தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


சீனாவின் சிக்கல்

பொருளாதார வல்லரசான சீனா, அனைத்துப் பொருளியல் நிபுணர்களாலும் அமெரிக்காவையும், ஜப்பானையும் விஞ்சி விடும் என்று எதிர்பார்க்கப் பட்டது, படுகிறது. சீனாவில் முதலீடு செய்வது உலகப் பெருநிறுவனங்களின் பேரவாவாக இருந்தது - இன்னும் இருக்கிறது. சில பத்தண்டுகளுக்கு முன்னர், ருசியாவில் பொதுவுடைமை தோற்றது என்ற போது பொதுவுடைமையின் வெற்றிக்கு ஒரு மாதிரியாகச் சீனா கருதப் பட்டது. இந்நிலையில் சீனாவின் திடீர்ப் பொருளாதாரச் சிக்கல் உலகப் பொருளாதாரத்தைப் பெரிதும் உலுக்கி இருக்கிறது. பங்குச் சந்தைகள் தொடர் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. 2008ல் அமெரிக்கா ஓட்டாண்டியாகி விடும் நிலைமை வந்தது - இன்றும் உலகிலேயே அதிகக் கடன் உள்ள நாடாக அமெரிக்காதான் இருக்கிறது.

அய‌ர்லாந்து, கிரேக்கம் போன்ற நாடுகள் ஐரோப்பியப் பொருளாதார மாதிரியைக் கைப்பிடித்து மிகவும் ஏழ்மை நிலையை எட்டின. கிரேக்கத்தின் நிலை இன்னும் மிகவும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இம்மென்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம் என்று கடுமையான தண்டனைகளுடன் எதிர்ப்புக்களை நசுக்கி ஆண்டு வரும் சீன அரசு பொதுவாகத் தற்சார்புடனே செயல் பட்டு வந்தது. உலகில் உணவுப் பற்றாக்குறையைப் பற்றிக் கேள்வி எழுந்தபோது சீன அரசு “நாங்கள் உலகின் ஆறில் ஒரு பங்கு மக்களுக்கான உணவை நாங்களே உற்பத்தி செய்கிறோம். எங்கள் பங்கை நாங்கள் செய்கிறோம்” என்று பதிலளித்தது.சீனா உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியை நிறுத்தி விட்டால் மேலை நாடுகள் முற்றிலும் அசைவற்றுப் போய்விடும் என்பது ஓரளவு உண்மையே.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org