தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மரங்கொத்தி


வீட்டருகில் தட்டுவதும் யாரோ வென்றே

விழைந்தங்கே நான்வந்தேன் உயரே சென்றாய்

ஏட்டிலுனை நான்கண்டேன் ஏக்கங் கொண்டேன்

எனைக்கண்டே அஞ்சியென்றும் எழுவ தேனோ

விரிந்தபனை மீதிருந்தே விளித்து நிற்பாய்

விரைந்தங்கே நான்வந்தால் விலகிச் செல்வாய்

அறிவாளைப் போலுன்றன் மூக்கி னாலே

ஆனதுபார் துளையொன்று மட்டை மேலே

மீண்டுமுனைத் தேடியெங்கும் ஓடி வந்தேன்

மின்னலாக நீபறந்தால் என்ன செய்வேன்

வேண்டுமென்றே எனையென்றும் ஏய்க்கின் றாயோ

விளையாடும் எண்ணத்தில் வந்துள் ளாயோ

நிழற்படம்நான் எடுக்கவேண்டும் நின்று செல்லேன்

நீயதற்கே உதவவேண்டும் என்று பாரேன்

அழகான உனையென்றும் அருகில் காண

அதுவொன்றே வழியென்று புரிந்து கொள்ளேன்!

அர செல்வமணி
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org