தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


காங்கிரஸே பரவாயில்லை!

2013ல் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு, இந்தியாவின் “வளர்ச்சிக்காக” நிலம் கையகப் படுத்தும் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. அப்போதே நாம் அதைக் கடுமையாக எதிர்த்தோம். பல தன்னார்வ நிறுவனங்களும், சமூகப் போராளிகளும் விடாமல் போராடி அதில் சில முக்கிய திருத்தங்களைக் கொண்டுவந்தார்கள். அதன்படி, தனியார் நிலங்களை அரசு கையகப்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படும் என்றும், நிலங்களை கையகப்படுத்தும்போது, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அல்லது நகராட்சி நிர்வாகங்களிடம் ஆலோசித்து முன் ஒப்புதல் பெற வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டது. தனியார் பங்களிப்பு திட்டங்களுக்காக (PPP) நிலங்களை கையகப்படுத்தும்போது, நில உரிமையாளர்களில் 70 சதவீதம் பேரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்றும், தனியார் திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும்போது, நில உரிமையாளர்களில் 80 சதவீதம் பேரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்றும், எந்த ஒரு திட்டத்துக்காகவும் வலுக்கட்டாயமாக நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்றும் முழு விலையையும் கொடுக்கும் வரை நிலத்தின் உரிமையாளருக்கு, அந்த நிலத்தில் உரிமை உண்டு என்றும் அந்த சட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.

முழுக் கட்டுரை »

புதிய பொருளாதாரக் கொள்கை


உழவன் பாலா பொருந்திய தொழில்நுட்பம்

(சென்ற கட்டுரையில் சூமாக்கர் அவர்களின் இடைப்பட்ட தொழில்நுட்பம் (அ) பொருந்திய தொழில்நுட்பம் பற்றிய கட்டுரையின் முதற் பகுதியை வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சி இவ்விதழில். பொருந்திய தொழில்நுட்பம் (appropriate technology) (அ) இடைப்பட்ட தொழில்நுட்பம் (intermediate technology) என்பதன் அடிப்படைக் கோட்பாடுகள் என்ன, அது எவ்வாறு களத்தில் பயன்படுகிறது என்பதை சூமாக்கர் தனக்கே உரித்தான எளிய நகைச்சுவை நடையில் எழுதியுள்ளார். இக்கட்டுரை “மனஸ் ” (Manas Journal) என்னும் பத்திரிக்கையில் 1975ம் ஆண்டு இரண்டு பகுதிகளாக வெளி வந்தது. இதன் ஆங்கில மூலம் வேண்டுவோர் info@kaani.org என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். கட்டுரை ஆசிரியரின் குறிப்புகள் பகர அடைப்புக்குள் கொடுக்கப்பட்டுள்ளன‌) நம் வளர்ந்த நாடுகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை நாடுகளுக்கு உதவி வருகின்றன, ஆனால் ஏழைகளோ எப்போதும்போல் ஏழைகளாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு நிலைமையிலும் ஒரு தேவை உருவாகிறது, அதைப் புரிந்து கொள்ள அந்நிலைமைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் இடைப்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக் கழகம் விவசாயத்தை ஒரு விவசாய விஞ்ஞான நோக்கிலிருந்து அணுகுவதே இல்லை. விவசாயத்தின் வளர்ச்சியையும் அதன் விளைவுகளையுமே அணுகுகிறோம்.

முழுக் கட்டுரை »

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org