தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி

மரங்கொத்தி:

மரங்கொத்தியில் பலவகைகள் உண்டு. அதில் நாம் அன்றாடம் காணக் கூடிய பறவை இதுவே. இதன் கீ.. கீ.. என்று கரையும் குரலை வைத்து இதனை எளிதில் அடையாளம் கொள்ளலாம். மரத்தில் அழகாய்ச் சாய்ந்த வாட்டில் ஒயிலாய் இவை பூச்சிகளை வேட்டையாடும். கழுத்தைத் திருப்பி அங்கும் இங்கும் இவை பார்ப்பது கண்ணுக்குப் பெரும் விருந்து.

தோற்றம்:

மைனா அளவில் (28 முதல் 30 செ.மீ வரை) இருக்கும். ஆண்களுக்குச் சிகப்புக் கொண்டையும், பெண்களுக்கு அதில் கருப்புக் கோடுகளும் இருக்கும். கழுத்தின் அடியில் வெள்ளை நிறத்தில் கட்டம், கட்டமாக இருக்கும். முதுகில் அரக்கும்,சிகப்பும், மஞ்சளும் கலந்த ஒரு மின்னும் வண்ணம் தெரியும் மிக அழகிய பறவை இது. மூக்கு ஊசி முனையைப் போல் கூர்மையாக இருக்கும்.

மேலும் படிக்க...»

செவிக்கு உணவு இல்லாத போது

முளைகட்டிய கேழ்வரகு பால்

ராகி என்றும், கேப்பை என்றும் அழைக்கப் படும் கேழ்வரகு ஒரு மிகச் சத்துள்ள புஞ்சைத் தவசம் ஆகும். கேழ்வரகை 10மணி நேரம் ஊறவைத்து, பின் ஒரு துணியில் மூடி வைக்கவும். மூடி வைத்திருக்கும் கேழ்வரகை 6 மணி நேரம் கழித்து எடுக்கவும். 6 மணி நேரத்தில் கேழ்வரகு முளைத்து இருக்கும்.

தயார்.முளைகட்டிய கேழ்வரகை அரைத்து பால் எடுத்து நன்றாக வடிகட்டி சிறிது வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சிறிது ஏலக்காய் பொடி போடவும். தேவைப்பட்டால் சிறிது நீரை சுடவைத்து சேர்க்கவும், இதனால் பச்சை வாசனை இருக்காது. முளை கட்டிய கேழ்வரகு பால் தயார்.

மேலும் படிக்க...»

பாரம்பரிய உணவுத் திருவிழா - நாச்சாள்

நாம் மறந்து போன தமிழர் பாரம்பரியத்தையும் தமிழர் கலாசாரத்தையும் மீட்டெடுத்து, இன்றைய இளைய சமுதாயத்தினரும் அன்றைய மூத்த இளைஞர்களைப் போல் என்றும ஆரோக்கியமாகவும், இளமை, சுறுசுறுப்பு, பக்குவம் என்று தங்களை மேன்மைப் படுத்திக் கொண்டு நம் வாழ்வியலை திரும்பிப் பார்க்க வைக்க இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா அவர்களின் ஆசியுடன் 'பிரபஞ்சம்' என்ற சென்னையை சேர்ந்த தன்னார்வ அமைப்பு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சியில் பல வாழ்வியல் பயிற்சிகளையும் ஆர்வமுள்ள இளைய சமுதாயத்தினருக்கு கொண்டு சேர்க்கிறது. இயற்கை விவசாயப் பயிற்சி, இயற்கை வாழ்வியல் பயிற்சி, இயற்கை முறையில் வீட்டுத் தோட்டம், மருந்தில்லா இயற்கை மருத்துவம், சிறுதானிய செய்முறைப் பயிற்சி, தமிழர் (நம்) உணவின் ரகசியம் என்று பல விழிப்புணர்வுப் பயிற்சிகளை தமிழ்நாட்டில் பல இடங்களில் நடத்திவருகிறது.

மேலும் படிக்க...»

 

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org