அன்பும் அறனும் உடைத்தாயின் - ஜெயக்குமார்


தர்மபுரி மாவட்டம் கடத்தூர் கிராமத்தில் உள்ள நண்பர் திரு. பூவேந்தரசு என்பவர் தனது சொந்த விவசாய நிலத்தில் இயற்கைமுறையில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்துள்ளார். நான் சென்று பார்த்த பொழுது அவர் நிலங்களில் அறுபதாம் குருவை, சீரகசம்பா, வெள்ளை பொன்னி, தூயமல்லி போன்ற ரகங்கள் தலா 50 சென்ட் வீதம் நடவு செய்து இருந்தார். அனைத்து ரகங்களும் 15 நாட்களில் அறுவடைக்காக காத்திருந்தது. அவர் கடந்த மூன்று வருடங்களாக இயற்கை முறையில் விவசாயம் செய்வதாகவும் அதுமட்டுமல்லாமல் 'அன்பு அறக்கட்டளை' என்ற ஒன்றை நடத்தி வருகிறார். அந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கம் இயற்கை வழி வேளாண்மைப் பண்ணைக‌ளை உருவாக்கும் ஒன்று என்று கூறினார்.

அன்பு அறக்கட்டளை 07.04.2005 ஆம் ஆன்டு உலக சுகாதார தினத்தன்று இந்திய அறக்கட்டளை சட்டப்படி சத்துணவு மற்றும் உணவுப் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்டது என்றும் கூறினார்.

கடத்தூரைச் சுற்றியுள்ள கதிர்நாயக்கன்பட்டி, பத்தலஹ‌ள்ளி, குண்டல்பட்டி, ஒடசல்பட்டி போன்ற கிராமங்களில் 12 விவசாயிகளுக்குப் பாரம்பரிய விதைகளைக் கொடுத்து விதைநெல் உற்பத்தி செய்ய அன்பு அறக்கட்டளை மூலம் நிதி உதவியும் செய்துள்ளார். விதைகள் இலவசமாகவும் வழங்கியுள்ளார். 12 விவசாயிகளையும் நேரில் சென்று என்னிடம் அறிமுகம் செய்து அவர்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதையும் காட்டினார்.

பூவேந்தரசு அவர்கள் கூறிய ஒரு வியப்பான செய்தி, தாளாண்மை படிக்க ஆரம்பித்த பின்தான் பாரம்பரிய நெல்ரகங்களின் அருமை புரிந்தாகவும், நம் தாளாண்மையின் அனந்து அவர்களின் அறிவுரையின் காரணமாகவே அன்பு அறக்கட்டளை வளர்ந்து உள்ளதாகவும், அறக்கட்டளை வளர்ச்சிப் பணிகளுக்கு அனந்து முழு ஒத்துழைப்புத் தந்தாகவும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். அன்பு அறக்கட்டளையின் பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகளை வடிவமைத்துத் தந்தது அனந்துவே என்று சொல்லி செயல் திட்டங்களையும் பட்டியலிட்டார்.

அன்பு அறக்கட்டளையின் பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகள்

எண் செய்வோர் செயல்பாடு
1இயற்கை வழி வேளாண்மைஇயற்கை வேளாண்மை மற்றும் பாரம்பரிய ரகங்கள் ஊக்குவிப்பு பணிகள்.
2'சாளரம்' சுய உதவிக்குழுமகளிர் மற்றும் உழவர்கள் மேம்பாடு இளைஞர்கள் , சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுத்தல்.
3வைராக்கியம்நிறுவன மேம்பாட்டிற்காகவும், அரசுத் துறைகளில் மக்கள் சேவை சிறப்படையவும், இந்திய தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 படி வினாக்கள் தொடுத்தல், நேரடியாக அலகில் ஆய்வு செய்தல்.
4முழுமைக்குவியம்ஊரக மேம்பாடு, மக்கள் நல்வாழ்வு மற்றும் ஊராட்சி வளர்ச்சி மேம்பாடு.
5குழந்தைகள் மேம்பாடுகுழந்தைகளின் தனித்திறன்களை கண்டறியவும், தலைமைப்பண்புகள் மற்றும் ஆளுமையை வளர்த்திடவும் பயிற்சி வகுப்புகள்.
6உங்களைத்தேடிசேவைப்பகுதிக்குள் மக்கள் எவ்வகையான பாதிப்பிற்குள்ளனாலும் உடனடியாக உதவிகள் செய்தல். குறிப்பாக மருத்துவ உதவி.
7தமிழ்நாடு சுய உதவிக்குழு இயக்கம்சுய உதவிக்குழு இயக்கத்தை ஒழுங்குபடுத்துதல், முற்றிலும் கணிணி வழி கண்காணிப்பு குழு மையங்கள் ஏற்படுத்துதல், பிரச்சனைகளை ஆய்ந்து தீர்வு காண அரசுசாரா அமைப்புகளின் கூட்டங்கள் கூட்டுதல், இயக்கத்தை வலுப்படுத்துதல்.
8கம்பைந‌ல்லூர் மக்கள் மையம் மத்திய, மாநில அரசுத் துறைகளின் திட்டங்களை மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளத் துறைவாரியாக பொதுமக்களையும், பயனாளிகளையும் இணைத்து நேரடியாக கூட்டங்களை நடத்துதல்.
9சஹ‌ஜ் ( SAHAJ) மக்கள் கணிணி மையம்கணிணி வழி சிட்டா, அ. பதிவேடு மின்கட்டணம் TNPSC பதிவு, வேலைவாய்ப்பு பதிவு மற்றும் புதுப்பித்தல், ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, விபத்துக் காப்பீடுகள் ,வாகனக் காப்பீடு பதிவு. வாகனக் காப்பீடு பதிவு.

குறைந்த பொருள் செலவில், இயற்கை மேலும், தன்னைச் சுற்றியுள்ள மக்களின் மேலும் அன்பு கொண்டு அவர்களுக்குச் சேவை செய்யும் ஒரே நோக்கத்துடன் அன்பு அறக்கட்டளையைத் தனி மனிதராகத் தொடர்ந்து நடத்தி வரும் பூவேந்தரசு உண்மையிலேயே நம்மிடையே உள்ள மற்றுமொரு நாய‌கர்தாம்!

தொடர்பிற்கு : ஜெயக்குமார் - 9962009302 ; பூவேந்தரசு - 9715557575

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org