தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

கவிதைப் பக்கம் - சாரல் (அர.செல்வமணி)


என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி?
என்னசொல்லி விழுகிறது மழைத்துளி யென்றே
எம்கானின் மரங்களையும் கேட்டேன் அன்றே
என்மொழியால் நாணியவை கேட்ட தொன்றே
எம்காதல் மொழியுனக்கு எதற்காம் என்றே
இன்மழையை உமதுடைமை என்ப தேனோ
இனிதான பொதுவுடைமை மறுக்க லாமோ
மனம்போலத் தழுவிமழை ஈர்ப்ப தாலே
மழையுமக்கே உரிமையெனும் மயக்கந் தானோ

புள்ளினங்கள் விதைபரப்பிப் போட்ட தாலே
புதுமரங்கள் கான்தன்னில் புகுந்த தாமே
துள்ளுகடல் நீர்கதிரோன் சூட்டி னாலே
தொடர்ந்தாவி வடிவாகிச் சூழும் மேலே
தெள்ளியநீர்ச் சுனைபலவும் பெருகக் கானில்
தேனமுதாம் மழையீர்க்கும் மரங்கள் வானில்
உள்ளுவதோ உயர்வுள்ளல் உரைத்தார் அன்றே
உணர்ந்தனவே மரங்களந்த உண்மை இன்றே

பல்லுயிரும் இணைந்தால்தான் பாரில் மேன்மை
பண்பதனை மறந்தாலோ பரவும் ஏழ்மை
எல்லோரும் செழித்திருக்கப் பெய்யும் மாரி
எவ்வுயிரும் தனதென்றே எண்ணும் பாரி
சொல்லியதோ மரங்களிலே விழுந்து மோதிச்
சோலையெழில் மேலிறங்கிச் சொரிந்த போதில்
மெல்லமரக் கூட்டமதைப் புரிந்து கொண்டே
மெதுவாகத் தனியுடைமை மிதித்த தன்றே!

(கார்த்திகை-November 2014, மார்கழி-December 2014 இரண்டு தாளாண்மை இதழ்களிலும் பின் அட்டையில் உள்ள பாடல்களில் ஆங்காங்கு பல வரிகள் இடம் மாறியுள்ளன. தவறுக்கு வருந்துகிறோம். திருத்தப்பட்ட பாடல்கள் தேவைப்பட்டால் மின்னஞ்சல் மூலம் info@kaani.org அல்லது குறுஞ்செய்தி மூலம் 9965552252 க்குத் தெரிவிக்கவும்.http://kaani.org என்ற இணையதள வெளியீட்டில் சரி செய்யப் பட்டுள்ளன‌ )

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org