தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உழவை வெல்வது எப்படி


மகாராஷ்டிர மாநிலத்தில் வாழ்ந்த சிரிபாத தபோல்கர் கணக்கு ஆசிரியராக பணிபுரிந்தவர். ஒரு நாள் அவர் ஒரு தோட்டத்தின் வழியாக செல்லும்போது அங்கு மண்புழுக்கள் பல இறந்து கிடப்பதை கண்டு விசாரித்தபோது முன்தினம் இரசாயன உரம் வயலில் இடப்பட்டதாக அறிகிறார். ஒரு உயிருள்ள மண்புழுவை எடுத்து சாப்பாடு உப்பை தூவுகிறார். அது துள்ளி விழுந்து இறக்கிறது. சாதாரண உண்ணும் உப்பு படும்போதே மண்புழு இறந்துவிடுகிறது என்றால் பல கிலோ இரசாயன உரங்களை தோட்டத்தில் இடும்போது மண்புழு மட்டுமல்லாமல் பல விதமான உயிரினங்களுமே இறந்து விடுமே என நினைத்து, இது சரியானதுதானா என தனக்குத்தானே கேள்வி எழ பல நாட்கள் இதற்கான விடை தேடி அலைகிறார்.

முழுக் கட்டுரை »

மாடல்ல மற்றையவை - ஜெய்சங்கர்


கோமாரி: இந்நோய் கண்ட மாடுகளுக்கு காராமணி அளவில் கொப்புளங்கள் வாய், கால்களில் தோன்றும். எனவே இதனை கால் கோமாரி என்றும் அழைப்பர். ஆங்கிலத்தில் இதனை காரணப்பெயராக 'ஃபுட் அன்ட் மவுத் டிஸீஸ்’ (Foot and Mouth Disease - FMD) என்று அழைக்கின்றனர். முற்றிய நிலையில் மூக்கு, நாக்கு, மடி, முகம் என்று எல்லா இடங்களிலும் கொப்புளங்கள் தோன்றும். தோன்றிய ஒரு நாளுக்குள் கொப்புளம் உடைந்து புண்ணாகி, அதிலிருந்து நீர் வடியும். மாடுகள் நடக்கவும், சாப்பிடவும் மிகவும் சிரமப்படும். 106 டிகிரி வரை காய்ச்சலும் ஏற்படும். வாயிலிருந்து எச்சில் கம்பி போல ஒழுக ஆரம்பிக்கும். மாடு மந்தமாக இருக்கும். சரியாக கவனிக்காமல் போனால் இரண்டு மூன்று தினங்களில் மாடுகள் இறந்து விடும் அல்லது புண்களில் புழுக்கள் தோன்றி விடும். புழுக்கள் தோன்றி விட்டால் புண்களை ஆற்றுவது மிகவும் கடினம் மட்டுமல்ல, வெகு நாட்களும் ஆகும்

முழுக் கட்டுரை »

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org