தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்குணவு இல்லாத போழ்து

புஞ்சைத் தவசங்களில் மிகுந்த சத்துள்ள ஒன்று ராகி எனப்படும் கேழ்வரகு. நாட்டுப் புறங்களில் இதனைக் “கேப்பை” என்றும் அழைப்பர். அதிகமான கால்சியம் சத்தும், பிற தானியங்களில் கிடைக்காத/குறைவாயுள்ள‌ மெதியோனின், லாய்சின், வேலின் போன்ற அமினோ அமிலங்களும் தருவதால் வாரம் இரண்டு முறையேனும் கேழ்வரகை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.வளரும் குழந்தைகளுக்கு எலும்பும் தசை நார்களும் வலுப்பெற கேழ்வரகு மிக நல்லது.குறைவான நீர் இறைப்பிலேயே நன்கு வளரக் கூடிய கேழ்வரகை உணவாய்க் கொள்வது, உடலுக்கு மட்டுமின்றி சூழலுக்கும் மிக உகந்தது இதனுடன் வெந்தயக் கீரை கலந்து தாதுக்களும், வைட்டமின்களும் நிறைந்த ஒரு சத்தான உணவை இம்முறை காண்போம். அரிசியை விடவும் மெதுவாய்ச் செரிமானம் ஆவதால் இது நீரீழிவு நோயாளிகளுக்கு மிக நல்லது. தோன்றும்.

மேலும் படிக்க...»

நிரம்பிய நூல் - நூல் விமர்சனம்

கல்லூரியில் படித்த காலத்தில் 'உலகத்தில் எந்த மொழி இலக்கியத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பு தமிழுக்கு உண்டு. அது என்ன?' என்று எங்கள் தமிழ்ப்பேராசிரியர் கேட்டார். பிறகு அவரே “திணைக் கோட்பாடு” பற்றி விளக்கினார். கல்லூரிப் படிப்பு முடித்தபின் சூழலியல், காட்டுயிரியலில் எனது ஆர்வம் திரும்பிய காலத்தில் நவீன உயிரியல் கோட்பாடுகளைப் பற்றியும், சூழல் மண்டலங்களை அதன் அடிப்படையில் பிரித்துள்ளது பற்றியும் படிக்கும் போதெல்லாம் திணையியல் கோட்பாடு என் மனதில் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். நமது மண், நமது மொழி, நமது மரபு பற்றிய பெருமித உணர்வு தோன்றும்.

மேலும் படிக்க... »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
s
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org