தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்குணவு இல்லாத போழ்து - ஜெயஸ்ரீ


குதிரைவாலி முருங்கை அடை

தேவையான பொருட்கள்

  1. குதிரைவாலி அரிசி - 1/2 கோப்பை

  2. கடலைப்பருப்பு - 1/4 கோப்பை

  3. துவரம் பருப்பு - 1/4 கோப்பை

  4. அவல் - 1 தேக்கரண்டி

  5. வர மிளகாய் - 2 அல்லது 3

  6. பெருங்காயம் - சிறிதளவு

  7. சின்ன வெங்காயம், நறுக்கியது - 7 - 8

  8. முருங்கைக் கீரை - ஒரு கைப்பிடி

  9. உப்பு தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் குதிரைவாலி அரிசியையும், அவலையும் ஊறவைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் கடலைப் பருப்பையும், துவர‌ம் பருப்பையும் தனியாக ஊற வைக்கவும். இரண்டையும் 2 மணிநேரம் ஊற விடவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முருங்கை இலையை நாரின்றி ஆய்ந்து கொள்ளவும்.

அரிசி மற்றும் அவலை நன்றாக அரைத்துக் கொள்ளவும்

பருப்புக்களுடன், வரமிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைப் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இரண்டு மாவுகளையும் நன்றாகக் கலந்து, வெங்காயம் மற்றும் முருங்கை இலைகளை இதில் இட்டுக் கலக்கவும். முருங்கைக் கீரையை நறுக்கத் தேவையில்லை, அப்படியே இடலாம். இம்மாவு புளிக்கவோ பொங்கவோ தேவையில்லை. உடனே அடை சுடலாம்

சாதாரணமாக அடை சுடுவது போல், தோசைக் கல்லில், மிதமான தீயில் செக்கு எண்ணை/நெய் விட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்

குறிப்பு

அவல் சேர்ப்பது அடையை மிருதுவாக்கும்

இன்னும் மென்மையாக வேண்டுமென்றால் ஒரு தேக்கரண்டி உளுந்தைச் சேர்த்துக் கொள்ளலாம்

பெரிய வெங்காயத்தையும் பயன்படுத்தலாம்; சிறியதில் சுவையும் மணமும் அதிகம்

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org