தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மண் பயனுற வேண்டும்


பீடை இலாததோர் கூடு - ஜெய்சங்கர்


கடுக்காய் காய வைக்க ஒரு குடிசை போட்டோமல்லவா… அதில் ஏற்பட்ட தொந்தரவுகளையும், அடிக்கடி செய்ய வேண்டிய பராமரிப்பு பற்றியும் பார்த்தோமல்லவா… அதனால் வெறும் மண் சுவர், மற்றும் கூரை வீடு எல்லோரும் தங்குவதற்காகக் கட்டுவதற்கு மனம் ஒப்பவில்லை. மேலும், நகரத்தில் உள்ள வீடுகள் போல், வாழும் அறை, சமையலறை, படுக்கையறைகள், குளியல் மற்றும் கழிவறை என்று தனித்தனியாக உள்ள கட்டமைப்பிற்கும் அது பொருந்தாது என்று தோன்றியது. எனவே, என்ன பொருட்களைக் கொண்டு கட்டுவது என்பது ஒரு பெரிய கேள்விக்குறியானது.

முழுக் கட்டுரை »

வானத்துப் பறவைகளைப் பாருங்கள்சகி


நத்தை குத்தி நாரை
ஆங்கிலப் பெயர் : Asian Openbill Stork அறிவியல் பெயர் : Anastomus Oscitans மழைக்காலத்தில் வயல் வெளிகள் வெள்ளமாகும் நேரங்களில் தென்படும் பறவை. தோற்றம் தலை முதல் உடம்பின் பாதிவரை வெண்சாம்பல் நிறத்தில் இருக்கும். சிறகுகளின் நுனியும், வாலிலும் கருமை ஓடியிருக்கும். அலகு சற்றுக் குறடைப் போல் வளைந்தும், முனைகள் சேர்ந்தும் மேல்-கீழ் அலகுகளுக்கு இடையில் இடைவெளியுடனும் இருக்கும். (பாக்கு வெட்டியை நினைவூட்டும்). கால்கள் சிகப்பு நிறத்தில் இருக்கும். மற்ற நாரைகளை ஒப்பிடுகையில் கால்கள் சற்றுக் குட்டையாகவே இருக்கும். உயரம் 75 முதல் 80 செ.மீ இருக்கும்.

முழுக் கட்டுரை »

உலகிற்கு உணவும் உயர்விளைச்சலும் - பரிதி


“உலகுக்கு உணவு வழங்குவதே எங்கள் நோக்கம்” - பெருநிறுவன நீலிக் கண்ணீர்! உலக மக்களில் ஏறக்குறைய நூறு கோடிப் பேர் உணவுப் பற்றாக்குறையால் வாடுகின்றனர். உலகின் சுற்றுச் சூழல் மிக வேகமாகக் கெட்டுக்கொண்டிருக்கிறது. இவ்விரண்டுக்கும் முதன்மைக் காரணமாகப் பலர் முன்வைப்பது மக்கள் தொகைப் பெருக்கம். உண்மைக் காரணங்களை மூடி மறைப்பதற்காக ஆளும் வர்க்கத்தால் பரப்பப்பட்டு நடுத்தர வர்க்கத்தில் பெரும்பாலானோர் வசதியாக நம்பும் இந்தக் காரணம் பொய்யானது என்பதைத் தரவுகளுடன் நாம் ஏற்கெனவே தாளாண்மையில் பல முறை பார்த்துள்ளோம். இருப்பினும், அதிவீரராமபாண்டியர் நறுந்தொகையில் மிகச் சிறப்பாகக் கூறியவாறு, நாமும் மேற்படிப் பொய்யைத் தொடர்ந்து அம்பலப்படுத்தவேண்டியுள்ளது! பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால் மெய்போ லும்மே மெய்போ லும்மே! மெய்யுடை யொருவன் சொலமாட் டாமையாற் பொய்போ லும்மே பொய்போ லும்மே!

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org