தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உழவை வெல்வது எப்படி


மாசானபு ஃபுகுவோகா ஜப்பானின் தென்பகுதியில் உள்ள ஷிகோகு தீவில் ஒரு சிறு கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து தாவர நோயியல் துறையைப்பயின்றவர். பின் தனது 25 ஆவது வயதில் துறைமுக நகரமாகிய யோகொஹாமாவில் சுங்கவரித்துறையில் (Customs Bureau) தாவர நோய் ஆய்வுப்பிரிவில் வேலை செய்து வந்தார். தாவர நோய்களைப்பற்றிய நிபுணரான அவர் தம் ஓய்வு நேரத்திலும் தாவர நோய்கள் பற்றிய ஆய்வுகளை அந்த ஆய்வுக்கூடத்தில் மேற்கொண்டார். ஆர்வ மிகுதியால் ஓய்வு இன்றிப் பணியிலும் ஆய்வுக்கூடத்திலும் வேலை செய்துவந்த காரணத்தினால் அவர் உடல் நலம் குன்றி ஒரு நாள் ஆய்வுக்கூடத்திலேயே மயங்கி விழுகிறார். அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.

முழுக் கட்டுரை »

மாடல்ல மற்றையவை - ஜெய்சங்கர்


செல்வம் ஈட்டுவதைவிட அதைப் பாதுகாப்பது கடினமானது. மாடு எனும் செல்வத்தை நம்மிடம் இருந்து பறிக்கக் கூடிய இடர்களில் உயிர்க்கொல்லி நோய்கள் பேரிடர்கள் ஆகும். அவற்றில் சிலவற்றை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். இந்த மாதம் மேலும் சில உயிர்க் கொல்லித் தொற்று வியாதிகளைப் பற்றி காண்போமா?

1. அடைப்பான்: இதை ஆங்கிலத்தில் ஆந்த்ராக்ஸ் (Anthrax) என்று அழைப்பர். இந்த நோய் வெகு விரைவில் தொற்றக் கூடியது. இது பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் (Bacillus Anthracis) என்ற பாக்டிரியாவின் மூலம் ஏற்படுகிறது. பல வருடங்கள் வரை இந்த பாக்டீரியாக்கள் வீரியத்துடன் இருக்கக் கூடியவை. எனவே, ஒரு முறை அடைப்பான் நோய் ஒரு தொழுவத்தில் ஏற்பட்டால், மீண்டும் மீண்டும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது மனிதர்களுக்கும் கூட தொற்றக் கூடியது. மேலும் மாடுகளுக்குள் வெகு விரைவாக பரவக் கூடியது. இந்த நோய் கண்ட மாடுகளில் பெரும்பாலானவை இறந்து விடும். இறந்த மாடுகள் உடனே அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

முழுக் கட்டுரை »

உழவர்களைத் தேடி - தமிழ்தாசன்


துரையைச் சேர்ந்த நாணல் நண்பர்கள் குழு என்ற அமைப்பு, “உழவர்களைத் தேடி” என்ற பெயரில், ஒவ்வொரு மாதமும் ஒரு மாவட்டத்திற்குச் சென்று அங்குள்ள இயற்கை விவசாயிகளைக் கண்டறிந்து அவர்களை வெளிச்சமிட்டுக் கௌரவிக்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறது. சென்ற மாதம் (18 - 05 -2014) அன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள‌ வத்திராயிருப்பில் நடை பெற்ற கூட்டத்தில், திரு. ச.முகேஷ், திரு. ப.பிச்சைமுருகன், திருமதி.இரா.செந்தமிழ் செல்வி, திரு. ந.கோபாலகிருஷ்ணன், திரு. நா.பெருமாள், திரு.கா.கருணாகரன், திரு. பா.சதாசிவராஜா, திரு. வே.இசைமணி, திரு.கு.மணி, திரு.பா.தமிழ்மணி, திரு. மு.தமிழ்செல்வன், திரு.கீர்த்திராஜன் ஆகிய இயற்கை உழவர்கள் பாராட்டப் பெற்றார்கள். இது “உழவனைத் தேடி” மூன்றாவது நிகழ்வாகும். நஞ்சில்லாத உணவை நமக்கு வழங்க, இயற்கை வழி வேளாண்மையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் உழவர்கள். பசுமைப் போராளிகள்.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org