தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி

மழை வேட்கும் குயில்


ஒட்டு மொத்தத் தமிழ்நாடும் கோடையின் வெப்பத்திலும், வறட்சியிலும் வாடிக்கொண்டிருக்கும் வைகாசி மாதம் இது. மழை வராதா என்ற ஏக்கம் அனைவர் மனதிலும் தோன்றுகிறது. “வான மழை இல்லையென்றால் வாழ்வுண்டோ” என்று பாரதியைப் போல் ஏங்குகிறோம். மழை வருவதற்கு முன்னால் அழகிய பறவைக்குரல் ஒன்று நம்மை உற்சாகப் படுத்துகிறது. அதுதான் அக்கோ குயில் அல்லது பருந்து குயில் என்று பெயருடைய மழை வேட்கும் குயில். Hierococcyx varius என்ற பல்லுடைபடும் பெயரால் படித்தவர்களால் அழைக்கப்படும் இப்பறவைக்கு ஆங்கிலத்தில் Common Hawk-Cuckoo என்று பெயர். இதன் ஏங்கும் குரலும் இறைஞ்சும் ஓசையும் பல மொழிகளில் இதற்குப் பல பெயர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்தியில் இதன் பெயர் “பியா கஹா?” (எங்கே என் காதலன்); வங்க மொழியிலோ “சோக் கெலோ” (என் கண்ணே போச்சு!); மரத்தியில் “பாவோஸ் ஆலா” (மழை வருது); ஆங்கிலத்தில் Brain Fever (மூளைக் காய்ச்சல்).

மேலும் படிக்க...»

புதிய புலவர்கள் - பாபுஜி

அறிவியல் நுண்ணறிவை தேடி எங்கள் பயணம்” என்ற பெயரில் இவர்கள் நம் உலகோடு விளையாடும் மோசமான விளையாட்டுகளில் ஒரு சிறிய விகிதமாவது நம் உலகையே அழித்து தன்னுள்ளே விழுங்கக்கூடிய கருங்குழியை (Black hole) உருவாக்கி விடக்கூடும். இது எதோ அறிவியல் கற்பனைக்கதை போல உள்ளதா? அநேக அறிவியலாளர்கள் இத்தகைய கருத்துக்களை முட்டாள்தனமான கற்பனை என்று ஒதுக்கினாலும் அவர்களின் சக அறிவியலாளர்களால் சொல்லப்பட்ட இப்படியான கற்பனைகள்தான் (அணு சக்தி பாதுகாப்பானது, மரபீனிகள் பாதுகாப்பானவை, பூச்சுக்கொல்லிகள் பாதுகாப்பானவை, ப்ளூரைட் பாதுகாப்பானது, தடுப்பு மருந்துகள் பாதுகாப்பானவை, இன்னும் இது போன்ற பலப்பல கருத்துக்கள்) இன்று நமக்கு பெரும் பொருட்சேதத்தையும் பேரழிவையும் உயிரிழப்பையும் தர வல்ல தொழில் நுட்பங்கள் ஆகிவிட்டன. இதிலிருந்து அறிவியல் மூலமாக உண்மை என்று உலகுக்கு உணர்த்தக்கூடிய ஒன்றே ஒன்று என்னவென்றால் நம் அறிவியலாளர்கள் தம் சோதனைகளின் விளைவுகளை அளவுக்கு மீறிய‌ அறியாமையினால் மிகக்குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்பதே!

மேலும் படிக்க...»

 

விசும்பின் துளி

கருங்கால் வரகும் இருங்கதிர்த் தினையும் - பாமயன்

சிறுதானியங்கள் என்று குறிப்பிடப்படும் அருந்தவசங்களான தினை, வரகு, குதிரைவாலி, சாமை, காடைக்கண்ணி போன்றவை இன்று மக்களிடம் புதியதொரு வாய்ப்பைப் பெற்று வருவதைக் காண முடிகிறது. தமிழகமெங்கும் மரபுசார் உணவுத் திருவிழாக்கள் என்ற பெயரில் இந்த அருந்தானியங்களின் சமையல் களைகட்டி வருகிறது. தானியம் என்ற சொல் 'தான்யா' என்ற வடமொழி அடிப்படையான சொல் என்றும், தவசம் என்பது தூய தமிழ்ச் சொல் என்றும் மொழியறிஞர் பாவணர் குறிப்பிடுவார். சங்க இலக்கிய காலத்தில் தினையும் வரகும் பிற அருந்தவசங்களும் மக்களிடம் குறிப்பிட்ட இடத்தைப் பிடித்திருந்ததைக் காண முடிகிறது. உணவு என்றாலே அது வகுகும், தினையும், கொள்ளும், அவரையும்தான் என்று அடித்துச் சொல்லுகிறார் புலவர். 'கருங்கால் வரகே இருங்கதிர்த்தினையே சிறுகொடிக்கொள்ளே பொறிகிளர் அவரையொடு இந்நான்கல்லது உணாவும் இல்லை' (புறநானூறு: 335) என்று மாங்குடிக் கிழாரினால் உயர்த்திக் கூறப்படும் வரகு, தினை போன்ற தவசங்கள் தமிழகத்தின் வானவாரி (மானம்பாரி) நிலத்தில் விளைந்து மிகுந்த பயனைத் தந்தவை.

மேலும் படிக்க... »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org