வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி


கௌதாரி

Grey Francolin - Francolins pondicerianus (Gmelin)

தோற்றம்

சிறிய கோழியைப் போல் இருக்கும். 60 செ.மீ நீளம் உடையது. எடை 200 முதல் 340 கிராம் வரை இருக்கும். உடல் முழுவதும் பழுப்பு நிறத்தில் இருக்கும். அதில் வரிக்குதிரை போல் கருமையான கோடுகள் அமைந்திருக்கும். சிறகுகள் செம்பழுப்பு நிறத்தில் வெள்ளைக் கோடுகளுடன் அமைந்திருக்கும். அதன் வால் சிறியதாக சாம்பல் நிறத்தில் இருக்கும். பட்டை பட்டையான வெள்ளைக் கோடுகள் அமைந்திருக்கும். மூக்கு கழுகு போன்று கூர்மையாக இருக்கும். கண் மேல்பகுதியும், அடிப்பகுதியும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். கண்ணைச் சுற்றி ஒரு வட்டமான கருப்புக் கோடு அமைந்திருக்கும். கால்கள் சிவ‌ப்பு நிறத்தில் இருக்கும். ஆண்,பெண் ஒரே நிறத்தில் இருக்கும்.

காணும் இடம்

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் முழுவதும் இவற்றைக் காணலாம். பெரும்பாலும் இவற்றைக் கிராமங்களில், வயல்களில், வறண்ட காடுகளில், முட்காடுகளில் அதிகமாகக் காணலாம்.

உணவு

தானியங்கள்,விதைகள்,கரையான்,பூச்சிகள்,புழுக்கள் அதிகமாக உண்ணும். சில நேர‌ங்களில் சிறிய பாம்புகளைப் பிடித்து உண்ணும்.

இனப்பெருக்கம்

இவை பெரும்பாலும் சிறிய கூட்ட‌ங்களாய்க் காணப்படும். இனப்பெருக்க காலம் சித்திரை முதல் புரட்டாசி வரை. முட்காடுகளில் புதருக்கு மேல்பகுதியில் கற்களை அமைத்து சிறிய கூடுகளைக் கட்டும். 6 முதல் 8 முட்டைகள் இடும். முட்டைகள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

குறிப்பு

இவற்றை வீடுகளில் வள‌ர்த்து உணவாகப் பயன்படுத்துவர் . மிக வேகமாகப் பறந்து கொண்டே நடக்கும் பறவை. பிடிப்பதற்க்குள் சட்டென்று புதருக்குள் பறந்து தப்பிக்கும் திறமை உடையது.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org