தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 
தாய்லாந்தில் பசுமைப் புரட்சியும் பன்பன் தற்சார்பு மையமும்

அலெக்ஸ் ஜென்சன் - தமிழில் பாபுஜி

[அமெரிக்கராய்ப் பிறந்த அலெக்ஸ் ஜென்சன் நம் தற்சார்பு இயக்கத்தின் நண்பர். சூழல் இயலிலும் இயற்கை வேளாண்மையிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் சென்ற மாதம் முழுவதும் தாய்லாந்தில் ஜோ ஜொண்டாய் என்பவரின் மண்வீடு கட்டும் பயிலரங்கத்தில் இருந்தார். தற்போது இந்தியாவில் பல தொண்டு நிறுவனங்களையும், இயற்கை பண்ணைகளையும் சுற்றுப்பயணம் செய்யம் இவரிடம் தாளாண்மையைப் பற்றிக் கூறி ஒரு கட்டுரை எழுதித் தருமாறு கேட்டேன். அவர் தாய்லாந்து நாட்டில் தான் கண்டதை எழுதிய கட்டுரை இது. இதைக் குறைந்த கால அவகாசத்தில் சிறப்பாக மொழிபெயர்த்துத் தந்த பாபுஜி அவர்களுக்கு நன்றி - உழவன் பாலா]

தாய்லாந்தும் இந்தியாவைப்போல் 50 ஆண்டுகளாக பசுமை புரட்சியின் பெயரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கையாக அமைந்த பல்லுயிர் பல பயிர் சூழலில் இருந்து பெரு வணிக நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்பட்ட மரபீனி விதைகளையும், வானளாவிய அளவுக்கு விவசாய வேதிப்பொருட்களையும் கொண்டும் செய்யப்படும் ஓரினப்பயிர் வேளாண்மைக்கு தள்ளப்பட்டது. பூச்சுக்கொல்லிகளால் உண்டாக்கப்பட்ட மாசு அங்கு மிக மோசமாக உள்ளது.

கிரீன் பீஸ் [Greenpeace] அமைப்பின் ஒரு அறிக்கை கூறுகிறது என்னவென்றால்:

“தாய்லாந்தில் வேதி இயல் உரங்களின் பயன்பாடு 1970 இல் இருந்து அதிகரிக்க ஆரம்பித்தது. 1961 இல் இருந்து 2003 க்குள் வேதி உர பயன்பாடு 94 மடங்கு அதிகரித்து உள்ளது, (வருடம் 18,000 டன்னிலிருந்து 17,00,000 டன்னாக!) …1966ல் முதலாம் தேசிய பொருளாதார மற்றும் மக்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதல் முறையாக பூச்சிகொல்லிகள் தாய்லாந்தில் இறக்குமதி செய்யப்பட்ட நாள் முதல் மொத்த இறக்குமதி செய்யப்பட்ட பூச்சிகொல்லிகளின் அளவு ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த‌ விதத்தில் அதிகமாகிய வண்ணம் இருந்தது. இறக்குமதி செய்யப்பட்ட விவசாய பூச்சிக்கொல்லிகளின் அளவு 1994இல் இருந்து 2004க்குள் பன்மடங்கு அதிகரித்தது. 1994இல் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் ஆர்கனோபாஸ்பேட் (organophospate) மற்றும் கார்பனேட் (carbonates). 2000இல் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த பூச்சிக்கொல்லிகளின் அளவு 40000 டன் ஆகும். இதன் மதிப்பு 7294 மில்லியன் பாட், அதாவது ஏறக்குறைய 234 மில்லியன் டாலர் [ சுமார் 1250 கோடி ரூபாய் ].. இந்த இறக்குமதியில் பெரும்பான்மையானவை களைக்கொல்லிகள், அடுத்து பூச்சிக்கொல்லிகள், நோய்த்தடுப்பான்கள் மற்றும் பயிர் வளர்ச்சியை ஒழுங்குபடுத்தும் ஊக்கிகள். உலக சுகாதார அமைப்பின் “ஆபத்தானவை” (hazards) பிரிவுகளின்படி , இறக்குமதி செய்யப்பட்ட 54 சதவிகித பூச்சிக்கொல்லிகள் அதி பயங்கர ஆபத்தானவை (1a ) மற்றும் பயங்கரமான ஆபத்தானவை (1b) என்ற பிரிவுகளில் அடங்குபவை. நாட்டின் முக்கிய ஆறுகளின் நீர் சோதிக்கப்பட்டதில் அவை அனைத்திலும் விவசாய நச்சு மிக அதிக அளவில் கலந்திருப்பது அறியப்பட்டுள்ளது ” இது அரசின் உள் மற்றும் வெளி நாட்டு வணிக நிறுவனங்களை ஆதரிக்கும் கொள்கைகளின் விளைவு. மொன்சாண்டோ, சின்ஜென்டா, பேயர், BASF மற்றும் CP குழுமம் இவ்வணிக நிறுவனங்களில் முக்கியமானவை. இவற்றுள் மிக அதிக சக்தி வாய்ந்த மற்றும் மிக அதிக கேடு விளைவிக்க கூடிய நிறுவனம் CP குழுமம் (ஒரு சீன-தாய்லாந்து கூட்டு நிறுவனம்). இது ஒரு விவசாய வணிக நிறுவனம். சந்தையை நிர்ணயிக்கும் சக்தி கொண்ட இதன் தொழில் தாய்லாந்தில் விதைக்கப்படும் ஏரளாமான விதைகள் மற்றும் அவற்றின் மீது தெளிக்கப்படும் வேதி பொருட்கள் உற்பத்தி, நாட்டை போர்வை போல் மூடிக்கொண்டிருக்கும் நெகிழிக் (plastic) கழிவுகள் உற்பத்தி. இது மட்டும் அல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தின் பல பகுதிகளை தன கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு நிறுவனம்.

தாய்லாந்து நாட்டை சுற்றிப்பார்க்கும் எவரும், கண்ணை உறுத்தும் வகையில் எங்கும் நிறைந்திருக்கும் விவசாய வேதி பொருட்களை காணமுடியும். ஒவ்வொரு நகரிலும் தெருவெங்கும், மரங்கள் எங்கும் அலங்கரிக்கும் பூச்சிக்கொல்லி விற்பனை சுவரொட்டிகளும், கடைகளில் தரையில் இருந்து கூரை வரை அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புட்டியில் அடைக்கப்பட்ட நச்சுப்பொருட்களும் காணக்கிடைக்கும். விளை நிலங்களில் தம் பயிர்களுக்கு தம் முதுகு தெளிப்பான்களில் இருந்து நச்சுப்பொருட்களை தெளிக்கும் முகமூடி அணியாத விவசாயிகள், அந்த புகை உண்டாகிய பனிப்படலத்தின் ஊடாக இயல்பாக நடந்து வருவதையும் காண முடியும். ஆசியாவிலேயே தாய்லாந்தில்தான் (சீனாவை விடவும்) அதிகமாக பதிவு செய்யப்பட்ட விவசாய வேதி பொருட்கள் விற்பனை அகங்கள் உள்ளதாக எனக்கு தெரிந்த வேதியியல் வல்லுநர் ஒருவர் தெரிவிக்கிறார். இந்த எண்ணிக்கையோடு கிராமங்கள் தோறும் உள்ள பதிவு செய்யப்படாத நிறுவனங்களை கணக்கில் கொண்டு வந்தால் அது எங்கோ

கவனிப்பிலேயே அதிகமாக விளைச்சல் தரக்கூடிய பயிர்களே மக்களால் விரும்பப்பட்டன. விதை/வேதி இடுபொருட்கள் நிறுவனங்களோ இவற்றுக்கு நேர் எதிரான, முதலீட்டாளரின் லாப நோக்கதை மட்டுமே கருத்தில் கொண்ட, பலவீனமான, தொடர்ச்சியாக வேதி இடுபொருட்கள் இல்லாமல் வளர இயலாத, பயிர்களையே தேர்வு செய்தன. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நன்கு வளர்ந்து திறம்பட இருந்த பாரம்பரிய‌ விவசாயத்தை மீண்டும் அதன் குழந்தை பருவத்திற்கே இட்டுச்சென்றன இந்த சந்தை சார்ந்த நிறுவனங்கள்.

இந்த நடைமுறையினால் ஏற்பட்ட பாதிப்புகளில் ஒரு சில இங்கே கீழே தரப்பட்டுள்ளன:

- ஒரு காலத்தில் ஏரக்குறைய 100 வகை காய்கறிகளை உண்ட தாய் மக்கள் இப்போது 10 வகை காய்கறிகளை மட்டுமே உண்ணுகின்றனர்.

- பசுமை புரட்சிக்கு முன்னர் 20,000 அரிசி வகைகள் இருந்த தாய்லாந்தில் இப்போது வெறும் 200 அரிசி வகைகள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன.

- ஜாஸ்மின் அரிசி என்ற வணிகம் சார்ந்த ஒருபயிர், வெளி நாட்டு சந்தைகளுக்கவே உற்பத்தி செய்யப்பட்டது, இப்போது தாய்லாந்து எங்கும் இதுவே அதிகமாக விளைவிக்கப்படுகிறது.

- ஒரு காலத்தில் நிறைய வகைகளில் கிடைத்த கத்தரிக்காய் இப்போது ஏற்றுமதி சந்தை விரும்பக்கூடிய (குறிப்பாக ஜப்பான்) நீண்ட செம்பழுப்பு வண்ண கத்தரியாக மட்டுமே எஞ்சியுள்ளது. இந்த கத்தறி பயிர் செய்யும் விவசாயிகள், வணிக நிறுவன ஒப்பந்தங்களில் சிக்கிக்கொண்டு அவர்கள் கட்டளையை ஏற்று வேதி இடு பொருட்கள் சார்ந்த கடுமையான பயிர் வளர்ப்பு முறையை கடைபிடிக்க நேரமின்றி ஓய்வென்பதே இல்லது போய்விட்டதால் நண்பர்களை இழந்து வாழ்கின்றனர். இதனால் இந்த கத்தரிக்கு “நட்பற்ற கத்தரி ” என்று பெயராகி விட்டது!.

- இதே கதைதான் நாட்டில் விளைவிக்கப்படும் மற்ற குறுகிய வகை பயிர்களுக்கும்!.

- லாப நோக்கம் மட்டுமே கொண்ட வணிக நிறுவனங்களின் கட்டுப்பாட்டினால், விளை பொருட்களின் சுவையும் சத்தும் முக்கியமற்றவை ஆகி விட்டன.

- தாய் மக்களின் சுகாதாரமும், வேதியியல் சார்பு அதிகரிக்க அதிகரிக்க, மோசமாகிக்கொண்டே வருகிறது. ஆயுள் குறைதல், ஆற்றலின்மை போன்ற எதிர் விளைவுகள் அதிகரித்து வருவதாக பரவலாக கருதப்படுகிறது. உணவினால் உண்டாகக்கூடிய, மற்றவர்களுக்கு தொற்றாத நோய்கள் (உதாரணம் சர்க்கரை நோய் மற்றும் உடல் பெருத்தல் ) அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த செய்திகளை எனக்கு தந்தவர் பன் பன் தற்சார்பு மையத்தை 10 வருடங்களுக்கு முன்னாள் தொடங்கி நடத்தி வரும் திரு ஜோ ஜொண்டாய். அவர் இந்த மையத்தை நாட்டின் அப்போதைய விவசாய இழி நிலைக்கு எதிராகவும், நகர மயமாக்கப்பட்ட, மனிதாபிமானமற்ற, வேற்றுமைப்படுத்தப்பட்ட, ஆதாயத்தை மட்டுமே இலக்காக கொண்ட ஓட்டத்தில் இருந்து தப்பிப்பதற்காகவும் அவர் உருவாக்கினார். இந்த மையம் இப்போது ஏமாற்றமளிக்கும் கடலின் நடுவில் நம்பிக்கை அளிக்கும் தீவாக உரு மாறிக்கொண்டு இருக்கிறது.

- மண்ணால் வீடு கட்டும் ஜோ ஜொண்டாய்

பன் பன் என்பது தாய்லாந்து மொழியில் 1000 வகைகள் என்று பொருள் படும் ஒரு குழு. 15 தாய் மக்கள் மற்றும் பன்னாட்டு மக்களால் இயக்கப்படுவது. இக்குழு ஒரு கை விடப்பட்ட, மேல்மண் சிதைந்த‌, ஒரு தரிசு மலைப்பகுதியை தத்து எடுத்து அதை பசுமை எழில் கொஞ்சும், பல்லுயிர் பெருகி வாழும் ஒரு உயிர்ம சூழலாக மாற்றி இருக்கிறது. இந்த மையம் கீழே குறிப்படப்பட்டுள்ள அற்புதமான குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது:

- ஏராளமான பல் உணவுப்பயிர் தோட்டங்கள், உணவுக்காடுகள் - இவை அளப்பரிய காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் சிறு தானியங்களை நேரடியாக உண்பதற்கும் விதைக்காக சேமிப்பதற்கும் விளைவிக்கின்றன.

- தற்சார்புக்காக (சிறிய அளவு விற்பனைக்காகவும்) இயற்கை முறையில் உண்டாக்கப்பட்ட கோழி முட்டைகள் - 100 கோழிகளில் இருந்து.

- உயிர்ம முறையில், சிறிய அளவில் உற்பத்தி செய்யப்பட்ட உள்ளூர் வகை நீண்ட தண்டுகள் கொண்ட அரிசி வகைகள், சொந்த உணவுத்தேவையை நோக்கி.

- இயற்கை பொருட்களால் ஆன கட்டிடங்கள் - அருகில் கிடைக்கும் பொருட்களை கொண்டு கையினாலேயே கட்டப்பட்டவை

- சூரிய ஆற்றலால் இயங்கும் வெந்நீர் குளியல் வசதிகள்

- எல்லா கழிவுகளையும் மக்க வைத்து உரம் தயாரித்தல்

- உள்ளூரிலேயே வடிவமைக்கப்பட்ட தண்ணீர் வடிகட்டிகள் (கற்கள், மணல் மற்றும் மரக்கரி கொண்டு )

- அருகில் கிடைக்கும் தாவரங்களை கொண்டு துணிகளுக்கு சாயம் ஏற்றுதல்

- தோட்டத்தில் கிடைக்கும் மூலிகைகளை கொண்டு செய்யப்பட்ட இயற்கையான, மக்கக்கூடிய சோப், ஷாம்பூ மற்றும் துணி வெளுக்கும் சலவைப்பொருட்கள்.

- ஒரு சிறிய இயற்கை முறையில் கட்டப்பட்ட கடை, பன் பன் - மையத்திற்குள்ளேயே. அங்கே தயாராகும் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் (உதாரணம் பழக்கூழ்), இயற்கை பொருட்களை கொண்டு செய்யப்பட்ட கை வினை பொருட்கள், மூலிகை மருந்துப்பொருட்கள், களிம்புகள், பல் துலக்கும் பொடி மற்றும் பலவற்றை விற்பதற்காக.

ஆரம்பத்தில் இருந்த, இன்றும் இருக்கும் முக்கிய குறிக்கோள் என்னவென்றால் “திறந்த மகரந்த சேர்கை”யினால் விதைகளை உருவாக்கி சேமித்தல்.

பன் பன் மைய இணைய தளத்தில் இருந்து சில மேற்கோள்கள் இங்கே தரப்படுகின்றன:

” நாங்கள் இந்த மண்ணுக்கு வந்தது விதை பயிர்களை வளர்த்து, விதைகளை சேமித்து அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக. இவ்வாறு விதைகளை சேமித்து அவற்றை உழவர்களின் கையில் கொண்டு சேர்ப்பதன் மூலம் நாம் அவர்களை வலுப்படுதுகின்றோம். மேலும் இது விதைகளின் தன்மையையும் நாம் உண்ணும் உணவின் வகைகளையும் அதிகப்படுத்தும்.

ஒரு விதை மையமாக நம் நோக்கம் அரிதான மற்றும் உள்ளூர் வகை விதைகளை சேர்த்து, அவற்றை பெருக்கி, உயிர்ம விவசாயிகளுக்கும் அவர்கள் சார்ந்த குழுக்களுக்கும் தருவது. நாங்கள் விதைகளை சேமிப்பதற்காக மட்டும் வாங்காமல் அவற்றை பெருக்கவும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் நம் நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் விதை வகைகளை அதிகமாக்குவதற்காகவும் உழைக்கிறோம்

…நாங்கள் விதை சேமிப்பு என்ற கருத்தை உழவர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான அங்கமாக மாற்றவும் உழைக்கிறோம். இதுவே நாம் இழந்த பல்பயிர் வகைகளை மீட்டெடுக்க உதவும் உண்மையான வழி என்று நம்புகிறோம். எங்கள் தோட்டத்தில் நாங்கள் முதலில் விதைக்காகவும், பிறகு எங்கள் தேவைக்காகவும் பிறகு தோட்டத்துக்கு வரும் மக்களின் தேவைக்காகவும் மிஞ்சியதை சந்தைப்படுத்துவதர்காகவும் உற்பத்தி செய்கிறோம்.

மேலதிக விவரங்களுக்கு எங்கள் இணைய தளம் www.punpunthailand.org ஐ அணுகவும்.

தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org