தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்குணவு இல்லாத போழ்து

கம்பு கிழங்கு சப்பாத்தி

பாஜ்ரா என்றும், pearl millet என்றும் அழைக்கப்படுக் கம்பின் நற்குணங்களை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். வளரும் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் உகந்த கம்பு மாவில் சப்பாத்தி என்று நாம் தமிழில் அழைக்கும் ரொட்டி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கம்பு மாவு - 1 1/2 கோப்பை

நன்கு நறுக்கிய வெங்காயம் - 1/4 கோப்பை

சிறு துண்டுகளாய் நறுக்கிய கொத்துமல்லித் தழை - தேவையான் அளவு

இஞ்சி-பச்சை மிளகாய் இரண்டையும்கலந்து அரைத்த விழுது - 2 சிட்டிகை

குறுமிளகுப் பொடி 1/2 சிட்டிகை (இதனுடன் சீரகப் பொடி கலந்தால் அது ஒரு சுவையாக இருக்கும்)

காய்ந்த மாங்காய்ப் பொடி 2 சிட்டிகை (இது வட நாட்டில் புளிப்புக்காய்ப் பயன் படுத்துவது. நாம் தேவையானால் புளித்தண்ணீரோ அல்லது வெந்நீரில் புளியை ஊறவைத்தோ கலந்து கொள்ளலாம்)

மசாலாப் பொடி - 1 சிட்டிகை (விருப்பப்பட்டால்)

உப்பு - தேவைக்கேற்ப‌

செய்முறை

இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் இட்டுச் சுடுநீரில் கெட்டியான பதத்திற்கு சப்பாத்தி மாவுபோலவே பிசைந்து கொள்ளவும். கோதுமைச் சப்பாத்தி இடுவது போலவே வர மாவு தடவி இட்டுப் பின் நெய்யில் பொரித்து எடுக்கவும். பச்சைபயறு குருமாவுடன் இதை உட்கொண்டால், அனைத்து ஊட்டங்களும் அடங்கிய ஒரு சமச்சீர் உணவு தயார்!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org