தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்

நாளை இது நமக்கும் வரும்!

நாள்: செப்டம்பர் 20, 2012. இடம்: ஹென்னபின் கௌன்டி என்னும் அமெரிக்க சிறூர் நீதிமன்றம். அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ளது. ஒரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஆலன் சிலெங்கென் என்னும் 54 வயது இயற்கை விவசாயி குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார். அவர்மேல் மூன்று குற்றங்கள் மின்னசோட்டா மாநில அரசால் சுமத்தப்பட்டுள்ளன:யரிடலாம்.

முழுக் கட்டுரை »

தற்சார்பு வாழ்வியல்

ஒரு காட்டின் கதை - சாட்சி

முன்னொரு காலத்தில் திருப்தி என்றொரு காடு இருந்தது. அதில் நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும், சிங்கம், புலி, ஓநாய் போன்ற மாமிசம் உண்ணும் விலங்குகளும், மான், முயல், மாடு போன்ற தாவரம் உண்ணும் விலங்குகளும், ஓடை, ஆறு, நீர் வீழ்ச்சி, மரங்கள் அவற்றில் மீன்கள், பலவகைப் பறவைகள், பட்டாம்பூச்சிகள், மற்றும் பல்லி, பூரான், பாம்பு போன்ற ஊர்வன எல்லாம் ஒருமித்து வாழ்ந்தன. ஒன்றுக்கொன்று உணவாகவும், எதிரியாகவும் இருப்பினும், அவற்றின் வாழ்வாதாரங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட இனமும் அளவின்றிப் பெருகி விடாதபடி, ஒரு வகை சுழற்சியும், சமன்செய்யும் நிகழ்வுகளும் நடந்து கொண்டே இருந்தன. இதனைக் கதை ஆசிரியரான நாம் 'இயற்கை' என்று பெயரிடலாம்.

மேலும் படிக்க...»
 

இந்தியாவில் அமெரிக்க ஊடுருவல்

கடந்த கால‌ நூற்றாண்டுகளில் ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் வாழ்முறையையும், எண்ணங்களையும், தன் கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் சுதந்திரம் இருந்தது. அவ்வப்போது இச்சுதந்திரம் வளமான நாடுகளைத் திருடுவதற்காக அண்டை நாட்டு அரசர்கள் மேற்கொள்ளும் படையெடுப்பால் இடைஞ்சற்பட்டது. சில சமயம் அவ்வரசர்களின் வாரிசுகள் அந்நாட்டிலேயே தங்கி சாம்ராஜ்ஜியங்களை ஏற்படுத்தினார்கள்.

மேலும் படிக்க... »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
s
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org