சீன அரசு ஒரு நவீன திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது. உலகிலேயே சீனாவில்தான் மிக அதிகமான சிறு கிராமங்கள் உள்ளன. அங்குள்ளோர் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தங்கள் விளைச்சலைத் தாங்களே உண்டு, தன்னிறைவுடன் , தற்சார்புடன் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் எல்லோரும் தற்சார்புடன் இருந்தால் வளர்ச்சி அடைவது எப்படி? பொருளாதாரமும், நகரமயமாக்கலும், நுகர்ச்சியும் இல்லாவிடில் மேம்படுத்துவது எப்படி? காணி நிலத்தில் தற்சார்புடன் வாழும் உழவன் வேலையில்லாதவன் அல்லவா? வேலை செய்வதுதானே வளர்ச்சியின் அறிகுறி?. இவ்வாறு மிக நவீனமாக யோசிக்கும் சீன அரசு, 25 கோடி மக்களைக் கிராமங்களில் இருந்து வலுக்கட்டாயமாக நகரங்களுக்கு இடம் பெயர்க்கும் ஒரு பெரும் திட்டத்தில் இறங்கியுள்ளது.
முழுக் கட்டுரை »
“உணவெனப்படுவது நிலத்தோடு நீரே” என்கின்றது நமது பழம் நூல். சென்ற இதழில் எவ்வாறு உணவின் உரிமை அமெரிக்காவில் பறிக்கப்படுகின்றது என்பதைப் பார்த்தோம். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், உங்கள் பண்ணையில் பால் உற்பத்தி செய்து அதை நீங்கள் மட்டும்தான் குடிக்கலாம், அதுவும் பண்ணையிலேயே - வேறு ஒருவருக்கு அதைக் கொடுக்கும் உரிமையோ வேறு இடத்திற்குக் கறந்த பாலைக் கொண்டு செல்வதோ சட்டப்படி குற்றம். “என் உடல் நலனுக்கு இந்த உணவை நான் சாப்பிடலாம்” என்று உங்களுக்கு ஒரு அரசின் நிலைப்பாட்டிற்கு மாற்றான ஒரு கருத்து இருந்தால் அது 'தவறு' என்றும், 'சட்டப்படி குற்றம்' என்றும் கருதப்படலாம். தெரிவுகளில் தலையாய நாடு (nation of choice) என்று பரவலாகக் கருதப்படும் அமெரிக்காவில், அடிப்படை உரிமைகளைத் தெரிவு செய்யும் உரிமை மிக மிகக் குறைவு என்பது நம்மை வியப்பில் ஆழ்த்தலாம் - ஆனால் உண்மை நிலவரம் அதுதான்.பாதுகாப்பான உணவு என்பது பெரும் நிறுவனங்களால் பதப்படுத்தப்பட்டு வருவதே என்பது போல் எண்ணற்ற சட்ட திருத்தங்கள் அங்கு செய்யப்பட்டு விட்டன.
மேலும் படிக்க... »
தற்சார்பு வாழ்வியலில் தன்னாட்சி (பூரண சுயராச்சியம் - absolute self rule) என்றால் என்ன என்று ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம். பலகோடி தனிமனிதர்களால் உருவான சமூகத்தைச் சீர் செய்ய ஒரு சில தனிமனிதர்களால் இயலுமா என்பது கேள்வி.
தற்சார்பு என்பதன் கோட்பாடு என்ன? தன் தேவைகளுக்குத் தன்னைச் சார்ந்து இருப்பது தற்சார்பு. இதில் மனிதனுக்கு உடல் ரீதியாகவும், மனம் ரீதியாகவும் இரண்டுவகையான தேவைகள் உள்ளன. உடல் ரீதியான நேர்மையான தேவைகள் எளிதாய் நிறைவுசெய்யக் கூடியவை; அடிப்படையான இல்லற ஒழுக்கமும், நேர்மையான ஒரு தொழிலும் இருந்தால் நம் உடல் ரீதியான தேவைகள் எளிதில் நிறைவு பெற்று விடும்.
மேலும் படிக்க...»