தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

புதிய புலவர்கள் - பாபுஜி

அறிவியலா அழிவியலா - மைக் ஆடம்ஸ் (தமிழில் பாபுஜி)

(சென்ற இதழ் தொடர்ச்சி)

மூலம்: http://www.naturalnews.com/035790_scientific_suicide_humans.html

“அறிவியல் நுண்ணறிவை தேடி எங்கள் பயணம்” என்ற பெயரில் இவர்கள் நம் உலகோடு விளையாடும் மோசமான விளையாட்டுகளில் ஒரு சிறிய விகிதமாவது நம் உலகையே அழித்து தன்னுள்ளே விழுங்கக்கூடிய கருங்குழியை (Black hole) உருவாக்கி விடக்கூடும். இது எதோ அறிவியல் கற்பனைக்கதை போல உள்ளதா? அநேக அறிவியலாளர்கள் இத்தகைய கருத்துக்களை முட்டாள்தனமான கற்பனை என்று ஒதுக்கினாலும் அவர்களின் சக அறிவியலாளர்களால் சொல்லப்பட்ட இப்படியான கற்பனைகள்தான் (அணு சக்தி பாதுகாப்பானது, மரபீனிகள் பாதுகாப்பானவை, பூச்சுக்கொல்லிகள் பாதுகாப்பானவை, ப்ளூரைட் பாதுகாப்பானது, தடுப்பு மருந்துகள் பாதுகாப்பானவை, இன்னும் இது போன்ற பலப்பல கருத்துக்கள்) இன்று நமக்கு பெரும் பொருட்சேதத்தையும் பேரழிவையும் உயிரிழப்பையும் தர வல்ல தொழில் நுட்பங்கள் ஆகிவிட்டன. இதிலிருந்து அறிவியல் மூலமாக உண்மை என்று உலகுக்கு உணர்த்தக்கூடிய ஒன்றே ஒன்று என்னவென்றால் நம் அறிவியலாளர்கள் தம் சோதனைகளின் விளைவுகளை அளவுக்கு மீறிய‌ அறியாமையினால் மிகக்குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்பதே!

இதை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுன்றால் அறிவியலாளர்கள் நம் உலகுக்கே அச்சுறுத்தலாக விளங்குகிறார்கள் எனலாம். இவ்வுலகில் நாம் வாழ ஏதுவான சூழலையே அவர்கள் முற்றிலுமாக அழிக்குமுன்னர் அவர்களின் சோதனைகள் ஒரு கட்டுக்குள் நிறுத்தப்படவேண்டியது அவசியமாகிறது.

அறிவியலாளர்களால் தம் நிகழ் கால சோதனைகளின் நீண்ட கால விளைவுகளை முன்பே எதிர்நோக்குவது இயலாத ஒன்று என்பது வரலாறு நமக்கு கற்பித்த பாடம். நம் அண்டவெளியின் இயல்பு நம் மேதைகளால் கூட புரிந்து கொள்ள இயலாத அளவு சிக்கலானது என்ற போதும் அவர்கள் தம்மை கடவுளாக நினைத்துக்கொண்டு அதன் இயல்போடு விளையாடும்போது எவருமே எதிர்பார்க்காத விளைவுகள் நேரலாம், நேர்ந்துகொண்டிருக்கின்றன என்பதும் உண்மையே. மர்பி என்னும் சிந்தனையாளர் ஒரு மிகப் பிரபலமான சில‌ இயற்கை விதிகளைக் கூறியுள்ளார்.

“1. தவறுகள் நிகழும்”

“2. தவறுகள் ஏற்படும்போது மிகவும் இடைஞ்சலான நேரத்திலேயே அவை நேரும்”

என்று. நம் அறிவியலாளர்களின் பரிசோதனைகளைப் பார்க்கும் போது மர்பி மிகுந்த நன்னம்பிக்கை கொண்டவர் என்றும், தவறுகளை மிகக் குறைத்தே மதிப்பிட்டிருக்கிறார் என்றும் தோன்றுகிறது!

இது வரை நம் உலகில் ஐந்து முறை அனைத்துயிர் அழிவுகள் நிகழ்ந்துள்ளன. நம் உலகின் ஆறாவது அனைத்துயிர் அழிவு அறிவியலால் நிகழக்கூடிய ஒன்றாகவே இருக்கும். அது அறிவியல் உண்டாக்கிய உலகளாவிய கதிர்வீச்சினாலோ, கட்டுப்படுத்த முடியாத மரபீனி தூசு நிகழ்வினாலோ, நானோ தொழில் நுட்பம் சார்ந்த பெரு விபத்தினாலோ, செயற்கைஅறிவு படைத்த இயந்திரங்கள் உலகை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாலோ அல்லது நம்மால் முற்றிலும் கற்பனை கூட செய்து பார்க்க இயலாத கொடூரமான புதியதொரு அறிவியல் நிகழ்வினாலோ நடக்கலாம். நாம் ஏற்கனவே புகுஷிமா கதிர்வீச்சினால் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம். இது போல் இன்னும் என்னென்ன அச்சுறுத்தல்களை அறிவியலின் பெயரால் நாம் சந்திக்கப்போகிறோமோ?

“எதுவும் சரிதான்” என்கிற மேற்கத்திய சித்தந்ததினால் உந்தப்பட்டு செயல்முறையிலிருக்கும் அறிவியல் சோதனைகள், “மனித இன தற்காப்பு” என்கிற கட்டுக்குள் கொண்டு வரப்படாவிட்டால் நம் மனித இனமே( நல்லுணர்வுடன் செய்யப்படுகின்ற) அறிவியல் சோதனைகளின் எதிர்பாராத மோசமான விளைவுகளால் அழிந்து போக வேண்டியதுதான்!

நாம் அனைவரும் இத்தகைய “வாழ்வியலை பாதிக்கும்” அறிவியலின் தற்கொலை முயற்சியில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மனித இனத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் தலையாய 10 “அறிவியல்” முயற்சிகள் இங்கே தரப்பட்டுள்ளன:

1. அணு சக்தி ( குறிப்பாக புக்குஷிமா).

2. மரபீனிகள் ( தம்மைத்தாமே மறு பதிப்பு செய்து கொள்ளும் மரபீனி தூசுகள்).

3. நானோ தொழில் நுட்பம் ( தம்மைத்தாமே மறு பதிப்பு செய்து கொள்ளும் மிக நுண்ணிய இயந்திரங்கள்).

4. உயிரி சார்ந்த போர்க்கருவிகள் ( தம்மைத்தாமே மறு பதிப்பு செய்து கொள்ளும் நுண்ணிய ஆயுதங்கள்).

5. வளிமண்டல சோதனைகள் (HAARP மற்றும் உயர் மட்ட தூவல்கள், i.e. high altitude sparaying).

6. செயற்கை அறிவு (கொலை செய்யவல்ல “ஆளற்ற பறவை இயந்திரங்களுடன் - drones” சேரும்போது).

7. வேகத்துகள் இயற்பியல் சோதனைகள் (Large Hadron Collider).

8. மகரந்த சேர்க்கையை தடுக்கும் செயற்கை வேதிப்பொருட்கள் (தேனீ இனத்தை அழிக்கும் “செயற்கையில் உருவாக்கப்பட்ட வேதிப்பொருட்களை கொண்டு செய்யப்பட் ட” பூச்சுக்கொல்லிகள்).

9. அணு ஆயுதங்கள்.

10. ஆயுத மயமாக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் (உயிருள்ள கலப்பின வைரல் கிருமிகளை மனிதர்களின் உடலில் ஊசி மூலம் ஏற்றுதல்).

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org