செவிக்குணவு இல்லாத போழ்து - பத்மா

வரகரிசி சாம்பார் சாதம்

தேவையான பொருட்கள்

1.வரகு - 1 கோப்பை
2.பாசி பருப்பு - 1/2 கோப்பை
3. காய்கறி கலவை , சிறு துண்டுகளாக நறுக்கியது - 2 கோப்பை
4. (கேரட்,கத்தரிக்காய், அவரைக்காய், பீன்ஸ், உருளை, வாழைக்காய், வெள்ளரிக்காய் பயன்படுத்தலாம் )
5.கீரை - ஏதேனும் ஒரு வகை - 2 கைப்பிடி அளவு
6.புளி - சிறு நெல்லிக்காய் அளவு
7.வெங்காயம் - 1
8.தக்காளி - 2
9.மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
10.மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
11.கொத்தமல்லித்தூள் (தனியா) - 2 தேக்கரண்டி
12.நெய் - 1 தேக்கரண்டி
13. கொத்தமல்லி இலை - சிறிதளவு
14.உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு

1.நல்லெண்ணை - 2 தேக்கரண்டி
2.கடுகு - 1/4 தேக்கரண்டி
3.சீரகம் - 1/2 தேக்கரண்டி
4.கறிவேப்பிலை - சிறிது
5.பச்சை மிளகாய் - 2
6.பெருங்காயம் - 2 சிட்டிகை

செய்முறை

வரகரிசியைக் கல் நீக்கி சுத்தம் செய்து பாசிப் பருப்புடன் 30 நிமிடம் ஊற வைக்கவும்

புளியை 1 கோப்பை அளவு நீரில் ஊற வைத்து நன்கு கரைத்து வைக்கவும்

சோறு சமைப்பானில் (குக்கர்) எண்ணையைக் காய வைத்து கடுகு, சீரகம், பச்சை மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

கடுகு பொரிந்ததும் நறுக்கி வைத்த வெங்காயம் , தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு இதனுடன் காய்கறிகள், கீரை, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லிப்பொடி, புளிக்கரைசல், உப்பு மற்றும் 3 கோப்பை தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

காய்கறிகள் பாதி வெந்ததும் வரகரிசி , பருப்பு சேர்த்து 1 சத்தம் வரும் வரை வேக விடவும்.

ஆவி அடங்கியதும் திறந்து நெய் , கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.

குறிப்பு

* சாதம் தளர இருக்க வேண்டும். ஆறியதும் பதம் சரியாக இருக்கும்.

* வரகரிசிக்குப் பதிலாக சாமை, குதிரைவாலியும் பயன்படுத்தலாம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org