பாஜ்ரா என்றும், pearl millet என்றும் அழைக்கப்படுக் கம்பின் நற்குணங்களை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். வளரும் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் உகந்த கம்பு மாவில் சப்பாத்தி என்று நாம் தமிழில் அழைக்கும் ரொட்டி செய்வது எப்படி என்று பார்ப்போம்...
முழுக் கட்டுரை »
இயற்கையின் உயரிய படைப்பு மனிதன். மனிதனின் உடல்திறனும்,மூளை திறனும் அளவற்றது. இயற்கை நெறியில், இயற்கை சூழலில் இயற்கை உணவில், இயற்கை வாழ்வியலில் இருந்தபொழுது மனிதனுக்கு உயிரோட்டமுள்ள தூய காற்று, நீர், உணவு ,இருப்பிடம் இலைகளால் வடிகட்டிய கதிரவன் ஒளி, இயல்பான உழைப்பு, உயரிய பண்புள்ளம் எல்லாம கிடைத்தது. எனவே எங்கும் மா முனிவர்களும், ஞானிகளும், அறச்செம்மல்களும், மேதைகளும் நிறைந்து காணப்பட்டனர். அமைதியும் மகிழ்ச்சியும் சூழ்ந்திருந்தது. வேதங்களும், உப நிடதங்களும், அறநெறி நூல்களும் நித்தம் நிறைவேற்றப்பட்டன.
மேலும் படிக்க...»
மே 2013 , 29-30 தேதிகளில் ஆரோவில் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் இயற்கை விவசாயப் பயிற்சி மையத்தில் “உயிர்ப்பன்மயமும் இயற்கை விவசாயமும்” என்ற தலைப்பில் ஒரு பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் பயிலரங்கில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பெண் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஆரோவில்லைச் சார்ந்த பன்மயம் நிறைந்த காடான பிச்சாண்டிகுளம் காட்டில் இந்தப் பயிலரங்கு துவங்கியது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜாஸ் ப்ரூக்ஸ் என்னும் இயற்கைப் பாதுகாவலர், முதலில் பன்மயத்தைக் காப்பதின் முக்கியத்துவத்தைக் குறித்தும், 30 ஆண்டுகளாகத் தான் நட்டு வளர்த்த காட்டைக் குறித்தும் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். “சில மரங்களின் பெயர்களைக் கேள்விப்பட்டிருக்கிறோமே தவிர, நேரில் பார்த்ததில்லை; மற்றும் சில மரங்களை தினமும் பார்க்கிறோமே தவிர அவற்றின் பெயரோ, குணமோ நமக்குத் தெரிவதில்லை; இங்கு நம் கிராமங்களில் உள்ள இத்தனை மரங்களையும், செடிகளையும் ஒரே சமயத்தில் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய விஷயம்”, என்றார், அதே பகுதியில் விவசாயம் செய்யும் ஒரு விவசாயி.
மேலும் படிக்க... »