விஞ்ஞானிகளின் மாநாடு
சண்டிகர் இயற்கை மாநாட்டின் ஒரு பெரும் கவர்ச்சிகரமான நிகழ்ச்சியாக கருதப்பட்டது விஞ்ஞானிகளின் மாநாடு ஆகும். நாடு முற்றிலுமிருந்து சிறந்த விஞ்ஞானிகள், பல வேளாண் அறிஞர்கள், பல்வேறு வேளாண் பல்கலைகழகங்களிலிருந்து துணை வேந்தர்கள் என வேளாண்மையில் ஈடுபட்டு வரும் பல அறிஞர்களும் பங்கு கொண்டனர். நம் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத் துணைவேந்தர் வந்து சிறப்பித்தார். வேளாண் சூழலியலைப் பொதுமுறைமைக்குக் கொண்டுவருவது [mainstreaming agroecology] என்ற முழக்கத்துடன் நடைபெற்றது இந்த விஞ்ஞானிகளின் மாநாடு. அவர்களுடன் பல்வேறு முன்னோடி இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டது பெரும் சிறப்பு. பல அறிஞர்களும் வேளாண் விஞ்ஞானிகளும் இவர்களது பங்களிப்பைப் பெரிதும் பாராட்டினர். சிலர் இந்த விவசாயப் புலிகளின் சாதனை, சோதனை மற்றும் தகவல் விவரங்களை பெரிதும் போற்றினர். இந்த மாநாட்டின் வாயிலாகவே அவர்களுக்கு இப்படிப் பெரிதும் சாதித்துள்ள விவசாயிகள் பற்றியும் அவர்களது அறிவுத்திறன் பற்றியும் தெரிய வந்துள்ளது என்றனர்.
அந்த விஞ்ஞானிகளின் மாநாட்டில் விஞ்ஞானிகளின் தீர்மானம் ஒன்று அறிவிக்கப்பட்டது பெரும் சிறப்பு ஆகும்.
அதிலிருந்து சில துளிகள்:
- வளங்கள் தவறான உற்பத்தி வழிமுறைகளால் வீணடிக்கப்படுகின்றன. அவற்றை சரி வர உபயோகிக்கப் பயிர் சுழற்சி முறை, ஊடு பயிர் மற்றும் கலப்புப்பயிர், கால்நடைகள் கொண்ட ஒருங்கிணைந்த பண்ணையாக இருத்தல் அவசியம். (விதை மற்றும் பயிர்) பன்மையம் இன்றியமையாத தேவை.
- நிலப் பயன்பாடு மற்றும் உற்பத்தி முறைகள் சூழலியல் தொடர்பான தீவிர மாற்றங்களைக் கணக்கில் கொண்டிருக்க வேண்டும்.
- வெளியிலிருந்து பண்ணைக்கு வரும் இடுபொருளுக்கான மானியம், ஆராய்ச்சி, சரியான விலை எல்லாம் இன்றைய மானியத்திலிருந்து இனி மாற்றி அமைக்கப்பட்டு உயிரினத்திற்கும், சூழலுக்குமான சேவை விலை எனச் சேர்த்து, இயற்கைச் சூழலுக்கு நன்மை பயக்கும் விவசாய வழிமுறைகளை ஊக்குவிப்பதாக அமைய வேண்டும்
- நன்செய், மானாவாரி, மலை விவசாயம் என வெவ்வேறு சூழலின் உழவியல் கூறுகளுக்கேற்ப சிறந்த சரியான வழிமுறைகளை மட்டுமே முன்னிருத்த வேண்டும்.
- உணவுப் பாதுகாப்பு சட்டம் நீடித்து நிலைக்கக்கூடியதன்று. அதற்கு மாற்றாக பாதுகாப்பான உணவுப்பயிர்கள்- சிறுதானியம், எண்ணை வித்துக்கள், காய், கனிகள் எல்லாம் நஞ்சில்லாமல் விளைவிக்க ஊக்குவிக்க வேண்டும். ஆதிரெங்கத்தில் நெல் திருவிழா திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம் ஆதிரெங்கம் கிரியேட் இயற்கை வேளாண் பயிற்சி மற்றும் ஆராய்சி மையத்தில் வரும் மே 30 – சனி; 31 - ஞாயிறு கிழமைகளில் தேசிய அளவிலான நெல் திருவிழா நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்துகொள்ள நமது நெல்லை காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன் அழைப்பு விடுத்துள்ளார். விழாவானது நமது நெல்லை காப்போம் தேசிய ஒருங்கிணைப்பாளர் எஸ்.உஷாகுமாரி தலைமையிலும், உழவர்களின் நலனுக்காக போராளி திரைப்படத்துறை ரோகிணி, சேர்மன் பேரா.பி. துரைசிங்கம் முன்னிலையிலும், தமிழக அரசு வேளாண்மைத்துறை இயக்குனர் முனைவர் மு.இராஜேந்திரன் இ.ஆ.ப விழா பேருரையாற்றவும், திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.மதிவாணண் இ.ஆ.ப விழா சிறப்புரையாற்றவும், பாதுகாப்பான உணவு குறித்து மக்கள் இயக்கம் கவிதா குருகந்தி பாரம்பரிய விதை நெல்லை உழவர்களுக்கு வழங்கி சிறப்பிக்கவும், மருத்துவர் கு. சிவராமன் போன்ற வல்லுனர்கள் கருத்துரை வழங்கவும் இசைந்துள்ளார்கள். விழாவில் அறுபது நாள் முதல் நூற்றி ஐம்பது நாள் வயதுடைய பாரம்பரிய விதை நெல் வறட்சி, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களை தாங்கி வளரக்கூடிய நெல் ரகங்கள், களையை கட்டுப்படுத்தக்கூடிய நெல் ரகங்கள், உவர் நிலத்திற்கான நெல் ரகங்கள், கடலோர பகுதிகளுக்கான நெல் ரகங்கள் என சன்னரகம், நடுத்தர ரகம், மோட்டா ரகம் என மருத்துவ குணம் கொண்ட நூற்றி ஐம்பத்தி மூன்று வகையான பாரம்பரிய விதை நெல் ஐயாயிரம் உழவர்களுக்கு தலா 2 - கிலோ வீதம் விழாவில் வழங்கப்பட உள்ளது. இவ்விழாவில் கலந்துகொள்ளும் விவசாயிகள் முன்பதிவு செய்வது அவசியம், தொலைபேசி : 04369 – 220954 அலைபேசி : 9842607609 என்ற எண்களில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என நமது நெல்லை காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன் தெரிவித்துள்ளார். செவிக்குணவு இல்லாத போழ்து
- கன இயந்திரங்கள், நச்சு வேதிப் பொருட்கள், மரபீனி மாற்றுப்பொருட்கள், போன்ற பொருந்தாத் தொழில்நுட்பங்கள் தடை செய்யப்பட வேண்டும் அல்லது அவற்றின் பயன்பாடு சீரிய கட்டுப்பாடு மற்றும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்
- பொது அறிவுத் தளம் மற்றும் மரபீனி வளங்களும் தனியார் கையில் சிக்காமல் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்
- முறைசாரா தகவல் மற்றும் அறிவுக் களங்களுக்குச் சரியான இடம் அளிக்கப்பட வேண்டும்
- விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களில் நேரடியாக வேலை செய்வோரின் பங்களிப்புடனே ஆய்வுகள் நடைபெற வேண்டும். மேலும் ஆராய்ச்சிகளும் வேதிப்பொருட்களற்ற இயற்கைச் சூழலில் நடத்தபட வேண்டும்.
- சூழலியல் உழவிற்கும், இயற்கை விவசாய ஆய்வுக்கும் அதிகமான முதலீடுகள் செய்ய வேண்டும். மேலும் இவை நீடித்த நிலைத்த தன்மை கொண்டவையாகவும், சூழல் நலத்தைக் கருத்தில் இருத்தியவையாகவும் இருக்க வேண்டும்.
அவர்கள் மேலும் இதே போன்று அறிஞர்கள், விஞ்ஞானிகளுடன் விவசாயிகளையும் விவசாய நிலங்களில் வேலை செய்வோரையும் கலந்து பல கலந்துரையாடல்களும் பரிமாற்றங்களும் திட்டமிடப்படும் என்றும் உறுதி அளித்து இந்த தீர்மானத்தை வெளியிட்டனர்.
ஆதிரெங்கத்தில் நெல் திருவிழா
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம் ஆதிரெங்கம் கிரியேட் இயற்கை வேளாண் பயிற்சி மற்றும் ஆராய்சி மையத்தில் வரும் மே 30 – சனி; 31 - ஞாயிறு கிழமைகளில் தேசிய அளவிலான நெல் திருவிழா நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்துகொள்ள நமது நெல்லை காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன் அழைப்பு விடுத்துள்ளார். விழாவானது நமது நெல்லை காப்போம் தேசிய ஒருங்கிணைப்பாளர் எஸ்.உஷாகுமாரி தலைமையிலும், உழவர்களின் நலனுக்காக போராளி திரைப்படத்துறை ரோகிணி, சேர்மன் பேரா.பி. துரைசிங்கம் முன்னிலையிலும், தமிழக அரசு வேளாண்மைத்துறை இயக்குனர் முனைவர் மு.இராஜேந்திரன் இ.ஆ.ப விழா பேருரையாற்றவும், திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.மதிவாணண் இ.ஆ.ப விழா சிறப்புரையாற்றவும், பாதுகாப்பான உணவு குறித்து மக்கள் இயக்கம் கவிதா குருகந்தி பாரம்பரிய விதை நெல்லை உழவர்களுக்கு வழங்கி சிறப்பிக்கவும், மருத்துவர் கு. சிவராமன் போன்ற வல்லுனர்கள் கருத்துரை வழங்கவும் இசைந்துள்ளார்கள்.
விழாவில் அறுபது நாள் முதல் நூற்றி ஐம்பது நாள் வயதுடைய பாரம்பரிய விதை நெல் வறட்சி, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களை தாங்கி வளரக்கூடிய நெல் ரகங்கள், களையை கட்டுப்படுத்தக்கூடிய நெல் ரகங்கள், உவர் நிலத்திற்கான நெல் ரகங்கள், கடலோர பகுதிகளுக்கான நெல் ரகங்கள் என சன்னரகம், நடுத்தர ரகம், மோட்டா ரகம் என மருத்துவ குணம் கொண்ட நூற்றி ஐம்பத்தி மூன்று வகையான பாரம்பரிய விதை நெல் ஐயாயிரம் உழவர்களுக்கு தலா 2 - கிலோ வீதம் விழாவில் வழங்கப்பட உள்ளது.
இவ்விழாவில் கலந்துகொள்ளும் விவசாயிகள் முன்பதிவு செய்வது அவசியம்,
தொலைபேசி : 04369 – 220954
அலைபேசி : 9842607609
என்ற எண்களில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என நமது நெல்லை காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.