தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நேர்காணல்: உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - ஜகதீஷ், கதிரவன்

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்”

என தனது பள்ளுப் பாட்டில் தேசத்தின் தேவையை பதிவு செய்தான் பாரதி.

உழவையும் வணிகத்தையும் இணைத்துச் செய்யக்கூடிய அனுபவம் மிக்க விவசாயியை நாம் தாளாண்மைக்காக சந்தித்தோம்;.

பொதுவாக விவசாயம் பற்றி தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறவர்கள் துறைசார்ந்த சவால்களையும் தீர்வுகளையும் விவாதிப்பது உண்டு. ஆனால் நமது விவசாயி விவசாயத்தின், விவசாயத் தொழிலாளியின் வேலைத்தரத்தை ஒருபடி உயர்த்துகிறார்.

நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை ஓரத்தில் அமைந்துள்ள பசுமையின் மிச்சத்தில் நகராமாகிக் கொண்டிருக்கும் ஊர் புளியங்குடி. அந்த ஊரில் விவசாயம் பண்ணை ஆராய்ச்சி, விளைபொருள்கள் விற்பனை, உடல் நல ஆலோசனை, மரபு விதைகள் மீட்டுப்பணி என தமது வாழ்நாளின் மொத்த அனுபவங்களையும் சந்திக்கிற அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறார் நமது விவசாயி “ஐயா கோமதி நாயகம்”. இவர் தன் ஓய்வுக்கான வயதிலும் இயற்கை விவசாயம் செய்வோர்க்கும் இயற்கை விளைபொருள்களை தருபவர்களுக்கும் சளைக்காமல் வழிகாட்டி வருகிறார்.

“உற்பத்தியாளரே விற்பனையாளராக மாற வேண்டிய அவசியம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வுகான வேலை செய்ய வேண்டியுள்ளது”, இந்தியச் சுதந்திரம் பெறுவதற்கு அறவழிப் போராட்டம் ஒரு புறம் நடந்தாலும் கதர் உற்பத்தியும் கதர் விற்பனையும் அந்நியர்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி தந்தது “இந்நெருக்கடிக்கு காரணம் உற்பத்தியாளனே (இங்கு) வணிகனாக மாறுகிறான், என்பதுதான்.” எனும் மரிதலை காந்தியடிகளிடமிருந்து தான் கற்றுக் கொண்டதாக,” ஐயா கோமதிநாயகம் கூறுகிறார். மேலும் “கலப்பில்லாமல் உற்பத்தி செய்கிற ஒருவனால் மட்டும்தான் கலப்பற்ற விற்பனை செய்ய முடியும். இதுவே இரசாயன கலப்பற்ற விவசாயத்திற்கும், இயற்கை வேளாண் உற்பத்திப்பொருட்களின் விற்பனைக்கும் நல்ல துவக்கமாகும் என்கிறார்.

இங்கு நமது விவசாயியுடன் சேர்ந்து ஒரு குழு இயங்குகிறது. இதில் வேலுமுதலியார், அந்தோணிச்சாமி உள்ளிட்டோரின் ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது. இந்தக்குழு இயற்கை விவசாய ஆலோசனையுடன் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்தவும் செய்கிறன. ஒவ்வொரு வாரம் ஞாயிற்று கிழமைகளிலும் திரு நெல்வேலி நகரில் இயற்கை விளைபொருள் சந்தை கூடுகிறது. இச்சந்தையில் அரிசி, பருப்பு, எண்ணெய், உணவுப் பொருட்கள் என விற்பனைக்கு வழிவகுத்தல் மிகுந்த அழகுடையது. விளைபொருள்களை கெண்டுவரும் விவசாயி நேரடியாக வணிகம் செய்கின்றனர். இச்செயல்பாட்டை ஒவ்வொரு முறையும் இக்குழு கண்காணித்து உறுதி செய்கிறது என்பதும் பாராட்டுதலுக்குரியது. இங்கு விற்பனைக்கு வரும் பொருட்களை மரபு பொருட்கள், மருத்துவப் பொருள்கள் பருவகால பயிர்கள், சமையல் பொருள்கள் என தரம் பிரித்து ஒவ்வொரு தனிப் பொருள்களுக்கும் அதற்குரிய முக்கியத்துவத்தை தருகின்றனர். மருத்துவக் குணமுள்ள பொருள்களை பற்றியும் அதனை எம்மாதிரியான உடல் தன்மைக்கு எப்பொருளை தர வேண்டும் எவ்வளவு அளவு தர வேண்டும் என விற்பனை செய்பவர்களுக்கு கற்றுக் கொடுத்துகொண்டு வருகின்றனர். “இம்முறையில் நமது மரபில் உள்ளது போல், பேறுகால உணவு, பெண்களுக்கான உணவு நோவு நேர உணவு என நமது உணவையும் மரபையும் நமது தலைமுறையினருக்கு சொல்லித் தருகிறோம்” என ஐயா கோமதி நாயகம் கூறுகிறார்.

“மரபை சொல்லித் தருவது என்பது உணவை மட்டும் இன்றி விவசாயம், மருத்துவம், தனிமனித நோயெதிர்பு ஆற்றல், இலக்கியங்கள் என அனைத்தையும் நமது மீட்பு இலக்காக வைத்திருக்கிறோம். இதில் மிகுந்த கவனம் நமது மரபு விதைகளில் செலுத்திட வேண்டும். ஏறத்தாழ 20 லட்சம் விதைகளை நாம் மீட்டெடுக்க வேண்டியுள்ளது. பசுமைப்புரட்சியின் மாற்றத்திற்கு பிறகு நாம் விதைகளை நிறைய இழந்திருக்கிறோம். விதைகள் மீட்பு பணி சுணக்கமாகியும் உள்ளது.” என்கிறார்.

“ இயற்கை விவசாய பணியில் நாம் நிறைய வேலைகள் செய்ய வேண்டிய இருந்தாலும் இயற்கை விலை பொருகளின் மீது மக்களின் நம்பிக்கையும் ஆர்வமும் பெருகி வருவது புத்துணர்வாக இருக்கிறது இயற்கை வேளாண்மை – வணிகம் என்ற முயற்சியில் நம் பகுதியில் மட்டும் 25 உற்பத்தியாளர்கள் கைகோர்த்து வேலை செய்கிறோம் நம்மிடம் கிடைக்கும் விளைபொருட்களை வாடிக்கையாக தொடர்ந்து பெற்றுக்கொள்ள 60-100 நுகர்வோர் உள்ளன எங்கள் குழுவின் இந்த முயற்சி திருநல்வேலி மட்டும் அல்லாது புளியங்குடியிலும் செயலாகிறது இம்மாதிரியான அங்காடிகளும் வனிகர்களும் இணைவதில் கிடைக்கும் வெற்றியை இயற்க்கை உணவு பொருட்களாக அனைவருக்கும் கிடைக்க செய்வது நமது பொறுப்பாகும்” கோமதிநாயகம் உணர்வோடு பகிர்ந்து கொள்கிறார்

“நோயில்லாதவன் வாலிபன், கடன் இல்லாதவன் செல்வந்தன் என வாழ்ந்த சமூகத்தில் பசுமைபுரட்சிக்குபின் மாற்றமே பெரும் தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை மறு சீரமைப்பது என்பதே நம் முன் இருக்கும் தலையாயப் பணியாக கருதுகிறார்.

இம்மாதிரியான முயற்சிகளுக்கு அரசு என்ன உதவுகிறது எனில், பெரிதாக ஒன்றும் இல்லை. இவரது பணியை வட மாநிலங்களைச் சேர்ந்த சில அரசு உதவிபெறும் நிறுவனங்கள் பாராட்டி ஊக்கப்படுத்தியுள்ளன. ஆனாலும் அரசாங்கத்தை நம்பி நாம் ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை என திடமாகக் கூறுகிறார் மண்ணைப் பாதுகாப்பது. மருத்துவத்தை பாதுகாப்பது, பாரம்பரிய விதைகளை மீட்டெடுப்பது, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பது போன்ற மாந்தநேயம் மிக்கபணியில் இணையும் அனைவருடன் கைகோர்த்து பயணிப்போம். அந்த பயணத்தின் விளைவாக மக்களுக்கான ஒவ்வொரு அரசும் விவசாயிகள் பக்கம் திரும்பும். அதுவரை ஓயாமல் உழைப்போம் என உறுதியுடன் நம்மை பார்த்து சிரிக்கிறார்.

“சிவப்ப நெல், கருப்பு அரிசி, வறட்சியில் விளையும் நெல்வகைகளையும் எலும்மிச்சை எள், கம்பு சோளம் உள்ளிட்ட பாரம்பரிய பயிர்களையும் மீட்பதும் அவற்றின் மகத்துவத்தை மக்களுக்கு கற்றுக் கொடுத்து அவற்றை மீண்டும் இழக்காமல் பாதுகாக்க செய்வதுமே என் பணி” என கம்பீரமாய் நிற்கிறார் 80 வயது இளைஞன். ஐயா கோமதி நாயகம்.. அவரது வேலையின் தன்மையில் அவரது நம்பிக்கைக்கான வெற்றி மிக அருகிலேயே உள்ளது.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org