தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உழந்தும் உழவே தலை - வழிப்போக்கன்


கடந்து சென்ற 2013ம் வருடம் இந்தியாவின் உழவர்களுக்கு நன்றாகவே இருந்தது. நம் தமிழகத்தில் மழை குறைவாயினும், தேசிய அளவில் நல்ல பருவ மழை பெய்து உணவு தானியங்களின் உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவு 8.35 கோடி டன் உற்பத்தியாயிற்று. தானிய ஏற்றுமதி 2.0 கோடி டன்னைத் தாண்டியது. அதே 2013ம் ஆண்டில்தான் பொருளாதார மேதை மன்மோகன் சிங் 'விவசாயிகளை வேறு தொழிலுக்கு மாற்ற வேண்டும்' என்றும் நிதியமைச்சர் சிதம்பரம் '6% மக்களுக்கு மேல் உழவில் ஈடுபடக் கூடாது' என்றும் கூறினர்! ஒரு நாளைக்குச் சராசரியாக 2500 உழவர்கள் வேளாண்மையை விட்டு வேறு தொழிலுக்குப் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் நம் பொருளாதார மேதைகள் சொன்னது போல் அவர்களெல்லாம் தொழிற்சாலை வேலைகளுக்குப் பெயர்ந்து இருக்க வேண்டும் அல்லவா? உண்மை நிலவரம் என்ன? பொருளாதார வளர்ச்சியால் என்ன நன்மைகள் விளைந்துள்ளன?

முழுக் கட்டுரை »

மாடல்ல மற்றையவை - ஜெய்சங்கர்


மாடுகள் சினையாக்குவதற்கு,காளையுடன் சேர்த்த பிறகோ அல்லது சினை ஊசி போட்ட பிறகோ, சினை நின்று விட்டதா என்பதை எப்படி அறிவது? சென்ற முறை சினைக்கு வந்த நாளிலிருந்து 21 நாட்கள் கழித்து மாடுகளை உன்னிப்பாக சில நாட்களுக்கு கவனிக்கவும். மீண்டும் சினைத் தருண அறிகுறிகள் தென்பட்டால், சினை நிற்கவில்லை என்று பொருள். அறிகுறிகள் எதுவும் தென்படவில்லையானால், பெரும்பாலும் சினை நின்றிருக்கலாம். ஆனாலும், மாடுகளை மேலும் ஒரு 21 நாட்களுக்கு உன்னிப்பாக கவனிக்கவும். சினைத் தருண அறிகுறிகள் தொடர்ந்து தென்படாமலே இருந்தால் மாடு சினையாக இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

முழுக் கட்டுரை »

நெல்லில் நேரடி விதைப்பு - ஜெயகுமார்


இயற்கை வழியில் நெல் சாகுபடி பற்றிச் சில இதழ்களுக்கு முன்னர் கண்டோம். ஆனால், வேலையாட்கள் பற்றாக்குறையாக உள்ள தற்கால வேளாண் சூழலில், நாற்றங்கால் பராமரித்து, நாற்றடித்து, நடும் தொழில்நுட்பம் மிகுந்த மன உளைச்சலையும், பொருட் செலவையும் கொண்டதாக இருக்கிறது. நேரடி விதைப்பு இதற்கு ஒரு நல்ல மாற்றாகும் - எனினும், நேரடி விதைப்பில் களைகள் மண்டுவதுதான் மிகப் பெரிய செலவாகும். வேதி விவசாயத்தில் களைக்கொல்லி பயன்படுத்தி களைகளைப் பெருமளவு கட்டுப் படுத்தலாம். ஆனால் இயற்கை விவசாயத்தில் என்ன செய்வது? இதற்கு ஓரளவு விடை கண்டுள்ள ஒரு இயற்கை விவசாயியை நாம் இம்மாதம் சந்திக்கிறோம்.நாம் வழக்கமாய்ச் சொல்லும் எச்சரிக்கையையும் குறித்து விடுகிறோம். விவசாயம் என்பது அவ்வச் சூழலுக்கு ஏற்றது. எனவே இம்முயற்சியைப் பரிசோதனை செய்ய விரும்பும் உழவர்கள் முதலில் கால் காணி போன்ற ஒரு சிறு அளவில் இயற்கை வேளாண்மையையும் அதில் களைக் கட்டுப்பாட்டையும் ஆராய்ச்சி செய்துவிட்டுப் பின்னர் எல்லா பரப்பிற்கும் கொண்டு செல்லவும். தற்போதைய வேளாண் நெருக்கடிகளில் நேரடி விதைப்பில் நெல் விளைச்சல் என்பது மிக முக்கியமான தொழில்நுட்பம் என்பதால் உழவர்களுக்கு இதன் தேவையைப் பற்றி விளக்க வேண்டியதில்லை.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org