தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்கு உணவு இல்லாத போது


ஆளி விதை தினை பர்ப்பி

Flaxseed என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஆளி விதை (Linum usitatissimum), மிகுந்த சத்தை உள்ளடக்கியது. 100 கிராம் ஆளிவிதை ஒரு நபருக்கு ஒரு வேளைக்குத் தேவையான அனைத்து ஊட்டத்தையும் அளிக்க வல்லது (534 கலோரி). 18.3% புரதச் சத்தும், 28.9% மாவுச் சத்தும், 42.2% நற்கொழுப்பும் கொண்ட ஆளிவிதை அளவாக உண்டால் மிகுந்த நன்மை பயக்கக் கூடியது. தேவையான பொருட்கள்.

செய்முறை

இரும்பு சட்டியில் ஆளி விதையை நறுமணம் வரும் வரை வறுக்கவும். பின் தினை மாவையும் சிறிது நெய்யும் சேர்த்து நறுமணம் வரும் வரை வறுக்கவும்.

பாதாம், பிஸ்தா, முந்திரியை சிறு சிறு துண்டுகளாக உடைக்கவும். வறுத்த ஆளி விதையை சிறுஅரவை இயந்திரத்தில் (மிக்சி) ஒன்றும் பாதியுமாக உடைக்கவும்.

வெல்லத்தைத் தண்ணீர் சேர்த்து பாகு எடுக்கவும். பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தாவோடு ஏலப்பொடி, உலர் திராட்சை சேர்த்து வறுத்த தினை மாவு பொடித்த ஆளிவிதையுடன் நெய் சேர்த்து தேவையான வெல்லப் பாகையும் சேர்த்து நன்கு கிளறவும். நன்கு கிளறிய சூடான இந்தக் கலவையை ஒரு சதுர தட்டில் பரப்பி நன்கு அழுத்திவிடவும். அழுத்திய கலவையை சிறுசிறு துண்டுகளாக கீறி வைக்கவும்.

முழுக் கட்டுரை »

அடிசில் தீர்வு - அனந்து


[இதுவரை பாதுகாப்பற்ற உணவுகளைப் பற்றித் தன் “அடிசில் பார்வை” தொடரில் விழிப்புணர்வு ஏற்படுத்திய அனந்து, இனி வரும் இதழ்களில் “அடிசில் தீர்வு” என்ற பெயரில் பாதுகாப்பான உணவை எப்படி நாம் கைக்கொள்வது, நம் சமையல் அறையை எப்படி நச்சற்ற நல்லறையாக்குவது என்று எழுதுவார். தற்சார்பு வாழ்வியலுக்கு நல்லுணவு என்பது இன்றியமையாதது ]

உணவு- நல்லுணவு, நஞ்சில்லா உணவு இவற்றை எப்படி அறிவது?

நமது நல்வாழ்விற்கும், வாழ்வாதாரத்திற்கும் அதி முக்கியமான உணவை நாம் எப்படி நஞ்சால் நிரப்பினோம். இன்று இவ்வளவு வியாதிகளில் உழன்று பல இன்னல்களை அனுபவிக்கிறோம். இன்றைய உணவு தயாரிப்பிலிருந்து, பதப்படுத்துதல் (processing), மற்றும் கொள்ளிருப்பு (shelf life) அதிகரிக்கும் பொதிவு (packing) என்று ஒவ்வொரு படியிலும் விஷம் கலக்கப்படுகிறது. பல நேரங்களில் நாம் அறியாமலும் நமக்கு தெரியாமலும் (தெரிவிக்கப்படாமலும்) கலக்கப்படுகிறது.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org