உழவென்றால் இருவர்க்கும் பொதுவில் வைப்போம்! - தமிழாக்கம் பாபுஜி


பெண் விவசாயிகளின் உரிமைக‌ள்

[ஏப்ரல் 1 முதல் 3 வரை ஐதராபாத் நகரில் நடை பெற்ற உழவர் விடுதலைப் பேரரங்கத்தில் பெண் விவசாயிகளின் உரிமைகள் குறித்த கருத்தரங்கின் சாரம்]

நம் நாட்டின் அனைத்து நிலப்பகுதிகளிலும் அனைத்து பயிர்வகைகளிலும் ஆண்களை விட மிக அதிகமான பெண்கள் விவசாய வேலைகளில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்திய விவசாயத்திற்கு முதுகெலும்பாக விளங்குவது இப்பெண்களே என்றால் அது மிகையல்ல. கிராமியப்பெண்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே இன்றும் உள்ளது. இருந்தபோதும்கூட இன்று வரை நம் சமூகமோ நாடோ இப்பெண்களின் பங்களிப்பை 'கண்டுகொள்ள' வில்லை. இவர்களை விவசாயிகள் என்று அங்கீகரிப்பதை கூட இந்த சமூகம் செய்யத்தயாராக இல்லை என்பதே வருத்தத்திற்குரிய உண்மை. நம்மால் பெண் விவசாயிகள் என்று கருதப்படுபவர்கள் சொந்த நிலங்களில் விவசாயம் செய்வோர், பூர்விக நிலங்களிள் விவசாயம் செய்வோர், குத்தகைக்கு விவசாயம் செய்வோர், தீவனம் வளர்ப்பவர்கள், காடுகளை சார்ந்துள்ள பெண்கள், கால்நடைகள் வளர்க்கும் பெண்கள், விவச்யாக்க்கூலிகளாக வேலை செய்யும் பெண்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். நம் நாட்டின் 2007 ஆம் ஆண்டு 'விவசாய அறிக்கை' யும் இப்பெண்களைத்தான் விவசாயிகளாக சரியாக அடையாளப்படுத்தியுள்ளது.

பெண் விவசாயிகளின் உரிமையைப்பற்றி பேசும்போது, நம் புரிதலை பெண்ணியம் மற்றும் விவசாயப்பொருளாதாரத்தில் பொருத்திப்பார்ப்பது முக்கியமாகின்றது. MAKAAM ஆய்வின்படி இது ஒன்றே பெண் விவசாயிகளுக்கு வலிமை சேர்க்கும் ஒரே வழியாகும்.

உலகளாவிய விவசாயக்கொள்கைகள் கூட பெண் விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்காமல் விவசாய வளர்ச்சியும் உணவுப்பாதுகாப்பும் நீடிக்காது என்பதை தெளிவாக உணர்ந்துள்ளன. பெண் விவசாயிகளை ஆண் விவசாயிகளுக்கு சமமாக மதித்தால்தான் விவசாய உற்பத்தி பெருகும் (40 விழுக்காடு வரை) என்பதும் உலகளாவிய வகையில் உணரப்பட்டுள்ளது. பாலின சம உரிமை (gender equity) ஒன்றே நீடித்த விவசாய வளர்ச்சிக்கு உதவும் முக்கிய காரணியாகும்.

இந்திய விவசாய அரங்கில் பெண்ணியத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் ஆண்கள் நிலைப்பாடு கொண்டுள்ளது தொடர்ந்து வரும் ஒரு நிகழ்வாக இருக்கின்றது. பெண்ணியம் சார்ந்து பெண்கள் விவசாயம் செய்யும்பொழுது அவர்களுக்கு ஆண்களின் உதவி (ஆண்கள் மட்டுமே விவசாயம் செய்வதை ஒப்பிடும்போது) அதிகமாக கிடைப்பதில்லை. எல்லா வேலைகளையும் பெண்களே கவனித்துக்கொள்ளும் நிலையே நிலவுகிறது. ஆண்கள் மட்டுமே விவசாயம் செய்யும்போது எந்த பயிர் எந்த முறையில் சாகுபடி செய்வது என்பதிலிருந்து விவசாய பொருளீட்டல் வரை பெண்களை கலந்துகொள்ளாமலே முடிவெடுக்கப்படுகிறது (சமச்சீரற்ற சமூகத்தின் இடுபொருள் மற்றும் விளைபொருள்களின் ஒருங்கிணைப்பினால்). நம் நாட்டின் கவலைக்கிடமான விவசாய நிலையினாலும் தொடரும் (விவசாயிகளின்) ஏராளமான தற்கொலைகளினாலும் பெண் விவசாயிகளின் மீதான சுமை அதிகமாகிக்கொண்டே போனாலும் அவர்களும் விவசாயிகள்தான் என்று உதவிகளும் கௌரவமும் கிடைப்பது சுலபமாக இல்லை. தனித்து வாழும் பெண் விவசாயிகள் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகையதொரு நிலை (பாலின வேறுபாடு, மரியாதை கிட்டாத நிலை) வந்ததற்கு ஒரு அடிப்படை காரணம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையில் நிலவும் சமச்சீரற்ற மூலப்பொருட்கள் பங்கீடே (நிலம், செல்வம்…)

பெண் விவசாயிகளின் உரிமைகளுக்காக என்ன செய்யவேண்டுமென்று பார்ப்போமா?

1. பெண் விவசாயிகள் என்று ஒரு இனம் உண்டு என்ற புரிதல் மற்றும் அவர்களையும் மதிக்கவேண்டும் என்ற அறிதல்
2.மூலப்பொருட்களின் மீதான அவர்களின் உரிமையை ( தனித்த மற்றும் பொதுவான மூலபொருட்கள் மீது)
3. விவசாய பணிகளில் ஆண்களுக்கினையான ஆளுமையை இவர்களுக்கும் கிடைக்கச்செய்வது
4.இவர்களுக்கு சமூகப்பாதுகாப்பு அளிப்பது
5.விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளிலும் முடிவெடுக்கும் உரிமை உள்ள குழுக்களில் இவர்களுக்கும் சம பங்கீடளிப்பது

இவற்றை அடைவதற்காக நாம் முன்வைக்கும் கோரிக்கைகளை இப்போது பார்ப்போம்:

1. அரசின் விவசாய, பழத்தோட்ட மற்றும் கால்நடை வளர்ப்புத்துரைகளின் அலுவலங்களின் அனைத்து நிலைகளிலும் செயல்படும் வெளிநோக்கு சேவைகளின் பெண் விவசாயிகள் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும். விவசாய மற்றும் வருவாய் துறைகளின் பயிற்சி திட்டங்களில் பெண் விவசாயிகள் மற்றும் அவர்களின் நில உரிமைகள பற்றிய பாடங்கள் இடம்பெற வேண்டும். வெற்றிகரமான பெண் விவசாயிகளின் திறமைகளை வெளிநோக்கு சேவைகளில் பயன்படுத்தி அவர்களை மற்ற பெண் விவசாயிகளிடம் இந்த செய்திகளை கொண்டு சேர்க்கும் இருதிக்கண்ணிகளாக நிறுத்தவேண்டும் (last mile extension workers).

2. அரசு வரையறுக்கும் திட்டங்களையும் நடத்தும் நிகழ்வுகளையும் விரிவுபடுத்தி பெண் விவசாயிகளின் திறமைகளை நீடித்த வேளாண்மை, மண் வள மேலாண்மை, சமூக காடுகள், பால் உற்பத்தி, பழங்கள் மற்றும் கால்நடைகள் ஆகிய விவசாயத்துறைகளில் அவர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் செயல்படுத்தவேண்டும்.

3. நீடித்த வேளாண்மையில் பெண்களின் பங்கு மகத்தானது. இயற்கை வளங்களில் ஒன்றான விதை வகைகளை பெருக்குவதில் அவர்களின் பங்கு முக்கியமானது. பெண்களே அவர்கள் சார்ந்த சமூக குழுக்களின் விதை தேர்வு, பாதுகாப்பு மற்றும் சேமிப்பு ஆகிய பணிகளை இடையறாது செய்கின்றனர். விதைகள் மற்றும் விவசாயம் சார்ந்த அவர்களின் அனுபவ அறிவை விவசாய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக அரசு பயன்படுத்தவேண்டும். அவ்வாறு செய்யும்போது அவர்களின் தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் முக்கியத்துவம் போன்றவற்றையும் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

4. உயிரிப்பன்மையம் சார்ந்த, இயற்கை விவசாயத்தை பெண் விவசாயிகளின் அனுபவ அறிவு மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் துணை ஆகியவற்றுடன் அரசு முன்னெடுத்துச்செல்லவேண்டும். இவ்வாறு செய்தால் கீழ்க்கண்டவை சாத்தியமாகும் - பெண்களுக்கு விவசாயத்தில் சுதந்திர செயல்பாடு

1.நீடித்த விவசாயம்
2.உணவு மற்றும் அதன் சத்து பாதுகாப்பு
3.வேதி விவசாயத்திலிருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு
4.பருவநிலை மாற்ற அபாயங்களை குறைப்பது

5. பெண் விவசாய குழுக்களினால் நடத்தப்படும் விவசாய நிறுவனங்களுக்கு அரசு நிதியூக்கிகள் தந்து அறுவடைக்குப்பின் சேமிப்பு, மதிப்புக்கூட்டல் (processing) மற்றும் சந்தைப்படுத்துதளிலும் உதவ வேண்டும். வாடகைக்கு எடுத்த நிலங்களில் இவ்வாறான பணிகள் அவர்களால் செய்யப்பட்டால் வாடகை சம்பந்தமான விதிகளில் (பெண் விவசாயிகளுக்கு) தேவையான மாற்றங்களை அரசு செய்யவேண்டும்.

6. சிறு தானிய சாகுபடியை முன்னிறுத்தி, ஊக்கப்படுத்தி உணவுச்சத்து பாதுகாப்பு என்கிற வகையில் விவசாயம் முன்னெடுத்துச்செல்லப்படவேண்டும். இவற்றை கொள்முதல் செய்வதிலும் முன்னுரிமை தரப்பட்டு மதிய சத்துணவு, பாலர் பள்ளிகளில் உணவு, மற்றும் ஊட்டச்சத்து உணவு ஆகியவற்றில் இவற்றை பயன்படுத்தவேண்டும். இதைப்போலவே ஒரு பகுதிசார்ந்த (local) மற்றும் எல்லோராலும் விரும்பப்படுகின்ற பரம்பரிய சமையல் குறிப்புகளையும் பெண் குழுக்களால் ஆரோக்கியமான சத்துணவு என்கின்ற வகையில் வெளிச்சமிட்டு காட்டவேண்டும்.

7. விவசாய வேளைகளில் குறிப்பாக சாகுபடி மற்றும் அறுவடைக்குப்பின்னான வேளைகளில் மிகவும் சோர்வுரச்செய்வதும், ஆண்களால் விரும்பப்படாத வேலைகளையும் பெண்களே செய்யுமாறு நிற்பந்திக்கப்படுவது நாமனைவரும் நன்கறிந்த ஒன்று. இதனை மாற்ற, அவர்களின் வேலையை எளிதாக்கி களைப்பை குறைத்து உற்பத்தியை பெருக்கும் வண்ணம் பெண்களாலும் சுலபமாக கையாளக்கூடிய வகையில் தொழில்நுட்ப கருவிகள் தருவிக்கப்பட்டு அவர்களின் உழைப்பை மேம்படச்செய்யவேண்டும். அவர்களுக்கு தேவையான தொழில்நுட்பங்களை கையாளும் விதத்தை சொல்லிக்கொடுப்பதும் அவர்களின் திறமையை மேம்படுத்துவதும் பயிற்சியளிப்பத்தின் மையப்புள்ளியாக இருக்கவேண்டும். பெண்களின் விவசாய வேலைப்பளுவை குறைக்கும் தொழில்நுட்பங்களை அவர்களுக்கு கிட்டச்செய்வதற்கும், அத்தொழில்நுட்பங்களை இயக்கம் பயிற்சியுள்ளவர்களை உருவாக்குவதற்கும் தேவையான நிதியுதவியும் தரப்படவேண்டும். இதற்காக கேரளாவில் புகழ்பெற்ற உணவு பாதுகாப்பு படை / பசுமை படை போன்ற அமைப்புகளை தழுவி புதிய அமைப்புகளை உருவாக்கவேண்டும்.

8. பெண்களுக்காக பொறுப்புடைமை (joint liability) விதிகள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு கடனுதவி கிட்டுவது எளிதாக்கப்படவேண்டும் (கிசான் கடன் அட்டைகள் போன்றே அவற்றுக்குண்டான சலுகைகளுடன் கூடிய கடன் திட்டம்).

9. நில அடங்கல் ஆவணங்களில் பெண் விவசாயிகளின் பெயர்களை பதிவு செய்வதை ஆதரித்து (கட்டாயமாக்கி) அவர்களுக்கு வங்கிகள் போன்ற பெரு நிறுவனங்களின் கடனுடவிகள் கிட்டுவது இதனால் சுலபமாக்கப்படவேண்டும். இச்செயலினால் பயிர்க்காப்பீடு பெண் விவசாயிகளுக்கும் கிட்டுவது சுலபமாகும் (இந்தியாவில் பயிர்க்கடன் என்பது விவசாயக்காப்பீட்டோடு இணைத்து செயல்படுத்தப்படுவதால்).

10. நில உடைமை மற்றும் வன உரிமை சட்டங்கள் திருத்தப்பட்டு பெண்களுக்கும் இவற்றில் ஆண்களை போன்றே சம பங்கு கிடைப்பதற்கு அரசு ஆவண செய்யவேண்டும். இத்துறைகளில் உள்ள ஆவலர்கள் இவற்றை செவ்வனே நிறைவேற்ற முனைய வேண்டும் (accountability). இதற்கான இந்து வாரிசுரிமை சட்டம் 2005 மற்று வன உரிமைகள் சட்டம் 2006 போன்றவை திருத்தி எழுதப்படவேண்டும். பால் பேதமின்றி நீதி கிட்ட நடைமுறையிலிருக்கும் சட்டங்களும் மாற்றப்படவேண்டும்.

11. அரசின் நில மறுபகிர்ந்தளிப்பு திட்டங்கள், அரசு நில விற்பனை மற்றும் குத்தகைகள் போன்ற திட்டங்களில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களும் சொந்த நிலம் பெற்று அதனை நிர்வாஹிக்கும் வகையில் அவர்களில் பெயரில் (தனியாகவோ அல்லது கூட்டாகவோ) பட்டா வழங்கப்படவேண்டும். இவற்றிலும் தனித்து வாழும் பெண்கள், தலித் பெண்கள், பூர்வகுடியினர் மற்றும் மாற்றுத்திரனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும். மாநிலங்களும் இவ்வாறு வழங்கப்படும் நிலங்களின் அளவு, தன்மை மற்றும் முதலீட்டு வசதி போன்றவை பெண் விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் இருக்குமாறு செயல்படுத்தவேண்டும்.

12. தனியார் நிலங்களைப்பொருத்தவரையில் பெண்களுக்கும் நில உரிமையை பகிர்ந்தளிப்பதை முன்னெடுத்துச்செல்ல ஆண்களோடு கூட்டு பட்டாவாக பெண்களையும் சேர்த்து பதிவு செய்வதை ஊக்குவிக்கும்வகையில் பதிவுத்தொகை மற்றும் முத்திரை வரிகளை குறைக்கவேண்டும். குஜராத் மாநிலத்தை இதற்கு ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

13. பெண் விவசாயிகளின் மூலப்பொருட்கள் உரிமையை விரிவுபடுத்தி நீர்த்தேக்கங்கள், மீன்வளர்ப்புக்கேற்ற குட்டிகள், மீன்களை காயவைக்கும் நிலங்கள் போன்றவற்றை குத்தகைக்கு விடும்போது இவர்களின் குழுக்களுக்கு முன்னுரிமை தந்து, நிலங்களில் குத்தகைதாரர்கள் மற்றும் வேலைக்காரர்களாக விளங்கும் இவர்களுக்கு நில உரிமையாளருக்கு கிட்டும் அனைத்து அரசாங்க வசதிகளும் கிட்டச்செய்யவேண்டும். அரசு இந்த விவசாயிகளை வேறிடங்களுக்கு இடம் மாற்றினால் அவர்களின் மறுவாழ்விற்குரிய ஏற்பாடுகளையும் அரசு செய்து தரவேண்டும்.

14. கால்நடைகளை வளர்ப்பதில் பெண்களின் மகத்தான பங்கை கவனத்தில் கொண்டு (கால்நடை வளர்ப்புதான் கிராமப்புற பெண்களுக்கு அதிகபட்ச வருவாயை ஈட்டித்தருகிறது) மேய்ச்சல் நிலங்களை பாதுகாப்பதில் அரசு அக்கறை கொள்ள வேண்டும்.

15. பொது நிலங்கள் என்று கருதப்படும் மேய்ச்சல் நிலங்கள், நீர் நிலைகள் மற்றும் காடுகள் ஆகியவற்றை பயன்படுத்துவதில் பெண்களுக்குள்ள முக்கிய உரிமையை வலுப்படுத்தி அவற்றின் நிர்வாக உரிமையையும் அவர்களே ஏற்று நடத்தும் வகையில் அரசு திட்டமிட்டு அத்திட்டங்களை வலுவானவையாக அமைத்து நடைமுறைப்படுத்தவேண்டும். இவ்வாறு இப்போது இடங்களை பெண்களின் மேலாண்மையில் விட்ட இடங்களில் எல்லாம் அது எல்லோருக்கும் பயனளிக்கும் வகையில் செயல்படுவதையும் அரசு கருத்தில் கொள்ளவேண்டும்.

16. இத்தகைய பொது நிலங்களை அதிக அளவில் சார்ந்து வாழும் தாழ்த்தப்பட்ட பெண்களின் அனுபவம், திறன் மற்றும் தாங்கிப்பிடிக்கும் அரண்களை வலுப்படுத்தும் வகையில் அரசின் ஏராளமான திட்டங்களையும் அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதியையும் ஒருமுகப்படுத்தப்படவேண்டும். மானாவாரி வேளாண்மையில் ஈடுபடும் பெண்களின் முக்கியத்தையும் அவர்களுக்கு வேண்டிய உதவிக்கட்டமைப்புக்களையும் (support sysytems) கருத்தில் கொள்ளவேண்டும். பருவச்சூழல் மாறுபாட்டால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இம்மானாவாரி பெண் விவசாயிகளுக்கு காலத்திட்கேட்ப மாறுபட்ட நுட்பங்களையும்,பருவநிலை மாற்றம் சார்ந்த ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றிக்கொள்வது எப்படி என்பதையும் முக்கிய குறிக்கோள்களாக கொள்ளவேண்டும்.

17. இவை தவிர கீழ்க்கண்டவையும் பெண் விவசாயிகளுக்கு அவசியமே: * நிலம் பற்றிய அறிவு

1.சந்தைப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டல் பற்றிய பயிற்சிகள்
2.நில சம உரிமை கோரும் “ஸ்வபூமி கேந்த்ரா” போன்ற குஜராத்தி அமைப்புகள் போன்று புதிய அமைப்புக்கள் நாடு முழுவதும்
3.கடனுதவி மற்றும் மூலதனம் சுலபமாக கிடைக்க வழி செய்வது
4.விவசாயத்தை பயனுள்ளதாக்க கட்டமைப்பு உதவிகள், நீர், மின்சாரம், விவசாயி கடன் அட்டைகள், பயிர் காப்பீடு போன்றவற்றை தடையின்றி வழங்குதல்

18. விவசாயம் மற்றும் அதன் சார்புடைய அனைத்து துறைகளிலும் முடிவெடுக்கும் அதிகாரம், கண்காணிக்கும் அதிகாரம், ஒழுங்குபடுத்தும் அதிகாரம் பெண்களுக்கும் சம அளவில் நாடு தழுவிய வகையில் வழங்கப்படவேண்டும்.

19. பால் பேதமற்ற நிலவுரிமை புள்ளி விவரங்கள் துல்லியமாக, ஒரு வருவாய் கிராமம் தொடக்கி நாடு முழுவதும், தொகுக்கப்படவேண்டும். இவ்வாறு ஒன்று இருந்தால்தான் அரசின் பல்வேறு திட்டங்களையும், சட்டங்களையும் இத்தகைய கிராமங்கள் வரையில், பல்வேறு அமைச்சகங்களுக்கூடாக பயனுள்ள வகையில் கொண்டுசேர்க்கமுடியும். விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பை துல்லியமாக அளக்கும் வகையில் மனித ஆற்றல் நேரம் முதலான பல்வேறு ஆய்வுகள் (surveys) மேற்கொள்ளப்பட்டு அத்தகைய ஆய்வுகளின் முடிவுகள் விவசாயம் சார்ந்த அனைத்து துறை அறிக்கைகளையும் திட்டங்களையும் வடிவமைப்பதில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் (ஆண்கள் மற்றும் பெண்களின் சமமற்ற ஊதியங்கள், பால் சார்ந்த சமூக பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை குறிப்பாக கவனத்தில் கொள்ளப்படவேண்டும்).

20. ஓய்வூதியம் மட்டுமல்லாது மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள், குழந்தைகள் காப்பகம் போன்றவைரும் பெண் விவசாயிகளின் சமூக பாதுகாப்பு அம்சங்களாக கருதப்பட்டு அமல்படுத்தப்படவேண்டும். பெண்களின் கற்புக்கு பாதுகாப்பு அளிப்பதும் இவற்றில் ஒன்றே. தாய்மை சம்பந்தப்பட்ட சட்ட சலுகைகள், 9 மாத ஊதிய இழப்பீடு மற்றும் மேம்படுத்தப்பட்ட கட்டணமற்ற சுகாதார வசதிகள் கிட்டல் போன்றவை பெண் விவசாயிகளுக்கும் கிடைக்கவேண்டும் என்று அரசு உறுதியளிக்க நாங்கள் கோருகிறோம்.

21. தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மனைவிகள் மிக சுலபத்தில் பாதிக்கப்படக்கூடியவர்கள். எனவே அவர்கள் நீடித்த விவசாயத்தில் ஈடுபடவும்,அவர்களுக்கான நில உரிமைகளை அடைவதற்கும்,அவர்களின் குழந்தைகளின் கல்விக்கும் அரசு வேண்டிய உதவிகளை அளிக்கவேண்டும்.

பெண்களின் உரிமையை நிலைநிறுத்தாமல், அவர்களுக்கான சலுகைகளை அளிக்காமல், அவர்களின் பங்களிப்பு குறித்த புள்ளி விவரங்களை கணக்கில் கொள்ளாமல், ஆண் பெண் விவசாயிகள் என்ற பேதமற்ற கட்டமைப்பையும், நிலைப்பாடுகளையும் உருவாக்காமல் பெண் விவசாயிகள் முன்னேற்றம் மற்றும் விடுதலை என்பது சாதிகா இயலாத ஒன்று. அது மட்டுமல்லாமல் விவசாய முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, வாழ்வாதாரப்பதுகாப்பு மற்றும் உணவுப்பாதுகாப்பு போன்றவை நீடிக்க முடியாது. அரசின் கவனம் பெண் விவசாயிகளின் உணவு பாதுகாப்பு, ஊதிய பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் உடல் ரீதியான பாதுகாப்பு போன்றவற்றை நிறுத்துவதிலும் பாதுகாப்பதிலும் செல்லவேண்டும்.

MAKAAM குழு அரசு பெண் விவசாயிகள் முன்னேற்றம் மற்றும் உரிமை பாதுகாப்புக்கான முழுமையான சட்டங்களை வரையறுத்து அமல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகிறது.

மகாம்: பெண் விவசாயிகளின் உரிமை குழு 2014 ஏப்ரல் மாதம் ஒரு தேசிய இயக்கக்குழுவாக தொடங்கப்பட்டது- பல பிரச்சார இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள், அரசு சாரா நிறுவனங்கள், பெண் விவசாயிகள் குழுக்கள், குறிப்பாக தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளின் வாழ்வாதாரங்களை மீட்கும்/மேம்படுத்தும் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் அடங்கிய ஒரு நாடு தழுவிய கூட்டணியாக. பெண்ணியம் மற்றும் நீடித்து நிலைக்கும் தன்மை கொண்ட பொருளாதாரம், சுற்றுச்சூழல, சமூக நீதி மூன்றும் கொண்ட கொள்கைகளால் வழிந‌டத்தப்படும். பெண்கள் விவசாயிகளாக காணப்படவும் வள‌ங்கள் மீது அவர்களது உரிமையை உறுதிப்படுத்துவதும் இதன் நோக்கம். பெண் விவசாயிகள் குறிப்பாக சிறு மற்றும் ஓரங்கட்டப்பட்ட விவசாயிகளின் சமூக நீதி, அவர்களது தற்சார்பு வாழ்வுமுறை மற்றும் நிலையான வாழ்வாதாரங்களுக்காக வேலை செய்வதே இதன் குறிக்கோள். மகாம் மாநில குழுக்களுடன் பிராந்திய குழுக்களை இணைத்து பரந்த தேசிய அமைப்பாக பணி புரிகிறது

Secretariat: Gramya Resource Centre for Women, 12-13-440, St. No. 1, Tarnaka, Secunderabad, Telangana, PIN 500017, India E-mail: mahilakisan.makaam@gmail.com; Website: www.makaam.in

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org