தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்குணவு இல்லாத போழ்து - பத்மா


சாமைக் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்


1.பாசிப் பருப்பு - 3 தேக்கரண்டி (tea spoon)
2.மிளகு - 1 தேக்கரண்டி
3.சீரகம் - 1 தேக்கரண்டி
4.சாமை அரிசி - 1 கோப்பை
5. தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
6. தாளிக்க‌ : கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம்

செய்முறை

பாசிப் பருப்பு, மிளகு, சீரகம் ஆகிய மூன்றையும் சிறு-அரவைப் பொறியில் இட்டு ஒன்றிரண்டாகப் பொடியும்படி லேசாகத் திருப்பவும்.

கடாயில் பிடித்தமான எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளிக்கவும்.

பின் அக்கடாயில் சாமை அரிசியைப் போல் 3 மடங்கு (3 கோப்பை) நீர் விடவும்.

தேவையான உப்பைப் போட்டு நீரைக் கொதி நிலைக்குக் கொண்டு வரவும்.

இதில் உடைத்த பாசிப்பருப்பையும், சாமை அரிசியையும், தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும்.

சுமார் 5 நிமிடம் மூடி வைத்து வேகவைத்தால் போதுமானது. இடையில் கிளரத் தேவையில்லை. எல்ல நீரையும் சாமை ஈர்த்து நன்றாய் வெந்து விடும்.

சுமார் மூன்று நிமிடங்கள் ஆற விட்டுப் பின் கையால் கொழுக்கட்டைகளாக உருட்டவும். (சற்றுச் சூடு இருக்கும்போதே உரண்டை பிடித்து விட வேண்டும்)

10 நிமிடம் இட்லி அவிப்பானில் ஆவியில் வேகவிடவும். வெந்தவுடன் சற்றுச் சொத, சொதப்புடன் தொட்டால் உடையும்படி இருக்கும். ஆனால் ஆறியதும் இறுகி நன்றாக இருக்கும்.

குறிப்பு

சாமை அரிசிக்குப் பதில் வரகரிசி, தினையரிசியும் பயன் படுத்தலாம்.

இவ்வளவுகள் கொண்டு 12 கொழுக்கட்டை செய்யலாம்

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org