தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி


தவிட்டுக் குருவி (அ) மஞ்சள் அலகு சிலம்பன் (அ) வெண்தலைச் சிலம்பன்

இம்மாதம் நாம் காணும் பறவை வீட்டுக் கொல்லைகளிலும், வயல் வெளிகளிலும் சாதாரணமாய்க் காணப் படும் சிலம்பன் இனத்தைச் சேர்ந்த தவிட்டுக் குருவி. White-headed babbler என்றும் Yellow billed Babbler என்றும் Turdoides affinis என்றும் அழைக்கப்படும். எதியோப்பியா, சூடான் நாடுகளைச் சேர்ந்தவேறு ஒரு வெண்தலைச் சிலம்பனும் உண்டு ( White-headed babbler or Cretzschmar's babbler, Turdoides leucocephala). இதனால் தற்காலப் பறவைப் பார்வையாளர்கள் மஞ்சள் அலகு சிலம்பன் இதனை என்றே அழைக்கின்றனர். நம் தவிட்டுக் குருவி தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் வசிப்பது. இதனை மிக அழகான இதன் பொன்மஞ்சள் அலகைக் கொண்டு அறியலாம்.

முழுக் கட்டுரை »

ஊன் உடம்பு ஆலயம்


உடல் வலி - ஒரு எச்சரிக்கை மணி

பிரபஞ்ச ஜீவராசிகளில் ஒன்றான மனிதரில் 95 சதவீதத்தினர் நித்தம் எதிர்நோக்கும் ஒரு முக்கிய தொந்தரவு உடலில் அல்லது உடலின் ஒரு பகுதியில் ஏற்ப்படும் வலி. வயது வரம்பு இல்லாது தினம் ஒரு முறையாவது ஏதோ ஒரு வடிவில் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறோம். கை வலி, கால் வலி, கழுத்து வலி, தலை வலி, இடுப்பு வலி, தசை வலி, நரம்பு வலி, வயிறு வலி, முடுகு வலி, முழங்கால் வலி, பல் வலி, நெஞ்சு வலி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். கடுமையான உழைப்பு என்பது தமிழர்களின் கலாச்சாரம்; நிலத்தினை உழுது, விதைத்து, களையெடுத்து, கதிரடித்து, களத்திற்கு கொண்டு வந்து பின் உலக்கை அல்லது திருகையால் உதிர்த்து அதனைப் பொங்கி உணவருந்தினர். அன்று உடல் வலியும் இல்லை நோயும் இல்லை. ஆனால் இன்றோ எல்லாவற்றிற்கும் இயந்திரம், டிராக்டர் முதல் மிக்சி, கிரைண்டர், குக்கர் வரை எல்லா வேலையிலும் உடல் உழைப்பு குறைந்து விட்டது. நோய்களோ பெருகி விட்டது. இந்தச் சூழலில் சிறுவர் முதல் பெரியவர் வரை தினமும் ஒலிக்கும் ஒரு மந்திரமாக மாறியது உடல் வலிகள். எதோ ஒருநாள் கடுமையான எடைகொண்ட பொருளை தூக்கியதனால் முதுகோ அல்லது கைகால் வலி கொள்கிறது என்பதும் அதே போல் ஒருநாள் உணவு சரியாக இல்லை அதனால் வயிறு அல்லது தலைவலி வருகிறது என்ப‌தும் இயல்பான‌ ஒரு செயல். ஆனால் என்றோ வருவதும் போவதும் என்பது இல்லாது இன்று பலருக்கு அது நிரந்தரமாகவே தன் இடத்தைப் பிடித்துக் கொண்டு அவர்களுடன் வாழ்ந்து வருகிறது.

முழுக் கட்டுரை »

மறக்கப்பட்ட மாமனிதர் குமரப்பா - பாமயன்


(சென்ற இதழ்த் தொடர்ச்சி) குமரப்பா அரசு அதிகாரத்தின் குவியலைக் கொண்ட நடுவப்படுத்தப்பட்ட அமைப்பாக இருக்கக் கூடாது, பரவல்மயமான குறைந்த அதிகாரங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றார். வேலையின் தன்மையானது கடுமையைக் குறைத்து முழுமையாக உழைப்பாளியின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் இருக்க வேண்டும். முந்தைய பொருளியல் சிந்தனையாளர்கள் வேலையைப் பிரித்துக் கொடுத்து திரும்பத் திரும்ப ஒரே வேலையைச் செய்ய வைத்தால் பொருளாக்கம் அதிகரிக்கும் என்றனர். ஆனால் அதில் எந்தவிதமான ஈடுபாடும், படைப்பாற்றல் திறனும் இருக்காது என்பது குமரப்பாவின் ஆழமான கருத்து. தனது ஏன் சிற்றூர் இயக்கம் (why the village movement) என்ற நூலில் இதை விளக்குகிறார். இதை காந்தியப் பொருளியிலின் கொள்கை அறிக்கை என்றே கூறலாம். காந்தியின் எண்ணங்களுக்கு இலக்கண வடிவம் கொடுத்து காந்தியப் பொருளியல் என்றே குமரப்பா அழைத்தார். என்னிடம் வரும்போதே குமரப்பா அணியமாகிவிட்டிருந்தார் (ready made) என்று காந்தி கூறியுள்ளார். ஆனாலும் தனது தலைவருக்கு சற்றும் பிறழாது தனது ஆய்வுகள் யாவற்றையும் காந்தியப் பொருளியல் என்றே அழைத்தார். ஆக குமரப்பாயியல் என்பது காந்தியப் பொருளியல் என்று ஆகிவிடுகிறது.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org