தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

குமரப்பாவிடம் கேட்போம்

வேளாண்மையும் கிராமத் தொழில்களும்

(ஊரக வளார்ச்சிக்கு ஒரு ஒட்டு மொத்தத் திட்டம் - An Overall Plan for Rural Development - என்ற குமரப்பாவின் அறிக்கையிலிருந்து. 1946ல் பூனாவில் மந்திரிகளின் கூட்டம் ஒன்றில் அவர் அளித்த பேச்சில் இருந்து தொகுத்தது இவ்வறிக்கை). இத்தலைப்பில் நாம் கிராமப் பொருளாதாரத்தைப் பற்றிப் பேசுகிறோம். இது ஒரு பெரிய, அகன்ற தலைப்பு. கிராமப் பொருளாதாரத்திற்கு வேளாண்மையே அடித்தளம்; வேளாண்மை என்பதில் கால்நடை வளர்ப்பும் அடங்கும்.

முழுக் கட்டுரை »

தலையங்கம்

நம்நாட்டில் மன்சான்டோவின் பி.டி கத்தரியை உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம் அனுமதித்ததும், அதை எதிர்த்துப் பல பொது மக்களும், தன்னார்வலர்களும் ,விஞ்ஞானிகளும், தொண்டு நிறுவனங்களும் நாடெங்கும் பொங்கி எழுந்து எதிர்ப்புத் தெரிவித்ததும் அதன் பின் வேறு வழியின்றி அத்தொழில்நுட்பத்திற்கு அரசு தாற்காலிகத் தடை விதித்ததும் நாம் அனைவரும் அறிவோம்.உச்ச நீதிமன்றத்தில் அருணா ரோடெரிகுவஸ் தொடுத்த பொது நல வழக்காலும், அதற்கெனக் கடுமையாக உழைத்து வரும் வந்தனா சிவா, தேவீந்தர் சர்மா, கவிதா குருகண்டி, சிரீதர் ராதாகிருட்டிணன் போன்றோராலும் இன்றுவரை மன்சான்டோவால் உணவுப் பொருட்களில் மரபீனி மாற்றுத் தொழில்நுட்பத்தைப் புகுத்த முடியவில்லை. இப்போது முன்வாசலில் நுழைய முடியாத திருடன், எல்லோரும் அசந்த நேரத்தில், கொல்லைப்புறத்தில் கன்னம் வைக்க முயல்வதுபோல் மன்சான்டோ ஒரு சகுனித்தனமான வேலை செய்து விட்டது. ஆம், நம் அண்டை நாடான வங்க தேசத்தில் பி.டி கத்தரிக்கு அனுமதி வாங்கி அங்கே விதை விற்பனையில் இறங்கத் தொடங்கிவிட்டது. இத‌னால் நமக்கென்ன பாதிப்பு என்றால், வங்க தேசத்துடன் நில வழி எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மேற்கு வங்கம்தான் நம் நாட்டின் மிகப்பெரிய கத்தரி உற்பத்தி மாநிலம். என்ன ஒரு நூதனமான சூழ்ச்சி!

மேலும் படிக்க...»

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org