தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


இந்த மாதம் த‌மிழகத்தில் "வெற்றிகரமாக" நடந்தேறிய உலக முதலீட்டாளார் சந்திப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சுமார் இரண்டு லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டை ஈர்த்து அந்நிய நேரடி முதலீட்டில் தமிழகம் முன்வரிசையில் நிற்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு வருடம் 38% வளருவதாக அரசின் இணையதளம் மார்தட்டிக் கொள்கிறது. இந்திய மாநிலங்களில் முதலீட்டாளார்களைக் கவர்வதில் மூன்றாம் இடத்தில் தமிழகம் இருக்கிறது. எல்லாம் நல்ல விஷயம்தான், கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் சற்று உட்சென்று பார்த்தால் இதன் பயனாளிகள் யார்? இதனால் விளையும் நன்மை என்ன? கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தில் மிக அதிக முதலீடு செய்துள்ள 10 நிறுவனங்களின் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. இதில் 4 நிறுவனங்கள் கார் உற்பத்தி செய்பவை. எல்லாமே உற்பத்தியில் ஈடுபடுபவை. கடந்த 10 ஆண்டுகளில் 20,000 கோடி நேரடி அந்நிய முதலீடு செய்து உருவாக்கப்பட்ட வேலைகள் 1 லட்சத்திற்கும் கீழ்தான் என்பதே தாளண்மையின் கணிப்பு. இது குறித்து யாரும் வெளிப்படையான தகவல்களை அளிப்பதோ , பேசுவதோ இல்லை. முதலீட்டின் முக்கிய குறிக்கோளாகப் பறைசாற்றப் படும் வேலை வாய்ப்பு பற்றி எந்தக் கணக்கெடுப்பும் இல்லை

தற்போதைய, (உறுதி செய்யப்பட்டுள்ள, ஒப்பந்தங்கள் அளவில் இருக்கும்) , 2 லட்சம் கோடி முதலீடும் கூட 2 லட்சம் வேலைகளை உருவாக்கக் கூடும் என்றுதான் அரசு கூறுகிறது. இந்நிறுவனங்களின் ஆலைகள் எவ்வளவு விளைநிலங்களை எடுத்துக் கொள்ளும், எவ்வளவு ஆற்றலைத் தின்று தீர்க்கும்.

முழுக் கட்டுரை »

தோரோ பக்கம் - சாட்சி


எனவே தீவிர வேளாண்மையைப் பற்றி நான் கூறக்கூடியது எல்லாம் நான் விதைகளைத் தயாராக வைத்திருந்தேன் என்பது மட்டுமே. விதைகள் நாட்பட நன்றாகும் என்று பலரும் எண்ணுகின்றனர். காலம் நல்ல விதைகளைப் பழுதானவற்றில் இருந்து பிரித்தெடுக்கும் என்பதில் ஐயமில்லை; எனவே நான் இறுதியில் நடும்பொழுது என் ஏமாற்றங்கள் குறைவாக இருக்கும். ஆனால் என் சகமனிதர்களுக்கு நான் கூறுவதெல்லாம், இயன்றவரை சுதந்திரமாகவும் தளைகள் இன்றியும் வாழுங்கள் என்பதுதான். நீங்கள் ஊர்ச் சிறையில் சிறைப்படுவதற்கும், உங்கள் பண்ணையில் சிறைப்படுவதற்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை!

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org