பல மாத இடைவெளிக்குப் பின், இவ்விதழில் மண்வீடு கட்டும் தொழில்நுட்பங்களை மீண்டும் ஆராய்வோம். இது வரை நாம் பார்த்ததைச் சுருக்கமாய் நினைவு கொள்வோம்:
மண்ணால் வீடு கட்டும் ஐந்து விதமான தொழில்நுட்பங்களைப் பட்டியலிட்டோம்..
இவ்வைந்தும் வருமாறு:
மிதிமண் சுவர் - Cob,
அச்சுமண் சுவர் - Adobe (அடோபி),
திமிசுமண் சுவர் - Rammed Earth,
அழுத்தக்கல் சுவர் - Compressed Earth Blocks,
படல்மண் சுவர் - Wattle and Daub..
மேலும் படிக்க...»
நார்மன் போர்லாக் மூலமாக குட்டை வகை கோதுமைகள் இந்திய வேளாண்மைக்குள் கொண்டுவர முயற்சிகள் 1960களில் நடந்தன. நார்மன் போர்லாக்கை பசுமைப் புரட்சியின் தந்தை என்று கூறுகிறார்கள். 1962ஆம் ஆண்டு மே மாதம் அப்போது இந்திய வேளாண்மை ஆராய்ச்சி பயிற்றகத்தின் (IARI) இயக்குநரான பி.ப்பி. பால் அவர்களிடம் மா.சா. சுவாமிநாதன் எப்படியும் நார்மன் போர்லாக்கை இந்தியாவிற்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவர் இ.வே,ஆ.பயிற்றகத்தில் கோதுமைத் திட்டத்தின் உறுப்பினராக இருந்தார். போர்லாக்கின் வருகையால் 10 குட்டைக் கோதுமை இனங்கள் வரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இதன் பிறகு 1963ஆம் ஆண்டு மார்ச் மாதம் நார்மன் போர்லாக்கும், ராபர்ட் ஆண்டர்சனும் 'விஜயம்' செய்தார்கள். இநதியாவில் பசுமைப் புரட்சியின் விதை ஊன்றப்பட்டது.
முழுக் கட்டுரை »