தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நம்மிடையே உள்ள நாயகர்கள் - செம்மல்


இம்மாத நாயகர்கள் பகுதிக்கு நாம் நுழையுமுன் ஒரு சிறு தன்னிலை விளக்கம். நாம் அன்றாடம் பலதரப் பட்ட மக்களைச் சந்திக்கிறோம், வெவ்வேறான அனுபவங்களை பெறுகிறோம். அறிந்தோ அறியாமலோ இந்நிகழ்வுகள் நமக்கு வித்தியாசமான வாழ்க்கைப் பாடங்களை உணர்த்துகின்றன‌. சில மனதிற்குகந்தவை, சில அவ்வேளையில் கசந்தாலும் வாழ்வின் ஒரு புதிய பரிமாணத்தை, கற்றலை நமக்களிப்பவை. சில இனிமையும் கற்றலும் ஒருசேரக் கொண்டவை. இம்மாத நாயகர் வரிசைச் சந்திப்பு மூன்றாம் வகையைச் சார்ந்தது.

இம்முறை இத்தொடரில் நாம் சந்திக்கும் தம்பதிகள், சந்திப்பின் போதும் பின்னரும் நினைத்து நினைத்து வியக்க வைத்த, அன்பும் அறனும் அகத்தே நிறைந்த, அமைதியான இயற்கை வாழ்வு வாழ்பவர்கள்.

ரகு, நிஷா இருவரும் திருச்சி நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். சராசரி நடுத்தர இளைஞர்கள், பொருளாதார உயர்வுக்காக கல்வி கற்பதைப் போன்றே இவர்களும் கல்லூரிப் படிப்பு முடிந்து மென்பொருள், தகவல் தொழில் நுட்பம் தொடர்பான வேலை பெற்று பெரு நகரத்துக்கு இடம் மாறினர். 26ஆம் வயதில் பலரின் கனவான அமெரிக்கா நாட்டுக்கு குடிபெயர்தலும் நடந்தேறியது. தம்பதியரின் இயற்கையான அறிவுக் கூர்மையும், வேலையைத் திறம்படச் செய்யும் ஆர்வமும் அவர்களுக்கு தாம் மேற்கொண்ட பணியில் நல்ல உயர்வைக் கொடுத்தன. மேம்போக்கான கண்ணோட்டத்தில், அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர் நிலையை அடைந்து கொண்டிருந்தது. அமெரிக்காவில் சொந்த வீடும் வாங்கினர், ஒரு ஆண் மகவும் பிறந்தான்.

முழுக் கட்டுரை »

உணவில் ஒளிக்கப்பட்ட‌ உண்மைகள் - பரிதி


[சென்ற இதழ்த் தொடர்ச்சி]

12. உலக உணவு உற்பத்திக்கான தண்ணீரை யார், எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்?

ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடர் சிறு குறு உழவர்களைச் சார்ந்த உணவு வலையம்

நாட்டு எல்லைகளைத் தாண்டிச் செல்லும் மொத்த நீரில் 76% விளைச்சலுக்கும்
அதிலிருந்து பிற பொருள்களை உற்பத்தி செய்வதற்கும் பயன்பட்டது.
(எ.கா. உலகளாவிய சோயா மொச்சை வர்த்தகம் நாட்டிடைத் தண்ணீர்ப்
பயன்பாட்டில் 20%-க்குக் காரணமாக இருக்கிறது.)

கால்நடைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மற்றும் ஆலைப்
பொருள்கள் தொடர்பான உலக வர்த்தகம் தலா 12% தண்ணீர்ப் பயன்பாட்டுக்குக்
காரணமாக இருக்கின்றன.

வீணாக்கப்படும் உணவுப் பண்டங்களின் உற்பத்திக்கும் பக்குவப்படுத்தப்படுத்தலுக்கும்
பயன்படும் தண்ணீர் 900 கோடி மக்களின் வீட்டுப் பயன்பாட்டுக்குப் போதுமானது!

வேதிப் பொருள்களைப் பயன்படுத்தாத வேளாண் முறைகள் நான்கு
மடங்கு குறைவாக நைட்ரேட்களை வெளியிடுகின்றன.

ஐம்பது நாடுகளில் 5 கோடி ஏக்கர் விளைநிலங்களில் நகர்ப்புறக்
கழிவு நீர் பயன்படுத்தப்படுகின்றது.

அவ்வாறு விளைவிக்கப்பட்ட விளைபொருள்கள் சுமார் நூறு
கோடிப் பேருக்கு உணவாகின்றன.

பத்து லட்சம் மக்கள்தொகை உள்ள நகரின் கழிவு நீர் 3750-8750

ஏக்கர் [தமிழகத்தின் பெரும்பாலான நிலங்களைப் போன்ற] வன்பாலை

நிலங்களில் வேளாண்மை செய்வதற்குப் போதுமானது. (எ.கா. உலக

உணவு உற்பத்தியில் 15-20% நகர்ப்புறங்களில் இருந்து கிடைக்கிறது.)

மரக்கறி உணவைக் காட்டிலும் இறைச்சி சார்ந்த உணவு உற்பத்திக்கு ஐந்து
மடங்கு அதிகத் தண்ணீர் தேவைப்படுகிறது.

முழுக் கட்டுரை »

வளர்ச்சியின் மறுபக்கம் - பரிதி


[உள்ளடக்கிய வளர்ச்சி என்று வாயளவில் பேசிக்கொண்டு ஏழைகள் மேலும் ஏழைகளாக வழிவகுக்கிறது தற்போதைய பொருளாதாரக் கொள்கை. வளர்ச்சியின் மறுபக்கத்தை மறவாதிருந்தால் நம் மட்டற்ற நுகர்ச்சிப் பசி சற்று மட்டுப்படும் என்பதால் இவ்விழிப்புணர்வுக் கட்டுரையை வெளியிடுகிறோம் - ஆசிரியர்]

கட்டுரையில் உள்ளவற்றில் அதிகப் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள், அருங்கலைச் சொற்கள், மற்றும் அயல்மொழிப் பெயர்ச் சொற்கள் போன்றவற்றின் ஆங்கில வடிவம் கட்டுரையின் இறுதியில் உள்ளது. மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் பகர அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன - பரிதி (thiru.ramakrishnan@gmail.com)

இந்தியக் குடும்பங்களின் வாழ்நிலை குறித்த கள ஆய்வினை இந்திய அரசு 2011-ஆம் ஆண்டு மேற்கொண்டது. 'குமுகவியல் பொருளாதாரம் மற்றும் சாதிக் கணக்கெடுப்பு' எனப்படும் அந்த ஆய்வு மூன்று பகுதிகளைக் கொண்டது: (அ) ஊர்ப்புறக் கணக்கெடுப்பு, (ஆ) நகர்ப்புறக் கணக்கெடுப்பு, (இ) சாதிவாரிக் கணக்கெடுப்பு. அதில் ஊர்ப்புறக் கணக்கெடுப்புத் தொடர்பான தரவுகளை சூலை 3 அன்று அரசு வெளியிட்டது [பார்க்க: மேற்கோள் 1]. அதன்படி, இந்தியாவில் மொத்தம் உள்ள குடும்பங்கள் 24 கோடியே 39 லட்சம் எனவும் அவற்றில் ஊர்ப்புறக் குடும்பங்களின் எண்ணிக்கை 17 கோடியே 91 லட்சம் எனவும் அறிகிறோம். கீழ்க்கண்ட பதினான்கு அளவைக்கட்டளைகளில் ஒன்று அல்லது

அதற்கு மேற்பட்டவை ஒரு குடும்பத்திற்குப் பொருந்தினால் அந்தக் குடும்பம் இந்தக் கணக்கெடுப்புக்கு அப்பாற்பட்டதெனக் கொள்ளப்படும் என்றும் அத்தகைய குடும்பங்கள் இந்திய ஊர்ப்புறக் குடும்பங்களில் ஏழு கோடியே ஐந்து லட்சம் இருப்பதாகவும் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org