தரம்பால் கூறும் சாதாரண இந்தியரின் கதைகள் - சமன்வயா ராம்


இன்று நமது நாட்டின் மற்றும் சமூகத்தின் நிக‌ழ்வுகளை, சுதந்திர இந்திய நாட்டின் புதிய வரலாறாகவே பிரதிபலிப்பது மற்றும் ஆய்வு செய்வது நமது அவல நிலை. பல நூற்றாண்டுகள் கடந்து வளர்ந்த ஒரு பழுத்த நாகரீகத்தின் வாழ்முறையை, வெறும் 70 வயது மட்டுமே இருப்பதாக நம்மில் பலர் புரிந்துகொள்வது, நமது அனுபவ‌ ஞானத்தையும், நாகரீக வளர்ச்சியையும் அவமதிப்பதே அன்றி வேறொன்றும் இல்லை.

நமது வரலாற்று நிகழ்வுகளையும் இன்றைய வாழ்முறையையும் இணைத்துச் சாதாரண இந்தியர்களின் உணர்வுகளை ஒரு நாகரீகத் தொடராகக் கூறுவதில் திரு. தரம்பால் முக்கியமான பங்கு வகித்தார். இதனால் வரலாற்றில் நாம் தவறு செய்யவே இல்லை என்பது இவரது வாதம் அல்ல‌. ஆனால், காந்தியைப் போல இவரும், வரலாற்றுத் தவறுகளை இந்தியர்கள் தங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நம்பினார். “ஆயிரம் உண்டிங்கு ஜாதி, எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி?” என்று பாரதி வினவியதைப்போலவே, தரம்பாலும், நமது வரலாற்றுத் தவறுகளைத் திருத்திக்கொள்ள நமக்கு அன்னியர் உதவி தேவையில்லை என்றே கருத்துத் தெரிவித்தார். பலமுறை இத்தகைய தவறுகளை திருத்திக் கொள்ளுவதில், வேறுபாடுகள் ஏற்படினும், சில நேரங்களில் வன்முறை ஏற்பட்டாலும் கூட நாம் ஒரு தேசமாக நமது கலாசாரத் தற்சார்பை இழக்கலாகாது என்பது இவரது வாதமாக இருந்தது.

அவர் இந்த கருத்தைத்தான் அயோத்தி நிகழ்வுகளையும் குறித்த அவரது பேச்சில் தெரிவிக்கிறார். –

“இப்படிப் பல சுமுகமான‌ முடிவுகள் மக்களே முயற்சித்து மாறும் என்று பல ஆண்டுகளாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட மக்களின் கவனம் அயோத்தி போன்ற ஒரு விவாதத்துக்குரிய வரலாற்றுத் தவற்றின்பால் ஈர்க்கப்படுகின்றது. அவர்கள் ஒவ்வொரு வருடமும், “ஏதேனும் மாறும்” என்று எதிர்பார்த்து அயோத்திக்கு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அங்கு வெறும் கூட்டமும், சிறு பூசையும், வெற்று மேடைப் பேச்சுக்களும் இடம் பெறுகின்றன. “இவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள், நம்மைப் போன்றவர்களைக் கொண்டு இவர்கள் அரசியல் செய்கின்றார்கள்” என்று அவரகளுக்குள் மக்கள் பேசத் துவங்கியிருப்பார்கள்.

முழுக் கட்டுரை »

கற்பதும் கசடும் - ஜெய்சங்கர்


[கற்பதும் கசடும் தொடரைப் படித்து விட்டு நண்பர் ஜெய்சங்கர் இந்தக் கட்டுரையை அனுப்பியிருந்தார். சம‌ச்சீர்க் கல்வி, கவைக்குதவா ஏட்டுக் கல்வி, அனைவருக்கும் ஒரே பாடத் திட்டம் போன்றவற்றின் அடிப்படைக் காரணங்களை அவர் மிக நுட்பமாக விளக்கியுள்ளதால் அதை அப்படியே பிரசுரிக்கிறோம். - ஆசிரியர்]

கற்பதும் கசடும் தொடரில் எழுத்தறிவு என்பது பூதமா இல்லையா என்று பல கோணங்களில் ஆய்ந்தோம். சாக்ரடீஸ் எழுத படிக்க தெரியாதவர் என்பது வியப்பான செய்தியே. பழங்குடியினருக்கு கல்வி, நாகரிகம் என்ற பெயரில் எவ்வாறு அவர்களுடைய, அடிப்படைகளை, அடையாளங்களை அழிக்கிறோம் என்று ஆனந்த குமாரசாமி சொல்வதையும் பார்த்தோம். இவைகளின் அடிப்படையில் எங்கள் கிராமத்தில் எழுதப் படிக்கத் தெரியாத பழங்குடியினருடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்வது முக்கியம் என்று நினைக்கிறேன்.

எங்கள் பண்ணையில் வேலை செய்யும் பெரும்பாலான மக்கள் எழுதப் படிக்க தெரியாதவர்கள். பள்ளிக்கு செல்லாதவர்கள் அல்லது இரண்டு அல்லது மூன்றாம் வகுப்பு வரை பள்ளி சென்றவர்கள். அதில் ஒருவருக்கு இரண்டு மகன்கள். ஐந்து வருடங்களுக்கு முன்னர் நாங்கள் இந்த பண்ணைக்கு வந்த போது ஒருவன் வணிகவியலில் அந்த வருடம்தான் இளநிலை பட்டம் பெற்றவன் (B.Com). இன்னொருவன் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

பட்டம் பெற்றவனுக்கு ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்யுங்களேன் என்ற கோரிக்கையை அவனது தந்தை என்னிடம் வைத்தார். நம்மால் இயன்றதை செய்வோம் என்று எண்ணினேன். அப்போது பண்ணையில் தங்குவதற்காக ஒரு வீடு கட்டிக் கொண்டிருந்த சமயம். சேலம் சென்று வீட்டின் தரைக்கு தேவையான மண் ஓடு (Terracotta Tiles) வாங்க சென்று கொண்டிருந்தேன். அப்போது பட்டம் பெற்ற பையனை ஓடு வண்டியில் அடுக்குவதற்காக உடன் அழைத்துச் சேல்லும்படி நேர்ந்தது. சேலம் செல்லும் வழியில், பையனிடம் பேச்சுக் கொடுத்தேன். நமது வீடு, பதினோரு அடிக்கு இருபத்தியாறு அடி. நாம் வாங்கப் போகும் ஓடு முக்கால் அடிக்கு முக்கால் அடி என்றால் எத்தனை ஓடு வாங்க வேண்டும் என்று கேட்டேன்.

முழுக் கட்டுரை »

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி


கௌதாரி

Grey Francolin - Francolins pondicerianus (Gmelin)

தோற்றம்

சிறிய கோழியைப் போல் இருக்கும். 60 செ.மீ நீளம் உடையது. எடை 200 முதல் 340 கிராம் வரை இருக்கும். உடல் முழுவதும் பழுப்பு நிறத்தில் இருக்கும். அதில் வரிக்குதிரை போல் கருமையான கோடுகள் அமைந்திருக்கும். சிறகுகள் செம்பழுப்பு நிறத்தில் வெள்ளைக் கோடுகளுடன் அமைந்திருக்கும். அதன் வால் சிறியதாக சாம்பல் நிறத்தில் இருக்கும். பட்டை பட்டையான வெள்ளைக் கோடுகள் அமைந்திருக்கும். மூக்கு கழுகு போன்று கூர்மையாக இருக்கும். கண் மேல்பகுதியும், அடிப்பகுதியும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். கண்ணைச் சுற்றி ஒரு வட்டமான கருப்புக் கோடு அமைந்திருக்கும். கால்கள் சிவ‌ப்பு நிறத்தில் இருக்கும். ஆண்,பெண் ஒரே நிறத்தில் இருக்கும்.

காணும் இடம்

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் முழுவதும் இவற்றைக் காணலாம். பெரும்பாலும் இவற்றைக் கிராமங்களில், வயல்களில், வறண்ட காடுகளில், முட்காடுகளில் அதிகமாகக் காணலாம்.

உணவு

தானியங்கள்,விதைகள்,கரையான்,பூச்சிகள்,புழுக்கள் அதிகமாக உண்ணும். சில நேர‌ங்களில் சிறிய பாம்புகளைப் பிடித்து உண்ணும்.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org