தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி


பனங்காடை

Indian Roller Coracias Benghalensis (Linnaeus)

தோற்றம்

புறா அளவில் இருக்கும். இப் பறவையின் சிறகுகள் நீல‌ நிறத்தில் இருக்கும். உடல் பழுப்பாக இருக்கும். சிறகுகளின் நுனியில் கருப்புக் கோடுகள் இருக்கும். கண்களைச் சுற்றி பவள நிறம் போல் இருக்கும். கழுத்துக்கு அடியில் சாம்பல் நிறக் கோடுகள் அமைந்திருக்கும். இதன் தலை நீல‌ நிற தொப்பி போல இருக்கும். வால் சிறகுகள் நிறத்தில் இருக்கும். ஆண், பெண் ஒரே தோற்ற‌த்தில் இருக்கும்.

காணும் இடம்

இந்தியா முழுவதும் இப்பறவையைக் காணலாம். வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை,மியான்மர் ஆகிய இடங்களில் காணலாம்.இந்தியாவில் இவை வயல்களில், புல் வெளிகளில் மற்றும் சிறிய காடுகளில் காணலாம். பெரும்பாலும் இவை சாலை ஓர மின் கம்பங்களில் காணலாம்.

உணவு

இவை விவசாயின் நண்பன் என்றே கூறலாம். கதிரை வெட்டும் வெட்டுக்கிளி,பூவை தின்னும் பூச்சிகள், நத்தை, பல்லி, தவளை, நண்டு ஆகியவற்றை உண்ணும்.

இனப் பெருக்கம்

பங்குனி முதல் ஆனி வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடும். மரங்கொத்தி விட்டுச் சென்ற வங்கு, மரத்தில் உள்ள சிறிய சிறிய பொந்துகள் ஆகியவற்றில் தன் கூட்டை கட்டும். 3 முதல் 5 வரை முட்டைகள் இடும். 17 முதல் 19 நாட்களில் அடைகாக்கும். 1மாதத்திற்குள் குஞ்சுகள் முழுமையாக வளர்ந்து பறந்து விடும்.

குறிப்பு

1. இது பறக்கும் போது தன் பெண் இனத்தை ஈர்க்க பல சாகசங்களை செய்யும்; வானில் குட்டிக்கரண‌ம் அடிக்கும்; உருண்டு உருண்டு பறக்கும், தன்னுடைய சிறகுகளில் உள்ள நிறத்தை மிக அழ‌காக காண்பிக்கும். அதனால் தான் இதற்கு ஆங்கிலத்தில் Roller என்று கூறுவரோ?

2. பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தாலும் இதன் குரல் கேட்க சகிக்காது. காக்கையை விட மோச‌மாக இருக்கும்.

3. இதை விஷ்ணுவின் பறவை என்றும் தசரா காலங்களில் பறக்க விடுவர். நீல‌கண்டன் என்று வடஇந்தியர்கள் அழைப்பார்கள்.

4. ஆந்திரா, பீகார், ஒரிசா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேசிய பறவையாக இது அறிவிக்கப்பட்டுள்ளது

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org