தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நம்மாழ்வார் ஐயாவின் நினைவேந்தல்


நம்மாழ்வார் ஐயாவின் நினைவேந்தல், சென்னையில் காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியில் சனவரி 5 நிகழ்த்தப்பட்டது. இது சென்னையில் உள்ள இயற்கை ஆர்வலர்கள்/நண்பர்களால் நடத்தப் பட்ட‌து. சிவா, ஜகதீஷ், கோபி, கலை, கமல் போன்ற இளைஞர்களின் ஆர்வம் மற்றும் உழைப்பால் நடந்தேறியது. இந்த நிகழ்ச்சி வாய் வார்த்தையாகவும் மின் அஞ்ச‌லில் மட்டுமே அறியப்பட்ட மக்கள் பெரும் திரளாக வந்து சிறப்பித்தனர். அதில் பெரும்பான்மை யானவர்கள் இளைஞர்களாக இருந்தது, ஐயாவின் சமீபத்திய தாக்கம் இளைஞர்கள் மீது பெரும் அளவில் இருந்ததை நிரூபித்தது. வந்திருந்த அனைத்து முதியவர்களும் இதனை ஒரு பெரும் எதிர்கால நம்பிக்கையாக பார்த்தனர்.

நமது தாளாண்மையின் சார்பாக ராம் மற்றும் அனந்து கலந்துகொண்டனர். அனந்து "இதற்கு வந்திருந்த அனைத்து இளைஞர்களும் மிக அருமையாகவும் நம்பிக்கையூட்டும் விதமாகவும் பேசியது ஐயாவின் தாக்கத்தையும் இவர்கள் தான் அவரது விதைகள் என்றும் நிரூபிக்கிற‌து. இவர்கள் தான் நமக்கெல்லாம் நம்பிக்கை நட்சத்திரங்கள்." என்றார். மேலும் தமிழக அரசு இப்பொழுதேனும் ஐயாவின் நினைவாக, இன்னும் வேகத்துடன் செயல்பட்டு கேரளம், மத்திய பிரதேசம், சிக்கிம் போன்ற மா நிலங்களை போல நமது மாநிலத்திற்கான உயிர்ம/இயற்கை வேளாண்மை திட்டம் ( organic farming policy) கொண்டு வர வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க...»

செவிக்கு உணவு இல்லாத போது


முற்காலத்தில் நம் முன்னோர் அதிகம் பயன்படுத்திய சத்து மிகு தானியம் கம்பு (நாட்டு கம்பு). கம்பில் புரொட்டின் சத்து உள்ளது. தானிய வகைகளில் (அரிசி, கோதுமையும் சேர்த்து) விட்டமின் 'A' மற்றும் folic acid அதிகம் உள்ளது கம்பில் தான். கம்பில் இரும்பு சத்தும், பீட்டா கரோட்டீன் சத்தும் அதிகம் உள்ளது. இது நம் உடம்பு பீட்டா கரோட்டீனை, விட்டமின் 'A' சத்தாக மாற்றும். எனவே பீட்டா கரோட்டீனை, விட்டமின் 'A' க்கான ஆதாரம் எனலாம். நம் தோல் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், கூர்மையான பார்வைக்கும் விட்டமின் 'A' அவசியம். நார்ச் சத்து, விட்டமின் 'B', விட்டமின் 'E', கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்தும் கம்பில் அதிகம். கொழுப்பைக் கரைக்கக் கூடியது.

மேலும் படிக்க...»

 

களவு போகும் கானகச் செல்வம் - ராம்


செஞ்சந்தன மரம்…உலகமயமாக்கலின் 'உபயத்தால்' நம் நாட்டவர்கள் ஒருவரை ஒருவர் மாய்த்துகொள்ள தூண்டும் ஒரு கொள்ளையின் கதை! செஞ்சந்தன மரத்தை கடத்திகொண்டிருந்த கடத்தல்காரர்கள் சிலர், ஆந்திர மாநிலத்தின் வன அலுவலர்கள் இருவரை கொலை செய்துள்ளதாகவும், மற்றொருவரை பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆந்திர மாநில முதல்வர், இந்த கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க உத்தரவிட்டு தனிப்படை அமைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org