உழவர் விடுதலைப் பேரணி - அனந்து


ஏப்ரல் 1-3 ஹைதராபாதில் ஆஷா அமைப்பின் ( நிலைத்த நீடித்த வேளாண்மைகான கூட்டமைப்பின்) உழவர் விடுதலைப் பேரணி நடைபெற்றது. இதில் 25 மாநிலங்களிலிருந்து 600க்கும் மேற்பட்டோர் - விவசாயப்பெருமக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாய குழுக்கள்/தலைவர்கள், மக்கள் இயக்கங்கள்- கலந்து கொண்டனர். விவசாயம் நலிவடைந்து, பெரும் சிக்கல்களைச் (விவசாயிகள் தற்கொலை, வற‌ட்சி, நீர் இன்மை, மண் மலடாவது, நிலத்தடி நீர் பிரச்சினை, கடன் தொல்லை, பன்மையம் தொலைதல் என பலவற்றை) சந்தித்து வரும் வேளையில் சரியான தருணத்தில் நடத்தப்பட்ட ஒரு பெரும் பேரணியாக இது அமைந்தது.

இதில் நாடு முழுவதிலிருந்தும் விதை சேமிக்கும் வித்தகர்கள் வந்திருந்து தத்தமது பாரம்பரிய விதைப் பன்மையத்தை வெளிக்காட்டும் விதமாக பல அரங்கங்கள் அமைத்திருந்தனர். மேலும் பல்வேறு இயற்கைப் பொருட்கள், மதிப்புக் கூட்டப்பட்ட உணவுபொருட்கள், துலா இயற்கைப் பருத்திக் கதர் ஆடைகள், எனப் பலவும் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டன.

இந்த 3 நாட்களில் தேவிந்தர் ச‌ர்மா, மேதா பட்கர், கிளாட் அல்வாரிஸ், சுபாஷ் ச‌ர்மா, விதை வித்தகர் தேபல் தேப், தூரன் நம்பி, மு.சுனீலம், அஃப்சர் ஜாஃப்ரி, ஷாலினி புடானி, மற்றும் பல்வேறு விவசாயத் தலைவர்களும் கலந்து கொண்டனர். ஆஷாவின் முக்கியப் புள்ளிகளும் 25 மாநிலங்களிலிருந்தும் பங்கேற்றனர். இவர்கள் தனித்தனிக் குழுக்களாகவும், அனைவரும் சேர்ந்து கலந்தாய்ந்தும் ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டது. அதனையே அரசாங்கதிற்க்கும் கோரிக்கையாக அளிக்கப்பட்டது.

முழுக் கட்டுரை »

நம்மிடையே உள்ள நாயகர்கள் - செம்மல்


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமம், கறுத்த பிள்ளையூர். அங்குள்ள நடு நிலைப் பள்ளியில் “என்னைக் கவர்ந்த தலைவர்” என்ற தலைப்பில் ஒரு சொற்போர். ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர் அன்னை தெரேசா அவர்களைப் பற்றி பேச முடிவெடுக்கிறார். போட்டியில் சிறப்பாகப் பேச வேண்டுமென்ற ஆர்வத்தில் அன்னை தெரேசாவைப் பற்றிய செய்திகளை விரிவாக படிக்கிறார் அப்பெண். அன்னையாரது மகத்தான சேவைகளைப் பற்றி அறிய அறிய, போட்டியில் ஆர்வம் குறைந்து, அப்பெண்ணின் சிந்தையில் பிறர்க்காக வாழும் வாழ்க்கையின் சிற்ப்பு ஆழமாக வேரூன்றுகிறது.

“மனத்தில் வாழ்வின் நோக்கமே புரிபடுவதாய் ஒரு உணர்வு. அப்போது தான் என் முதல் அற வழிப்பாதைப் பயணம் தொடங்கியது” என்கிறார், நம் இம்மாத நாயகி இராணி.

இராணி அவர்கள், நம் தாளாண்மை தற்சார்பு இயக்கத்தின் அங்கத்தினர். நம்மில் பலருக்கு கூட்டங்களில் ஏற்படும் சந்த்திப்புகள் மூலமாய் அறிமுகமானவர். அவருடன் உரையாடுகையில் மிகுந்த அடக்கத்துடனும் எளிமையாகவும் தன்னை முன் நிறுத்தாமல், மற்ற நண்பர்களின் சிறந்த செய்கைகளையும் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையும் பற்றியே பெரும்பாலும் பேசுவார். அவர், திருநெல்வெலி மாவட்டத்தில் பல இயற்கை விவசாய முன்னடைவு செயல்களை எந்த ஆரவாரமுமின்றி செய்து வருகிறார்.

இராணியிடம், அவரது இயற்கை விவசாயப் பணிகளைப் பற்றிக் கேட்டோம். அவர் தாம் இன்னும் முதல் படியிலேயே இருப்பதாகக் கூறினார். இப்பொழுது தான் நண்பர் பாமயன் மற்றும் தாளாண்மை உறுப்பினர்களிடமிருந்து தாம் கற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

எனினும் அவருடன் உரையாடுகையில் அவருக்கு வேளாண்மையின் பல உத்திகளில் நுண்ணிய அறிவு இருப்பதை நம்மால் நன்கு உணர முடிகிறது. அவரை இயற்கை வேளாண்மை ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது என்று வினவினோம். அவர் வாழ்வின் அற வழிகளில் மிக அடிப்படையானது இதுவே என்று தாம் நாளடைவில் கண்டு கொண்டதாகக் கூறினார்.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org