தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வாசகர் குரல்

மார்கழி இதழில் வந்துள்ள எல்லாக் கட்டுரைகளும் சிறப்பான‌வை மற்றும் பயனுள்ளவைதான். என்னை மிகவும் கவர்ந்தது திரு.ஜெயசங்கரின் “பீடையிலாதது ஓர் கூடு கட்டிக்கொண்டு” கட்டுரைதான். காரணம் 1935 முதல் 1951 வரை மன்னார்குடி நகரில் மண்சுவர் - கூரை வேய்ந்த ஒரு சிறு வீட்டில்தான் நாங்கள். வீட்டிற்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில் அவ்வப்போது பாம்புகள் வரும்; சமயத்தில் வீட்டிற்குள்ளும் நல்லபாம்பு, விரியன்பாம்பு, விஷமில்லாதபாம்பு எல்லாமே வரும். தேள், பூரான் - சகஜமாக வரும் - எல்லோருக்கும் குறைந்தது ஒரு தடவையாவது கடிபட்டிருக்கிறோம். 1985-95-க்கு இடைப்பட்ட காலத்தில் காந்திகிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் மக்களுக்கு உள்ளுரிலயே கிடைக்கும் பொருட்களை கொண்டு வீடு கட்டும் திட்டத்திற்காகக் கிடைத்த நிதிவாயிலாக – வீடு கட்டுவது பற்றி மக்களுடன் விவாதித்தோம். கிராம மக்கள் மண் சுவரில் கட்டும் வீட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. RCC அல்லது மங்களுர் ஒடு போட்ட வீடுதான், செங்கல் சிமெண்ட் கொண்டு கட்டப்பட்ட குடியிருப்புதான் வேண்டும் என்று கோரிகைகள் வைத்தனர்.அதனால் மாதிரி மண்வீடுகள் காந்திகிராம வளாகத்தில் மட்டுமே கட்டப்பட்டன.

இன்றைய சூழலில் நகரில் வாழ்ந்த இளைஞர் ஒருவர் கிராமத்தில் மண்சுவர் மீது கட்டப்பட்ட ஓலை வேய்ந்த வீட்டில் குடி இருப்பது மற்றும் தொடரவிரும்புவது திட்டமிட்டுள்ளது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஜெயசங்கரின் துணிச்சலையும் விடாமுயற்சியையும் பாராட்டி அவருக்கு எனது வாழ்த்துக்கனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
M.R.ராஜகோபாலன்
நிர்வாக அறங்காவலர்
காந்திகிராம அறக்கட்டளை
திண்டுக்கல்

தாளாண்மை மோடியை மாற்றுகிறதோ இல்லையோ ஒவ்வொரு மனிதனையும் மாற்றும். அப்போது கடைசியாக மோடியும், இந்திய அரசும் மாறுவார்கள். கவிஞர் செல்வமணி குழந்தைப் பருவத்தில் மாட்டு வண்டியில் ப‌யணித்திருக்க வேண்டும். அனுபவத்தின் ஆழம் கவிதையின் நுணுக்கத்தில் தெரிகிறது. மீட்டுருவாக்கும் உயிர்ம வேளாண்மை மிகச் சிறந்த கட்டுரை - விவசாயிகளுக்குச் சென்று சேர வேண்டும். நூற்றுக் கணக்கான விவசாயிகளைப் பேச, செயல்பட வைக்க வேண்டும். அவர்களையே திட்டமிட, செயலாற்ற வைப்பதன் மூலம் மாற்றம் விரைவில் வரும்.
ப.தி.ராசேந்திரன்
தலைவர்
தமிழக விவசாயிகள் சங்கம்

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org