தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி


மாங்குயில்

Indian Golden Oriole என்று ஆங்கிலத்திலும், Oriolus kundoo என்று விஞ்ஞானிகளாலும் அழைக்கப்படும் இப்பறவை தங்க நிறத்தில் வானத்தில் ஒரு நவரத்தினம் ஜொலிப்பதுபோல் பறந்து கண்ணைப் பறிக்கும். இதனைத் தங்கப் பறவை என்றும் அழைப்பர்.

காணுமிடம்:

இந்தியத் துணைக்கண்டத்திலும், மத்திய ஆசியாவிலும் இதனைக் காணலாம்.இந்தியாவில் சிறிய காட்டுப்புதர்களில், தோட்டங்களில், வயல்களில் உள்ள மூங்கில் காடுகளில், பூங்காவில் இவற்றைக் காணலாம். புங்க மரத்திலும், வேப்ப மரத்திலும் அதிகமாக ஆடிப்பாடும்.

தோற்றம்:

தங்கம் போல் மஞ்சள் நிறத்தில் இருக்கும். கண்ணில் அழகிய மைதீட்டிய கேரள நாட்டுக் கதக்களி நடனக் கலைஞர் போல் கருமை நிறத்தில் இருக்கும். மிக அழகிய வடிவமும் இனிமையான குரலும் கொண்டவை இவை. ஆண் பறவையின் அழகு பெண் பற்வைக்கு இருக்காது. பல நாடுகளுக்குப் பயணம் செய்யக் கூடியது.

உணவு

பெரும்பாலும் பூவிலுள்ள மகரந்தம்/தேன், பழங்கள், பூச்சிகள் போன்றவற்றை உண்ணும்.

இனப்பெருக்கம்

சித்திரை முதல் ஆடி வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடும். ஆண்டில் ஒரு முறைதான் குஞ்சு பொரிக்கும். ஆண், பெண் இரண்டும் அடை காப்பதிலும், குஞ்சுகளின் பராமரிப்பிலும் ஈடுபடும். கரிக்குருவியின் கூட்டின் அருகில் கூடு கட்டவிழையும் , ஏனெனில் தன் கூட்டைக் காப்பதில் கரிக்குருவி மிகுந்த வீரமுடையது.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org