தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அடிசில் பார்வை - அனந்து


கோதுமைப் பண்டம்

கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டத்தைக் காவிரி வெற்றிலைக்கு பண்ட மாற்றாகப் பாடினான் நம் மீசைக் கவிஞன்.

உலகளவில் சோளம் மற்றும் அரிசியை அடுத்து மிகவும் அதிகமாக விளைவிக்கப்படும் தானியம் கோதுமை ஆகும். 110 முதல் 120 நாட்கள் பயிரான கோதுமை, அரிசியை போன்றே புல் வகையை சார்ந்த‌து. மேலும் இந்த தானியம் அரிசிக்கு அடுத்து மிகவும் அதிகமாக உட்கொள்ளப்படும் பொருளாகும். பாரசீகம் (இன்றைய ஈரான், சிரியா) தான் இதன் பிறப்பிடம். 8000 ஆண்டுகளுக்கு முன்பே அங்கிருந்து மெதுவாக கிரீஸ், இந்தியா, எகிப்து வரை வந்தது. 7000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் அடுமனை (oven) மற்றும் ரொட்டி (bread) செய்யும் வழக்கம் தொடங்கிவிட்டது. பின்னர் கோதுமை 5000 ஆண்டுகளுக்கு முன் தான் இங்கிலாந்து வந்தது.

பின்னர் பசுமைப் புரட்சிக் காலத்தில் மகசூல் வெறியால் குட்டை மற்றும் வீரிய விதைகள் வந்து அவற்றுக்குத் தோதாக வரம்பு முறையற்ற ரசாயனங்களும், அதனால் மிகவும் அதிகமான நீரும், பூச்சிக்கொல்லிகளும் பயன்பாட்டில் வந்து இன்று கோதுமை விளைவிக்கும் இடங்களெல்லாம் அதிக வியாதிகளும், புற்றுநோயும் பெருகி நிலத்தடி நீர் முற்றிலும் அற்று இருக்கின்றன!

முழுக் கட்டுரை »

பனிவரகு மசாலா உருண்டை


பனிவரகு மாவில் உப்பு சேர்த்துக் கலந்து, சூடான தண்ணீர் விட்டுக் கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை கைகளில் எண்ணெய் தொட்டுக் கொண்டு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். உருட்டிய உருண்டைகளை இட்லிப் பானையில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு தாளித்து, சிவந்ததும் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து நன்கு வதங்கியதும் மசாலா பொடி சேர்த்து வேக வைத்த பனிவரகு உருண்டைகளைச் சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லி, தேங்காய்த் துருவல் தூவி நன்கு கிளறிவிட்டு இறக்கவும். பனிவரகு மசாலா உருண்டை தயார். குழந்தைகள் விரும்பி உண்ணும் மாலைச் சிற்றுண்டி. தேவையான வடிவங்களில் உருண்டைகளை வடிவமைக்கலாம். விரைவில் செய்யக்கூடிய சுவையான தானிய உணவு.

முழுக் கட்டுரை »

நாப்பிளக்கப் பொய்யுரைத்து - ராம்


‘நமது குழந்தைகளை, உணவு மற்றும் பானங்களின் தீய விளம்பரத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும்’ என்ற தலைப்பில் ‘உலக சுகாதார நிறுவனம்’ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. விளம்பரங்களின் தீங்கினைக் குறித்த முதல் அறிக்கை அல்ல இது, பல காலமாக, அறமில்லாத வர்த்தக வளர்ச்சியையும், அதனை மக்கள் மத்தியில் சேர்க்கும் விளம்பரதாரர்களின் சூழ்ச்சியையும், சமூக விழிப்புணர்வு உள்ள பலரும் எதிர்த்துவருவது நாம் அறிந்ததே. ஆனாலும் மக்களால் மதிக்கக்கூடிய, அரசாங்கங்களின் எண்ணங்களையும், கொள்கைகளையும் மாற்றக்கூடிய உலக சுகாதார நிறுவனம் இத்தகைய ஒரு அறிக்கையை இந்த தருணத்தில் வெளியிட்டுள்ளது நாம் அனைவரும் கவனிக்க வேண்டியது. அப்படி என்ன காரணங்களால், இந்த நிறுவனம் விளம்பரங்களை, “தீமை” பயக்ககூடியவையாகத் தெரிவிக்கிறது? இந்த நிறுவனத்தின் கூற்றுப்படி, விளம்பரப்படுத்தப் படும் குழந்தைகளுக்கான உணவு மற்றும் பானங்களில், பெரும்பாலானவை, குழந்தைகளின் உடல்நலத்திற்குத் தேவைக்கு அதிகமான அளவில் உப்பும், சர்க்கரையும், கொழுப்புச்சத்தும் கொண்டவை என்று தெரிவிக்கின்றது. அதாவது, உணவைக் குறித்த 65% க்கும் அதிகமான விளம்பரங்கள் இத்தகைய தவறான உணவுகளைத்தான் விற்கின்றன. இதைத்தான் இந்த நிறுவனம், “தீயன” என்று உணர்த்துகிறது. இன்றய சூழலில், குழந்தைகளின் உண்ணும் பழக்கம் உலகமெங்கும் ஊடகங்களில் வாயிலாக, விளம்பரங்களின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று இந்த நிறுவனம் தெரிவிக்கின்றது. குழந்தைப் பருவத்திலேயே, இத்தகைய தாக்கத்தினால் அவர்கள் தவறான உணவை உட்கொள்ளுவராயின், அவர்கள் வளர்நதபின்னர் இந்த பழக்கத்தினால் தொடர்ந்து உடல்நலத்திற்க்கு ஒவ்வாத உணவுகளை உட்கொண்டு, பிற்கால சந்ததியினர் அதிக அளவில் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளதாகவும், இதற்காகவே இந்த அறிக்கையை வெளியிட்டதாகவும், அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org