தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள்சகி


நத்தை குத்தி நாரை

ஆங்கிலப் பெயர் : Asian Openbill Stork

அறிவியல் பெயர் : Anastomus Oscitans

மழைக்காலத்தில் வயல் வெளிகள் வெள்ளமாகும் நேரங்களில் தென்படும் பறவை.

தோற்றம்

தலை முதல் உடம்பின் பாதிவரை வெண்சாம்பல் நிறத்தில் இருக்கும். சிறகுகளின் நுனியும், வாலிலும் கருமை ஓடியிருக்கும். அலகு சற்றுக் குறடைப் போல் வளைந்தும், முனைகள் சேர்ந்தும் மேல்-கீழ் அலகுகளுக்கு இடையில் இடைவெளியுடனும் இருக்கும். (பாக்கு வெட்டியை நினைவூட்டும்). கால்கள் சிகப்பு நிறத்தில் இருக்கும். மற்ற நாரைகளை ஒப்பிடுகையில் கால்கள் சற்றுக் குட்டையாகவே இருக்கும். உயரம் 75 முதல் 80 செ.மீ இருக்கும்.

காணும் இடம்

ஆசியாவில் தாய்லாந்து, இலங்கை, பர்மா உள்ளிட்ட பல இடங்களில் காணலாம் - இந்தியா முழுவதும் இருக்கும். நம்நாட்டுப் பறவை.

உணவு

இவை அதிகமாக நத்தைகளை உண்ணும். தவளை, நண்டு மற்றும் சிறிய பாம்புகளையும் உண்ணும்

இனப்பெருக்கம்

பெரும் கூட்டமாகவே கூடு கட்டும். தமிழ்நாட்டில் இனப்பெருக்க காலம் கார்த்திகை முதல் மாசி வரை. 2 முதல் 4 முட்டைகள் இடும். அடைகாக்கும் காலம் 25 முதல் 30 நாட்கள் வரை.

குறிப்பு

சென்ற இதழில் திரு. ஆதி வள்ளியப்பன் அவர்கள் எழுதிய விமர்சனத்திற்கு மிக்க நன்றி. Migration என்பதற்கான தமிழ்ச்சொல் வலசை என்று தெரியாதது என் அறியாமையே. மன்னிக்கவும். தமிழ்ப் பெயர்களைக் கண்டறிய நான் டாக்டர் சலீம் அலி அவர்களின் The Book of Indian Birds என்ற நூலையே பயன்படுத்துகிறேன். சலீம் அலி Painted Stork என்ற பறவையைத்தான் செங்கால் நாரை என்று குறிப்பிட்டுள்ளார். (page 75). அவரை விடப் பறவைகளில் சிறந்த‌ ஒரு அறிஞரை நான் அறியாததால் திரு.அலி அவர்களையே பின்பற்றுகிறேன்.

வலைப்பூக்களில் எது ஆதாரபூர்வமானது, எது தன்னிச்சையானது என்று கண்டறிவது கடினமே. உதாரண‌மாக http://en.wikipedia.org/wiki/List_of_birds_of_Coimbatore#Storks வலைப்பூவில் Woolly-necked stork (Ciconia episcopus) என்பதை செங்கால் நாரை என்று குறிப்பிட்டுள்ளனர். எனினும் தாங்கள் குறிப்பிட்ட‌ சங்கப் பாடலில் விவரித்துள்ள அடையாளங்கள் கொண்டது european white stork என்பதில் ஐயம் இல்லை. எனவே செங்கால் நாரை என்றே நம் பறவையை அழைக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. இதற்கு அறிவியல் வல்லுனர்கள்தான் விடை கூற வேண்டும். தமிழில் அறிவியல் ஆதாரமான பறவைகள் நூல் எது என்பது எனக்குத் தெரியவில்லை.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org