தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உழவை வெல்வது எப்படி


58 வயதான திரு. பசுமை வெங்கடாசலம் அவர்கள் ஈரோடு மாவட்டம், பவானி அம்மாப்பேட்டைக்காரர். 2 ஏக்கர் விவசாயப்பரப்பில் உழவாமை செய்துவருகிறார். நண்பர்களோடு இணைந்தது அவர்களின் பண்ணைகளை உழவாமைக்கு மாற்றியுள்ளார். இந்தப்பணியை இன்றும் தொடர்கிறார். தன் சொந்தப்பண்ணையில் (முத்துப்பண்ணை என்று பெயர்) ஆர்வலர்களுக்கு களப்பணி அளித்து வருகிறார். உயிரியல் கட்டுப்பாடு மையம் நடத்தி அதனை நண்பர்கள் வசம் விட்டுவிட்டு கடந்த 6 ஆண்டுகளாக முழு நேர விவசாயம் செய்து வருகிறார்.

உழந்தும் உழவே தலை என்று வள்ளுவர் சொன்னது போல, உழவு என்ற சொல்லுக்கு மிகுந்த மெய்வருத்தல் என்ற பொருள் உண்டு. உழவன் உழவாது (கஷ்டப்படாது) இருக்க வேண்டும் - அதனால்தான் உழவை வெல்வது எப்படி என்று திரு.வெங்கிடாசலம் தலைப்பு இட்டுள்ளார்.

முழுக் கட்டுரை »

மாடல்ல மற்றையவை - ஜெய்சங்கர்


இந்த மாதம் தொற்று வியாதிகள் பற்றி தெரிந்து கொள்ளலாமா! தொற்று வியாதிகள் சுத்தமான, சிறந்த பராமரிப்பும், கவனிப்பும் உள்ள கொட்டகையை “பெரும்பாலும்” அண்டுவதில்லை. ஆனால், ஆரோக்கியமான, எதிர்ப்பு சக்தி நிறைந்த பசுக்களை தொற்று வியாதிகள் “எப்போதும்” பீடிப்பதேயில்லை. இயற்கைச் சூழலில், இயன்றவரை இயற்கை உணவை உண்டு வாழும் நாட்டு பசுக்களுக்கு தடுப்பு ஊசி போன்ற பராமரிப்பு ஏதும் இன்றியே தொற்று நோய்கள் வராமல் இருப்பதை நானும் பார்த்திருக்கிறேன். பிறர் சொல்லியும் கேட்டிருக்கிறேன். இருந்தாலும், உங்கள் பண்ணையில் உள்ள பசுக்களுக்கு தொற்று வியாதிகள் வந்து விட்டால் என்ன செய்வது? முதலில் தொற்றும் நோய் கண்ட மாட்டை அல்லது மாடுகளை தனியாக பிரித்து (முடிந்தவரை மற்ற மாடுகள் உள்ள தொழுவத்திற்கு வெளியே) கட்டவும். பல சமயம் கிருமிகள் கோமியத்தின் முலமும் சாணியின் மூலமும் கூட பரவ வாய்ப்புள்ளது. எனவே, அவசியமானால் நோய் கண்ட மாடுகளின் சாணம், கோமியம் ஆகியவற்றை குழி தோண்டி புதைத்து விடவும். மேய்க்க அனுப்பும் போதும் அவற்றை தனியாகவே கட்டவும். தண்ணீர் மற்றும் தீவனம் அளிப்பதும் அப்படியே. சில தொற்று வியாதிகள் வேகமாக பரவக் கூடியவை, சில மெதுவாக பரவக் கூடியவை. எப்படி இருந்தாலும் தொற்று நோய்களுக்கு சரியான சிகிச்சை, உரிய நேரத்தில் அளிக்காவிட்டால் மாடுகள் இறக்கும் வாய்ப்பு அதிகம்.

முழுக் கட்டுரை »

அடிசில் பார்வை - அனந்து


அரிசி - இதன் முக்கியத்துவத்தைக் கூறவும் வேண்டுமோ? உணவு மட்டுமில்லாமல் திருமணம், பிறந்த குழந்தைக்கு பெயரிடு விழா, வாழ்த்துக் கூற அட்ச‌தையாக, ஏன் நமது கடைசிப் பயணத்திற்கு வாய்க்கு அரிசியாக, என்று அரிசி நம் கலாசாரத்தையே பிண்ணிப்பிணைந்து பெரும் பங்குடன் இருக்கும் ஒரு அரிய தானியம். கருவறை தொடங்கிக் கல்லறை வரையில் நம்முடன் பயணிக்கும் ஒரு நல்ல நண்பன்.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org