தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நடவுத் திருவிழா - ஜெயக்குமார்


கடந்த இரு இதழ்களாகத் தாளாண்மையில் “பாரம்பரிய நெல் ஒரு பணப்பயிரே” என்ற தலைப்பில் திரு. ஆலங்குடி பெருமாள் அவர்கள் கண்டறிந்த வழியில் 50செ.மீ 50 செ.மீ இடைவெளியில் திருந்திய நெல் சாகுபடி செய்யும் தொழில்நுட்பத்தைப் பற்றி எழுதியிருந்தோம். இம்முறைமையில் இயற்கை வேளாண்மை செய்வதும், அதை எல்லா விவசாயிகளுக்கும் பரப்புரைமை செய்யும் எண்ணத்துடனும், அசோகன், ஸ்ரீராம், மற்றும் பலர் கூடி நண்பர் ஸ்ரீராம் பண்ணையில் 06.09.2015 அன்று நடவுத்திருவிழா ஒன்று நடைபெற்றது. இதில் பெருமாள் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.மிகவும் சிறப்பாக நடைப்பெற்ற இந்த விழாவிற்கு சுமார் 120 விவசாயிகள் மற்றும் மாணவர்கள் வந்து ஆர்வத்துடனும் சிறப்புடனும் விழாவை முடித்துவைத்தார்கள். இந்த விழாவின் நாயகன் திரு ஆலங்குடி பெருமாள் அவர்கள் அங்கு வந்த அனைவருக்கும் பொறுமையாகவும், ஆர்வமாகவும் வழிமுறைகளை சொல்லிக்கொடுத்தார்.

முதலில் பண்ணையின் உரிமையாளரான திரு ஸ்ரீராம் அவருடைய தந்தை மற்றும் அண்ணன் வந்திருந்த அனைத்து விவசாயிகளையும் காலையில் இயற்கை இடுபொருளை கொண்டு கஞ்சிசெய்து பருகச் சொல்லி விருந்தோம்பினார்கள். காலை 10மணிக்கு தொடங்கி விழா மதியம் 2மணிவரை வயல்களிலும், அதன் பிறகு கேள்வி, பதில் நேரகமாகவும் பிரிந்து இருந்தார்கள். அனைவருக்கும் மதிய உணவும் மிகச் சிறப்பாகப் பரிமாறப்பட்டது .

காலை 10மணிக்கு விதைகளை எப்படி விதைக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பெருமாள்அவர்கள் விரிவாக சென்னார்.

முழுக் கட்டுரை »

உழவை வெல்வது எப்படி? - பசுமை வெங்கிடாசலம்


உழவாண்மை பண்ணை - டெல்டா பகுதிக்கு உண்டான தொழில்நுட்பங்கள்

சென்ற ஆறு மாதங்களுக்கு முன் தற்சார்பு இயக்கத்தைச் சேர்ந்த அனந்து, பாலாஜி சங்கர், பாபுஜி , ஜெயக்குமார் ஆகியோர் ஈரோடு மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்துள்ள உழவாண்மை பண்ணைகளை சுற்றிப்பார்க்க வந்திருந்த போது பலவிதமான சந்தேகங்களை முன் வைத்தனர். அவற்றுள் முக்கியமானது "நாங்கள் பார்த்த பண்ணைகள் அனைத்தும் மேடான பகுதியில் அமைந்துள்ளன. ஆனால் எங்கள் பகுதியில் வருடத்தில் பல நாட்கள் தண்ணீர் தேங்கி நிற்கும். இங்கு நீங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை நாங்கள் எப்படி அங்கு பயன்படுத்தமுடியும்?" என்பது. சென்ற மாதம் நான் அவர்கள் பகுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது வருடத்தில் 2 மாதங்கள் அவர்களது வயல்கள் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியாகவும், நீர் வடியும் நிலை மிகவும் மோசமாகவும் இருந்ததை கண்டேன். அந்த வயல்களை ஒட்டியுள்ள சாலைகள் சுமார் 2 முதல் 3 அடி உயரத்தில் அமைந்துள்ளன. அவர்கள் குடியிருக்கும் பகுதியும் 2 முதல் 3 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆக மழை காலத்தில் தேங்கி நிற்கும் நீரின் அளவு இரண்டு அடிக்கு குறைவாக இருப்பதை அறிந்தேன். நமது ஆசிரியருக்கு சொந்தமான பூமியும் அதே அமைப்புள்ளதாக இருந்தது. காரைக்கால் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளின் நிலையும் இவ்வாறே இருக்கக்கண்டேன். ஆக டெல்டா பகுதியின் சூழல் வேறு விதமாகவும் மற்ற மாவட்டங்களில் உள்ள சூழல் வேறு விதமாகவும் அமைந்துள்ளன.

முழுக் கட்டுரை »

பசுமைப் படை - அனந்து


சென்ற கட்டுரையில், உணவுப் பாதுகாப்புப் படை, உடல் உழைப்பையும, அதிக சலிப்பூட்டும் மெய்வருத்தலையும் (drudgery) எவ்வாறு குறைத்து, கூலித் தொழிலாளர்கள் இடம் பெயரா வண்ணம் திறமைகளைப் பாதுகாத்து, ஒரு சரியான மாதிரியையும் இயந்திரத்தையும் கொணர்ந்து விவசாயிக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் (இருவருக்கும்) லாபகரமாக இருக்கும்படி பார்த்து, செயல்படுகிறது என்பதைச் கண்டோம். இவ்வியந்திர மயமாக்கல் ஒரு விதமான பொருந்திய தொழில்நுட்பமே என்று நாம் உணர வேண்டும். ஆலை மயமான இயந்திர மயமாக்கல், கிராமத்து மக்களின் வாழ்வாதாரங்களையும், வேலைவாய்ப்பையும் தட்டிப் பறித்து அவர்களை வேலை தேடி நகரங்களுக்குப் பெயரச் செய்கிறது. கிராமம் மேலும் நலிவுறுகிறது. நம் உணவுப் பாதுகாப்புப் படையோ, பெயரும் கிராம மக்களுக்குத் தான் இருக்குமிடத்திலேயே வேலை வாய்ப்புக்களை உருவாக்கி அவர்கள் நகரங்களில் பெறக் கூடிய ஊதியம் கிராமத்திலேயே கிடைக்க வழிவகுக்கிறது. மேலும் பஞ்சாயத்து மற்றும் வேளாண் வங்கிகளே இந்த இயந்திரங்களை இனாமாகவே ஏற்பாடு செய்து அவர்களுக்கு பெரிதும் உதவுகின்றன‌.

வேலையாட்கள் மிகவும் பற்றாக்குறையான கேரள‌ மாநிலத்தில் பெருமளவு வளமான விளை நிலங்கள் உணவு உற்பத்திக்குப் பயன்படாமல், தென்னை, காப்பி, பாக்கு, ரப்பர், முந்திரி, மிளகு போன்ற பணப்பயிர்கள் விளைச்சலுக்குப் பயன்படுவது உணவு உற்பத்தி செய்ய இயலாமையினால்தான். இது விவசாயச் சிக்கல‌ன்றி ஒரு சமூகச் சிக்கலாகவும் மாறி விட்டது. கேரளம் தன் பெரும்பகுதி உணவிற்குப் பிற மாநிலங்களையே சார்ந்துள்ளது. எனவே அம்மாநிலத்தில் இவ்வுணவுப் பாதுகாப்புப் படை ஒரு மிகப் பொருத்தமான , இன்றியமையாத தொழில்நுட்பப் புரட்சி என்றே கூற வேண்டும். இதை அப்படியே நம் தமிழ்நாட்டுக்குச் செலுத்த இயலாது. எனினும், விவசாய வேலை என்பது ஒரு திட்டமிடப்பட்ட உற்பத்தி முறைமையாக மாற வேண்டும், விவசாயத் தொழிலாளர்களும், விவசாயிகளும் இணைந்து, இசைந்து அண்மை உற்பத்தியில் ஈடுபட வேண்டும்.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org