தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

எண்கட்டு வித்தை - ராம்

[கடந்த சில மாதங்களாக ராம் அவர்கள் கிராமிய வாழ்வாதாரங்கள் குறித்து எழுதி வருகிறார். இவர், ஆரோவில்லுடனும், தமிழக அரசுடனும் இணைந்து, Sustainable Livelihood Institute என்ற பெயரில் முழுவதும் தற்சார்பான வாழ்வாதாரப் பயிற்சி மையம் ஒன்றை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளார்]

சென்ற இதழில் ‘எண்கட்டு வித்தை’ எழுதியதைச் சிலர் பாராட்டியுள்ளனர், பலர் இது இன்னமும் பல அரசு துறைகளுக்கும் உண்மைதான் என்று நேராகவே தெரிவித்துள்ளனர். ஆனால் சென்ற மாதம் கட்டுரையை எழுதி முடித்த தருவாயில்தான், இந்தியாவில் எத்தனை தண்டிக்கத்தக்க குற்றங்கள் நிகழ்கின்றன என்பதைக் கணக்கிட்டு வெளிவரும் தேசியக் குற்றப் பதிவு குழுமம் ( National Crime Records Bureau) அறிக்கை வெளியானது. இந்த வருடாந்திர நிகழ்வு சாலை விபத்தில் எவ்வளவு பேர் இற‌க்கின்றனர், தீ விபத்தில் எத்தனை பேர் இற‌க்கின்றனர், எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு பேர் இற‌க்கின்றனர் போன்ற புள்ளி விவரங்களை மட்டுமே வெளியிட்டு வந்தால், இதனை யாரும் பொருட்படுத்த‌மாட்டார்கள். ஒரு நாள் தலைப்புச்செய்திக்குகூட இத்தகைய புள்ளிவிவரங்களை நமது பிரபல ஊடகங்கள் பயன்படுத்தமாட்டா.

மேலும் படிக்க...»

கற்பதும் கசடும் - வழிப்போக்கன்

என்று வாழ்விற்குப் பணத்தின் இன்றியமையாமையை விளக்குகிறாள். தந்தை மகனுக்கு உதவியாய் அவையில் முந்தியிருக்கச் செய்ய வேண்டுமெனில் அவனுக்கு வருவாய்க்கு வழி தேடித் தருவதுதான் அவரின் தலையாய கடமையாகிறது. நவீன வாழ்முறையில் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை உற்பத்தியில் ஈடுபடுவோர் சமூக ஏணியின் கடைப்படிகளில் இருப்பதும், ஊடகம், நாடகம்,அரசியல் போன்ற‌ பேசுவதற்கு மட்டுமே ஊதியம் பெரும் "அறிவுப்பணி" செய்வோர் ஏணியின் மேற்படியில் வைத்துக் கொண்டாடப்படுவதும் எக்கேள்வியும் கேட்கப்படாமல் நடக்கிறது. இல்லாத ஒரு கற்பனை ஏணியின் படிகளில் முண்டியடித்து ஏறுவதே வாழ்வாக மாறிவிட்ட மாந்த இனம், இத்தகைய "அறிவுப்பணி" செய்யத் தம் குழந்தைகளுக்குக் கல்வி என்னும் பயிற்சி அளிக்கிறது. எனவே கல்வியின் நோக்கம் நல்ல வேலை பெற்றுத் தருவதுதான் என்று அனைவருமே ஒப்புக் கொள்கின்றனர். இதனால்தான் "புள்ள குட்டிகளப் படிக்க வெக்கறது" ஒரு பெற்றோரின் மிக முக்கிய கடமையாக இல்வாழ்வில் கருதப் படுகிறது.

மேலும் படிக்க...»

 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி

பனங்காடை

Indian Roller Coracias Benghalensis (Linnaeus)

தோற்றம்

புறா அளவில் இருக்கும். இப் பறவையின் சிறகுகள் நீல‌ நிறத்தில் இருக்கும். உடல் பழுப்பாக இருக்கும். சிறகுகளின் நுனியில் கருப்புக் கோடுகள் இருக்கும். கண்களைச் சுற்றி பவள நிறம் போல் இருக்கும். கழுத்துக்கு அடியில் சாம்பல் நிறக் கோடுகள் அமைந்திருக்கும். இதன் தலை நீல‌ நிற தொப்பி போல இருக்கும். வால் சிறகுகள் நிறத்தில் இருக்கும். ஆண், பெண் ஒரே தோற்ற‌த்தில் இருக்கும்.

மேலும் படிக்க...»

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org