்பது. மேய வைப்பது மிகச் சிறந்தது. மாடுகளுக்கு உடற் பயிற்சியும் தானாக கிடைக்கும். மாட்டுக் கொட்டகையும் பகல் நேரத்தில் சாணி, கோமியம் ஆகியவை விழாமல் உலர்ந்து இரவில் மாடு படுக்கவும், நோய் பரவாமல் இருக்கவும் ஏதுவாக இருக்கும். கட்டுத்தறியில் மட்டுமே உள்ள மாடுகளுக்கு உடற்பயிற்சியும் கிடைக்காது, சூரிய ஒளியும் கிடைக்காது, திறந்த வெளிக் காற்றும் கிடைக்காது. இதனால், உடல் நலம் பாதிக்கும். மேலும், மாடுகளுக்கும் கணிணி மென் பொருள் கழகங்களில் வேலை செய்யும் மனிதர்களைப் போல் உடற்பருமன் அதிகமாகி, (obesity) அதனால் பல உடல் நலக் கேடுகள் விளையும். சினை பிடிப்பதற்கும் தாமதமாகும். எனவே, நமது முக்கிய குறிக்கோளான மாடு உற்பத்தி பாதிக்கப்படும். எனவே, மேய்ப்பது என்பது இன்றியமையாதது.
- 01. தலையங்கம்
- 02. மாடல்ல மற்றையவை - ஜெய்சங்கர்
- 03. உழவர்களின் சிக்கல் - பாமயன்
- 04. அடிசில் பார்வை - அனந்து
- 05. செவிக்கு உணவு இல்லாத போது - தினை -மிளகு அடை
- 06. உழவன் விடுதலையும் சிறு தொழில்களும் - உழவன் பாலா
- 07. புதிய புலவர்கள் - 06 - பாபுஜி
08. வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி - 09. உணவும் உரிமையும் - சரா
- 10. குமரப்பாவிடம் கேட்போம்