தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்குணவு இல்லாத போழ்து


ஆளி விதை தினை பர்ப்பி


Flaxseed என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஆளி விதை (Linum usitatissimum), மிகுந்த சத்தை உள்ளடக்கியது. 100 கிராம் ஆளிவிதை ஒரு நபருக்கு ஒரு வேளைக்குத் தேவையான அனைத்து ஊட்டத்தையும் அளிக்க வல்லது (534 கலோரி). 18.3% புரதச் சத்தும், 28.9% மாவுச் சத்தும், 42.2% நற்கொழுப்பும் கொண்ட ஆளிவிதை அளவாக உண்டால் மிகுந்த நன்மை பயக்கக் கூடியது. தேவையான பொருட்கள்

  1. ஆளி விதை - 2 1/2 கோப்பை
  2. தினை மாவு - 2 1/2 கோப்பை
  3. நாட்டு பசு நெய் - 2 கோப்பை
  4. நாட்டு சக்கரை (அ) வெல்லம் - 3 -4 கோப்பை
  5. முந்திரிப் பருப்பு - 100 கிராம்
  6. பாதாம் - 100 கிராம்
  7. பிஸ்தா - 1 தேக்கரண்டி
  8. உலர்ந்த திராட்சை - 1 தேக்கரண்டி
  9. ஏலக்காய் - 15 பொடித்தது

செய்முறை

இரும்பு சட்டியில் ஆளி விதையை நறுமணம் வரும் வரை வறுக்கவும். பின் தினை மாவையும் சிறிது நெய்யும் சேர்த்து நறுமணம் வரும் வரை வறுக்கவும்.

பாதாம், பிஸ்தா, முந்திரியை சிறு சிறு துண்டுகளாக உடைக்கவும். வறுத்த ஆளி விதையை சிறுஅரவை இயந்திரத்தில் (மிக்சி) ஒன்றும் பாதியுமாக உடைக்கவும்.

வெல்லத்தைத் தண்ணீர் சேர்த்து பாகு எடுக்கவும். பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தாவோடு ஏலப்பொடி, உலர் திராட்சை சேர்த்து வறுத்த தினை மாவு பொடித்த ஆளிவிதையுடன் நெய் சேர்த்து தேவையான வெல்லப் பாகையும் சேர்த்து நன்கு கிளறவும். நன்கு கிளறிய சூடான இந்தக் கலவையை ஒரு சதுர தட்டில் பரப்பி நன்கு அழுத்திவிடவும். அழுத்திய கலவையை சிறுசிறு துண்டுகளாக கீறி வைக்கவும்.

தினை ஆளிவிதை பர்ப்பி தயார். வரும் தைப் பொங்கல் திருநாளில் சத்தான இந்த சிறுதானிய இனிப்பு தினை பர்ப்பியை செய்து குழந்தைகளுடன் உண்டு மகிழ்வோம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org