தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்கு உணவு இல்லாத போது


முளைகட்டிய கேழ்வரகு பால்

ராகி என்றும், கேப்பை என்றும் அழைக்கப் படும் கேழ்வரகு ஒரு மிகச் சத்துள்ள புஞ்சைத் தவசம் ஆகும். கேழ்வரகை 10மணி நேரம் ஊறவைத்து, பின் ஒரு துணியில் மூடி வைக்கவும். மூடி வைத்திருக்கும் கேழ்வரகை 6 மணி நேரம் கழித்து எடுக்கவும். 6 மணி நேரத்தில் கேழ்வரகு முளைத்து இருக்கும்.

முளைகட்டிய கேழ்வரகை அரைத்து பால் எடுத்து நன்றாக வடிகட்டி சிறிது வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சிறிது ஏலக்காய் பொடி போடவும். தேவைப்பட்டால் சிறிது நீரை சுடவைத்து சேர்க்கவும், இதனால் பச்சை வாசனை இருக்காது. முளை கட்டிய கேழ்வரகு பால் தயார்.

பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிக் குடிக்கும் சத்தான உணவு இந்தப் பால். எளிதில் சீரணமாகும். நார்சத்து, இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்டது. வயிற்றுப் புண்ணிற்கு நல்ல மருந்து. உயிர்ச் சத்து அதிகம் கொண்டது.

நம் பாரம்பரிய உணவு முறைகளில், தாய்ப்பாலுக்கு அடுத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கப் பட்ட முதல் வெளி உணவு இந்த முளைகட்டிய கேழ்வரகுப் பால்தான். இதன் கால்சியம் ஊட்டும் திறன் தாய்ப் பாலை விடவும் அதிகமானது!

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org