புதிய புலவர்கள் - பாபுஜி
புதிய புலவர்கள் வரிசையில் இந்த இதழில் மெனாஃப்ளக்ஸ் (Menaflex) என்னும் ஒரு பயனற்ற மருத்துவக் கருவியை ஒரு அமெரிக்க நிறுவனம் எவ்வாறு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (FDA) உறுதியான சட்ட திட்டங்களையும் தாண்டி சந்தைக்கு கொண்டு வந்தது, வெறும் 26,000 அமெரிக்க டாலர்கள் செலவில் அரசியல்வாதிகளின் ஆசியை எப்படிப் பெற்றது, என்பதையும் அதன் பின்னர் என்ன நடந்தது என்பதையும் காண்போம்.
செப்டம்பர் 24 2009 அன்று FDA ஒரு அதிர்ச்சிமிக்க செய்தியை வெளியிட்டது. அது நியூ ஜெர்சியைச் சேர்ந்த நான்கு அரசியல்வாதிகளும் FDAவின் முன்னாள் தலைவரும் ஒன்று சேர்ந்து மெனாஃப்ளக்ஸ் என்கிற மாற்று மூட்டு சவ்வு (artificial knee cartilage) கருவியை (அது பலனற்றது என்று தெரிந்தும்) ரீஜென் (Regen) என்கிற நிறுவனத்தின் சார்பாக அதை சந்தைக்கு கொண்டு வருவதில் FDAவிற்க்கு எவ்வாறு வற்புறுத்தல் கொடுத்து அதன் கடுமையான கட்டுப்பாடுகளை வளைத்து தம் விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டனர் என்பதையும் இப்போது FDA தான் தந்த அனுமதியை தானே மறு பரிசீலனை செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தது.