தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள்

“வானத்துப் பறவைகளைப் பாருங்கள், அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை,கிடங்குகளில் சேமிப்பதுமில்லை” - என்ற‌ விவிலியத்தில் உள்ள‌ ஏசுநாதரின் வரிகள் மிகப் பிரபலமானவை. விடுதலையை பற்றிப் பாட ஆரம்பித்த பாரதி, “விட்டு விடுதலையாகி நிற்பாய்” என்று சிட்டுக்குருவியைத்தான் மேற்கோள் காட்டுகிறான். சங்க இலக்கியங்களில் 'சிறுவெள்ளாங்குறுகே', 'நாராய், நாராய்' என்றெல்லாம் பற்பல பறவைகளைப் பாடியிருக்கின்றனர். இறையுணர்வுக்கே தங்களை அர்ப்பணித்த ஆண்டாள், மாணிக்க வாசகர் போன்ற ஞானிகள் கூட, 'கீதமினிய குயிலே' என்றும் ' உன்னை உகப்பன் குயிலே, உன் துணைத் தோழியும் ஆவன்' என்றும் கவி பாடியுள்ளனர். பறவைகளைப் பாடாத கவிஞனே எம்மொழியிலும் இல்லை என்று கூறலாம்.

முழுக் கட்டுரை »

பீடையிலாத‌தோர் கூடு - உழவன் பாலா

சென்ற கட்டுரையில் லாரி பேக்கர் மண்கட்டிடத்தைப் பற்றி எழுதியுள்ளதைப் பார்க்கப் போவதாகக் கூறி இருந்தோம். அவர் தனக்கே உரித்தான எளிமையான நடையில் மண்ணில் வீடு கட்டுவதைப் பற்றி எழுதிய‌ mud என்ற குறு நூலிலிலிருந்து தொகுத்தவை: (படங்கள் அவரே வரைந்தவை). நடுத்தர மக்கள் நாம் எல்லோரும் செங்கல்லால் ஆன வீடுகளைக் கட்டுகிறோம். ஆனால் ஒரு சாதாரண வீட்டைக் கட்டத் தேவைப்படும் கற்களைச் சுட, இரண்டு அல்லது மூன்று நன்கு வளர்ந்த மரங்கள் தேவை!

மேலும் படிக்க...»
 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
s
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org