தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பாரம்பரிய‌ நெல் திருவிழா - அனந்து

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் புளியங்குடியைச் சேர்ந்த தமிழகத்தின் முன்னோடி இயற்கை விவசாயியான‌ திரு.கோமதிநாயகம் அவர்கள் சென்னையில் ஒரு சொற்றுரை ஆற்றும் பொழுது, “ஒரு நெல் நட்டால் நூறு நெல் ஆகிறது; இன்னும் ஏன் உயர் விளைச்சலுக்கு ஆசைப்பட வேண்டும். விவசாயத்தில் ஆசைக்கு இடமுண்டு, பேராசைக்கு அல்ல” என்று இயற்கை விவசாயத்தைப் பற்றியும் நவீன விதைகளைப் பற்றியும் பேசினார். அவ்வுரையால் பெரிதும் தாக்கம் ஏற்படுத்தப் பட்ட இயற்கை விவசாய நண்பரொருவர் தற்சார்பு வேளாண்மையை ஆதரித்து இவ்வாறு ஒரு வெண்பா எழுதினார்...

முழுக் கட்டுரை »

அக்கரை பார்வை

தேபல் தேப் அவர்களின் சாதனைக‌ளையும், தனி ஒரு மனிதராக‌ 900க்கும் மேற்பட்ட நெல் வகைகளை அவர் சேமித்து பாதுகாத்து வருவதையும், கண்டோம். இவர் தனது இயற்கை பயணத்தை திரு. மாதவ் காட்கில் என்னும் தலை சிறந்த அறிவியலாளரின் கீழ் தொடங்கினார். அவர் சூழலியலிலும், குறிப்பாக‌ மேற்குத் தொடர்ச்சி மலையின் உயிர்ப்பன்மையம் பற்றிய ஆய்விலும் ஆழ்ந்த அறிவும் அக்கறையும் கொண்டவர். அவருடன் பணியாற்றியதை ஒரு பெரும் பேறாக கருதுகிறார். தேபல் தேப் மனித இன வல்லுனராக (anthropologist) வடிவெடுத்ததும் அப்படி ஒரு நிகழ்வுதான். கர்நாடகாவில் மங்களூருக்கு அருகில் கடற்கரை கிராமங்களில் மீனவர்களிடையே ஆராய்ச்சி செய்கையில், எப்படி வழி வழியாக மீன் பிடி திறன் மற்றும் பழக்கங்கள் வந்தன என்று நுணுக்கமாய் ஆய்ந்தார். எவ்வாறு ஒவ்வொரு பிரிவும் (அவர்கள் பின் வந்தவர்களாயின் வேறு விதமாகவும், முதலில் வந்தவர்கள் ஒரு விதமாகவும்) வலை வீசுவதில் கூட வித்தியாசமாய் இருந்தனர். ப‌ல்காலமாய் அங்குக் குடியுள்ள பிரிவினர், மிகவும் கடினமான முறையில் தலையின் மேலிருந்து சுழற்றி எறிகிறார்கள் என்றும் அதன் பின் வந்த குழுக்கள் வேறு மாதிரி எறிகிறார்கள். அப்படி அவர்கள் எறியும் விதத்திலிருந்தே எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்று கண்டு விட முடியும் என்றார்

மேலும் படிக்க... »

 

மாடல்ல மற்றயவை

மாடு என்ற தமிழ் சொல்லுக்கு செல்வம் என்றொரு பொருள் உண்டு. பண்டைக்காலத்தில் ஒருவருடைய செல்வச் செழிப்பு அவரிடம் உள்ள மாடு கன்றுகளின் எண்ணிக்கையையும், ஊட்டத்தையும் வைத்தே சொல்லப்பட்டது, இரு மன்னர்களுக்கிடையில் போர் ஏற்பட்டால் ஒரு மன்னர் இன்னொருவருடைய ஆநிரை-மாடுகளை கவர்ந்து செல்வது போரின் ஆரம்பமாக கருதப்பட்டது. வழிபாடுகள், யாகங்கள் ஆகியவற்றை மாட்டு கொட்டகைகளில் வைத்து செய்வது சிறப்பாக இருந்தது. பசு லட்சுமியின் அம்சமாக போற்றப்பட்டது. இப்போது உள்ள சிமெண்ட் மற்றும் ‘பிளாஸ்டிக் டைல்ஸ்’ தரைகளுக்கு முன்னால் இருந்த மண் தரைகளையும், வாசல்களையும் சாணிக்கரைசலால் மெழுகுவது வழக்கம்.

மேலும் படிக்க... »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org