அன்பிற்குரிய தாளாண்மை வாசகர்களே!
தாளாண்மை இதழ் தாளாண்மை மலர்கிறது என்ற பெயரில் புதுப்பொலிவுடன் வெற்றி நடை போட்டு வருகிறது. இதழைத் தொடர்ந்து நடத்துவதற்கான பின்புலங்களை நாம் ஓரளவு திடப்படுத்தி விட்டோம். விளம்பரங்கள் கூடாது என்ற பிடிவாதத்துடன் நாம் செயல் பட்டு வருவதால் அவ்வப்போது சிறு இதழ்களுக்கே உண்டான நிதி நெருக்கடி ஏற்படுகிறது. தற்போது (தம் பெயர் வெளியிட விரும்பாத) சில புரவலர்களின் நிழலில் இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. இனியும் வரும் என்பதில் ஐயமில்லை. ஆயினும் தற்சார்பை விரும்பும் நாம் இதழின் வாசகர்கள் அனைவரும் சேர்ந்து இச்சுமையை எளிதாக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
நம் இதழின் நோக்கம் தற்சார்பு வாழ்வியலுக்கான ஒரு இலக்கண மற்றும் இலக்கிய இதழாகத் தமிழில் இருக்க வேண்டும் என்பதே. இயற்கை வேளாண்மை என்பது தற்சார்பு வாழ்வியலின் ஒரு அங்கம் மட்டுமே. இன்னும் வீடு, உடை, கல்வி, மருத்துவம், சூழலியல், அண்மைப் பொருளாதாரம், தன்னாட்சி, கலை, பொழுதுபோக்கு போன்ற நல்வாழ்விற்குத் தேவையான அனைத்து அம்சங்களிலும் ஆழ்ந்து ஆராய்ந்து விடைகளைக் கண்டு பிடித்து அவற்றைப் பதிப்புக்கும் பொறுப்பு தாளாண்மை மலர்கிறது இதழுக்கு இருக்கிறது.
இதழின் வளர்ச்சிக்கு வாசகர்களிடம் மூன்று வேண்டுகோள்களை வைக்கிறோம். இதில் எவை இயலுமோ அவற்றைத் தாங்கள் செயலாக்கவும்.
1. சந்தா
ஒரு முறை சந்தா செலுத்திய வாசகர்களை நாங்கள் அஞ்சல் வரிசையிலிருந்து நீக்குவதே இல்லை. எனவே வாசகர்கள் தாமாகவே முன்வந்து 12 இதழ்கள் முடிந்தவுடன் ஆண்டு சந்தாவான ரூ.150ஐ வங்கிக் கணக்கில் செலுத்தினால் மிக உதவியாக இருக்கும். (தாளாண்மைக்குப் புது வங்கிக் கணக்கு உருவாக்கி உள்ளோம் - முதல் பக்கத்தில் காண்க).
2. கொடை
வருடம் இரண்டு லட்சம் ரூபாய் செலவு ஆகிறது. எனவே வருடம் ஒரு முறை ரூ.500, ரூ.1000 அல்லது ரூ.2000 (இதற்கு மேல் வேண்டாம்) ஆகியவற்றில் ஏதோ ஒரு தொகையை விருப்பமுள்ள வாசகர்கள் கொடையாக அளித்தால் இதழ் ஓரளவு தற்சார்பை அடையும். இது அவரவர் விருப்பமே!
3. பரப்புரைமை
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இதழ் பற்றி உங்கள் நண்பருக்கு எடுத்துரைத்தால் சந்தா வளரும். எல்லா சந்தாதாரரும் ஒரே ஒருவருக்கு எடுத்துக் கூறினால், இதழின் வீச்சு உடனடியாக இரட்டிப்பாகும்.
அன்புடன்
நிர்வாகக் குழு, தாளாண்மை மலர்கிறது