தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உழந்தும் உழவே தலை - ஜெயக்குமார்


உழவு தோற்கும் தொழில் என்று பலரும் முடிவு கட்டிவிட்ட வேளையில், உழவைத் தொழிலாக விரும்பி ஏற்றுக்கொண்டு அதில் இயற்கையாய் வென்று காட்டிக் கொண்டிருக்கும் சாதனையாளர்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் தாளாண்மை ஈடுபட்டுள்ளது. அவ்வரிசையில் இவ்விதழில் 37 வருடங்களாக இயற்கை வேளாண்மையை வெற்றிகரமாகச் செய்து வரும் திரு. ராஜசேகரை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா, வேட்டைகாரனிருப்பு என்ற கிராமத்தில் திரு.ராஜசேகர் என்பவர் இந்திய விமானப் படையில் (Indian Air Force) வேலை பார்த்து வந்தார். 1980ல் தனது சொந்த கிராமத்திற்கு வந்து இயற்கை வேளாண்மையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் செம்மையாகச் செய்து கொண்டு இருக்கிறார். தனது சொந்த பண்ணையில் முந்திரி, மா, தென்னை, வாழை, புன்னை போன்ற மர வகைகளையும் கடலை, நெல் போன்ற பயிர்களையும் இயற்கை முறையில் செய்து கொண்டு இருக்கிறார். அதோடு இல்லாமல் அவர் சிறுநீரகக் கல், மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு மூலிகை வைத்தியம் செய்து கொண்டும் இருக்கின்றார்.

முழுக் கட்டுரை »

மாடல்ல மற்றையவை - ஜெய்சங்கர்


சென்ற மாதம் சில சாதாரணமான தொந்தரவுகளுக்கும், உடல் உபாதைகளுக்கும் கை வைத்தியம் என்ன செய்யலாம் என்று பார்த்தோமல்லவா… இந்த மாதம் மேலும் சில சாதாரண தொல்லைகளுக்கு வைத்தியங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

1. இருமல்:

மாடுகளுக்கும் நம்மைப் போல் இருமல் வரும். மாடுகள் இருமும் போது வேகமாக கட்டுப்படுத்த இயலாமல் வாய் வழியாக சத்தத்துடன் மூச்சுக் காற்றை வெளி விடும். இருமல் வர தொற்றும் கிருமிகள் அல்லது சளி, நெஞ்சுக் கூட்டிலோ அல்லது மூச்சுக்காற்று செல்லும் குழலிலோ இருப்பது சாதாரண காரணமாக இருக்கலாம். சில சமயங்களில் இருமல் நெஞ்சில் தங்கும் சில ஒட்டுண்ணிகளாலும் ஏற்படலாம். இருமல் உண்டாகும் மாடுகளில், மூக்கின் வழியாக அல்லது வாய் வழியாக சளி போன்ற திரவம் வெளிப்பட்டால், மூச்சு விடுவதற்கு மாடுகள் சிரமப்படும். மூச்சு விடும் போது அதிகமான சத்தம் வரும். இந்த அறிகுறிகள் இருந்தால்

முழுக் கட்டுரை »

அடிசில் பார்வை - அனந்து


பல ஆண்டுகளுக்கு முன் நான் உணவையும் உற்பத்தியையும் பார்க்க ஆரம்பித்த பொழுது பாலும் அதில் அடங்கும். மிக இயல்பாக‌ நாமெல்லாம் குழந்தைப்பருவம் முதல் உட்கொள்ளும் பால் எப்படி எல்லாம் சீரழிக்கப்படுகிறது என்று பார்க்க நேரிட்டது! உணவில் எப்படி ரசாயனங்களும் அதன் எச்சமும் வந்து பல பிரச்சினைகளை உண்டு பண்ணினவோ அதே அளவு பாலிலும் இருந்தது. மாட்டிற்கு கொடுக்கப்பட்ட துன்பங்களும் தெரிய ஆரம்பித்தன.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org